முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு 2 நாள் காவல்
பதிவு : ஜூலை 02, 2021, 06:54 PM
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டனை இரண்டு நாள் காவலில் வைத்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டனை இரண்டு நாள் காவலில் வைத்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

நடிகை ஒருவர் அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அடையாறு மகளிர் போலீசார் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி நிர்மல் குமார் முன் விசாரணைக்கு வந்த‌து. அப்போது போலீசார் சார்பில் மணிகண்டனை மதுரை அழைத்துச் சென்று விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மணிகண்டன் தரப்பு வழக்கறிஞர், அரசியல் பழிவாங்கும் நோக்கில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மணிகண்டனை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

மேலும், மணிகண்டனை மதுரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தவும் காவல்துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இதேபோல் மணிகண்டனின் ஜாமின் மனுவை ஜூலை 5-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

தடுப்பூசி செலுத்த குவிந்த மக்கள் - தடுப்பூசி மையத்தில் கைகலப்பு

கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் ஏற்பட்ட மோதலில் பலர் காயம் அடைந்தனர்.

30 views

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் - தவறி விழுந்த பெண்ணை மீட்ட காவலர்

தெலங்கானாவில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண்ணை ரயில்வே காவலர் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார்.

27 views

பிற செய்திகள்

தந்தி டிவி செய்தி எதிரொலி : ஆறு மாதங்களாக கிடப்பில் போட்ட பணி - இருபது நாட்களில் நிறைவு

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள நாராயணன் நகர் பகுதியில் கழிவு நீர் செல்லும் பாதையின் பராமரிப்பு பணியை ஆறு மாதங்களாக கிடப்பில் போட்டிருந்தததாக கூறப்படுகிறது

9 views

"டெங்கு பரவலை தடுக்க நடவடிக்கை தேவை"- தமிழகம், புதுச்சேரி அரசுகளுக்கு உத்தரவு

டெங்கு பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழகம் மற்றும் புதுசேரி அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

11 views

ஏழுமலையான் கோவிலில் கட்டுப்பாடுகள் தீவிரம்: முகக்கவசம் இல்லையென்றால் அபராதம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகக்கவசம் அணியவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடப்படுள்ளது.

13 views

"புதுக்கோட்டையில் தேவைப்பட்டால் மீண்டும் மினி ஊரடங்கு" - ஆட்சியர் கவிதா ராமு பேட்டி | Pudukkottai

புதுக்கோட்டையில் தேவைப்பட்டால் மீண்டும் மினி ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்

24 views

மருத்துவரிடம் மோசடி கும்பல் கைவரிசை - வங்கி கணக்கில் இருந்து ரூ.2.40 லட்சம் அபேஸ்

சென்னையில் மருத்துவரின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை நூதனமான முறையில் திருடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

20 views

இன்று தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழா - கருணாநிதியின் உருவப்படம் இன்று திறப்பு : விழாவில் பங்கேற்கிறார் குடியரசு தலைவர்

5 நாள் பயணமாக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தனிவிமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

34 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.