ஐஐடி வளாகத்தில் எரிந்த நிலையில் சடலம் - உயிரிழந்த நபரின் தந்தை இஸ்ரோ விஞ்ஞானி
பதிவு : ஜூலை 02, 2021, 04:40 PM
சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் தீயில் கருகிய நிலையில், மாணவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் யார்? சம்பவத்தின் பின்னணி என்ன? பார்க்கலாம்...
இந்தியாவின் முக்கிய கல்வி நிறுவனங்களில் ஒன்று, சென்னை ஐ.ஐ.டி. இதனால், இங்கு தமிழ்நாட்டு மாணவர்கள் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய அண்டை மாநிலங்கள் மற்றும் வட மாநில மாணவ, மாணவியரும் படித்து வருகின்றனர். சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள ஹாக்கி மைதானத்திற்கு விளையாட்டு அதிகாரி ராஜூ நேற்று விளையாட்டு வீரர்களுடன் சென்றுள்ளார். அங்கு தீயில் கருகிய நிலையில், சடலம் ஒன்று இருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைத்தனர்.தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற கோட்டூர்புரம் காவல்நிலைய போலீசார், சடலத்தை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடலத்தின் அருகே கிடந்த வாட்டர் பாட்டிலை பார்த்தபோது, அதில்தான் பெட்ரோல் கொண்டு வந்தது தெரியவந்தது.  அந்த நபர் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொண்டிருக்கலாம் என கோட்டூர்புரம் போலீசார் கருதுகின்றனர்.  கருகிய நிலையில் விளையாட்டு மைதானத்தில் கிடந்த சடலம் யார் என்பது குறித்த விசாரணையில் போலீசார் இறங்கினர். இறந்து கிடந்த நபர், கேரள மாநிலத்தை சேர்ந்த உன்னிக்கிருஷ்ணன் என்பதும், அவர் வேளச்சேரி பகுதியில் தங்கி இருந்து ஐ.ஐ.டி-யில் புராஜெக்ட் அசோசியேட்டாக பணிபுரிந்து வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. கேரளாவில் பி-டெக் படிப்பை முடித்த உன்னி கிருஷ்ணன், கடந்த ஏப்ரல் மாதம் சென்னைக்கு வந்து ஐ.ஐ.டி மாணவர்களுக்கு புராஜெக்ட் அசோசியேட்டாக சேர்ந்துள்ளார்.  
வேளச்சேரியில் ஒரு வீட்டில் மூன்று மாணவர்களுடன் உன்னி கிருஷ்ணன் தங்கியிருந்து தனது பணியை செய்து வந்துள்ளார். அந்த வீட்டிற்கு போலீசார் சென்று சோதனை செய்தபோது, கடிதம் ஒன்றை  கண்டெடுத்தனர். தொடர்  மன அழுத்தத்தால், தற்கொலை முடிவை எடுத்ததாக உன்னி கிருஷ்ணன் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார். உன்னிக்கிருஷ்ணனுக்கு என்ன பிரச்சினை, அவர் என்ன பகிர்ந்துகொண்டார், எப்படிப்பட்ட மனநிலையில் இருந்தார் போன்றவை குறித்து அவருடன் தங்கியிருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த உன்னிக்கிருஷ்ணனின் தந்தை ரகு இஸ்ரோ நிறுவனத்தில் விஞ்ஞானியாக பணிபுரிந்து வருவது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. உன்னிக்கிருஷ்ணனின் குடும்பத்தினரிடமும் போலீசார் விசாரணை நடத்தி, தற்கொலைக்கான காரணத்தை அறியும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை ஐ.ஐ.டி-யில் சாதி பாகுபாடு நிலவுவதாக கடந்த காலங்களில்  எழுந்த குற்றச்சாட்டுகளாலும், அவ்வப்போது நிகழும் தற்கொலை சம்பவங்களாலும் சர்ச்சை எழுந்த நிலையில், உன்னிக்கிருஷ்ணனின் மரணம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

224 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

190 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

121 views

பிற செய்திகள்

கும்பாபிஷேகம் செய்யப்படாத கோவில்கள் "விரைவில் குடமுழுக்கு செய்யப்படும்" - அமைச்சர் சேகர்பாபு

கோவில் நிலங்களைத் தெரியாமல் கிரயம் செய்து வைத்திருந்தாலும் தவறுதான் என்று அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

9 views

வடிவேலு பட பாணியில் நிஜ சம்பவம் - நண்பனை அடகு வைத்துவிட்டு திருட்டு

வடிவேலு பட பாணியில் நண்பனை அடமானம் வைத்து விட்டு இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற சம்பவம் நாமக்கல் அருகே அரங்கேறி இருக்கிறது....

10 views

ஆடி முதல் வெள்ளியையொட்டி தமிழகத்தின் பல்வேறு அம்மன் கோயில்களில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்

ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக் கிழமையில் அம்மன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

27 views

அதிமுக 28-ந்தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் வரும் 28 ம் தேதி அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெறும் என்று, அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி அறிவித்து உள்ளனர்.

22 views

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 67 லட்சத்திற்கும் அதிகமானோர் பதிவு செய்து அரசு வேலைக்காக காத்திருப்பு

தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அரசு வேலைக்காக 67 லட்சத்திற்கும் அதிகமானோர் காத்திருப்பதாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

3243 views

புதிய துணைவேந்தர்கள் நியமனம் - குடியரசு தலைவர் உத்தரவு

12 மத்திய பல்கலைக்கழகங்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் புதிய துணைவேந்தர்களை நியமனம் செய்துள்ளார்.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.