தீபாவளி விருந்தாக ரஜினியின் 'அண்ணாத்த'- நவம்பர் 4ல் ரிலீஸ் - படக்குழு அறிவிப்பு
பதிவு : ஜூலை 02, 2021, 11:54 AM
மாற்றம் : ஜூலை 02, 2021, 12:05 PM
ரஜினிகாந்த்தின் அண்ணாத்த திரைப்படம் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.
ரஜினிகாந்த்தின் அண்ணாத்த திரைப்படம் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது..அடுத்து எந்த படத்தில் நடிக்க போகிறார் என்பது தொடங்கி, அவரது படம் ரிலீசாகும் வரை ரஜினிகாந்த் படம் சார்ந்து எந்த செய்தி வந்தாலும் அது ஹாட் நியூஸ் தான்.. அந்த வகையில் அண்ணாத்த படத்தின் ரிலீஸ் அப்டேட்டை கொடுத்து அமர்க்களப்படுத்தியுள்ளது படக்குழு...பேட்ட படத்தில் பேட்ட வேலனாக மாஸ் காட்டி ரசிகர்களை கொண்டாட வைத்தார் ரஜினிகாந்த். ஆனால் அடுத்து வந்த தர்பார் திரைப்படம்  ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது.இதையடுத்து 2019ஆம் ஆண்டு சிறுத்தை சிவாவுடன் இணைந்து அண்ணாத்த படத்தில் நடிக்க தொடங்கினார் ரஜினிகாந்த். 2020ம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பு தொடங்க, கொரோனா முதலாம் அலையால் படப்பிடிப்பு தாமதமானது. பின்னர் சட்டமன்ற தேர்தல், ரஜினிகாந்த்திற்கு உடல்நல பாதிப்பு, கொரோனா இரண்டாம் அலை, படக்குழுவினருக்கு தொற்று என பல தடங்கல்களை கடந்து அண்ணாத்த படமாக்கப்பட்டுவிட்டது. பணிகள் மட்டுமே மீதமுள்ள நிலையில், படம் தீபாவளி விருந்தாக நவம்பர் 4ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்படும் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் விரைவில் வெளியிடப்படும் எனவும் அறிவித்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது படக்குழு...அறிவிப்புகள் ஒருபக்கம் இருந்தாலும், எதிர்பார்த்தப்படி நவம்பர் 4ம் தேதி படம் திரைக்கு வர, கொரோனா பெருந்தொற்று கருணை காட்ட வேண்டும் என்பதே நிதர்சனம்...


தொடர்புடைய செய்திகள்

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் - தவறி விழுந்த பெண்ணை மீட்ட காவலர்

தெலங்கானாவில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண்ணை ரயில்வே காவலர் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார்.

56 views

தடுப்பூசி செலுத்த குவிந்த மக்கள் - தடுப்பூசி மையத்தில் கைகலப்பு

கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் ஏற்பட்ட மோதலில் பலர் காயம் அடைந்தனர்.

41 views

பிற செய்திகள்

கே.எஸ்.ரவிக்குமார் நடித்து தயாரிக்கும் "கூகுள் குட்டப்பா" - ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகிறது

பிரபல இயக்குனரான கே. எஸ் ரவிக்குமார், நடித்தும் தயாரித்தும் வரும் கூகுள் குட்டப்பா என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.

21 views

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் "பூமிகா" - நேரடியாக தொலைக்காட்சியில் வெளியீடு

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள "பூமிகா" என்னும் திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாக உள்ளது.

11 views

"நாங்க வேற மாரி...“ அஜித்தின் "வலிமை" பட பாடல் வெளியீடு!

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள வலிமை படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில், 'நாங்க வேற மாரி' எனத் தொடங்கும் இந்த பாடலை, இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதி உள்ளார்.

83 views

'வலிமை' முதல் பாடல் வெளியீடு எப்போது? - இன்று இரவு 7 மணிக்கு அறிவிப்பு

வலிமை படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

18 views

ஹாலிவுட் நடிகர் டெர்ரி க்ரூஸ் - Walk of Fame அரங்கில் நட்சத்திரம் பதிப்பு

பிரபல ஹாலிவுட் நடிகர் டெர்ரி க்ரூஸ்சுக்கு, Walk of Fame அரங்கில் நட்சத்திர அந்தஸ்து கிடைக்கப் பெற்றுள்ளது.

7 views

மகேஷ் பாபுவின் புதிய திரைப்படம் - "சர்க்கார் வாரி பாட்டா" : 2022 பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிப்பு

மகேஷ் பாபு நடித்து வரும் சர்க்கார் வாரி பாட்டா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

35 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.