11 மாவட்டங்களில் தளர்வுகள் வழங்க வாய்ப்பு?
பதிவு : ஜூலை 02, 2021, 04:16 PM
தமிழகம் முழுவதும் வரும் ஜூலை 5ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட11 மாவட்டங்களுக்கு தளர்வுகள் வழங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஊரடங்கை நீட்டிப்பது, கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக,  சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த நிலையில், ஏற்கனவே தமிழகத்தில், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட11 மாவட்டங்களில், சில தளர்வுகள் வழங்க வாய்ப்பு இருப்பதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது. பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் கடைகள் செயல்படும் நேரம் அதிகரித்து அனுமதிக்கப்படும் என்றும்,11 மாவட்டங்களில் பொது போக்குவரத்து சேவை தொடங்க உள்ளது குறித்தும் முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.திருமணம் மற்றும் இறப்பு நிகழ்வுகளில், உறவினர்கள் பங்கேற்பதில் உள்ள எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும்,தொற்று குறைந்துள்ள 11 மாவட்டங்களில் மட்டும் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.பாதிப்பு குறைவாக உள்ள 3-ம் வகை மாவட்டங்களில் ஹோட்டல்கள்களில் 50% இருக்கைகளில் பொதுமக்கள் அமர்ந்து உணவு சாப்பிடவும்,அனைத்து மாவட்டங்களிலும் கடைகள் செயல்படும் நேரம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.தமிழகத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பான அறிவிப்பு இன்று மாலை அல்லது நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

303 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

244 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

149 views

பிற செய்திகள்

இமாச்சலபிரதேசத்தில் நிலச்சரிவு.. நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலி

இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட பெரிய அளவிலான நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

22 views

பொறியியல் சேர்க்கை - அட்டவணை வெளீயீடு "நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்"

பொறியியல் சேர்க்கை - அட்டவணை வெளீயீடு "நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்"

24 views

நாளை பிரதமரை சந்திக்க டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி

நாளை பிரதமரை சந்திக்க டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி

24 views

ரூ.21 செலவில் 120 கி.மீ பயணிக்கும் கார்..! - தமிழரின் அசத்தல் கண்டுபிடிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் குறைந்த செலவில் பேட்டரியில் இயங்கும் காரை வடிவமைத்து பொறியாளர் ஒருவர் கவனத்தை ஈர்த்துள்ளார்.

32 views

டார்லிங் பர்னிச்சர் 100வது கிளை - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திறந்து வைத்தார்

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் டார்லிங் பர்னிச்சர் கடையின் 100ஆவது கிளை திருவாரூரில் திறக்கப்பட்டுள்ளது.

19 views

தமிழகத்தில் 2 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் 2 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.