சென்னைக்கு காவிரிநீர் கொண்டு வரும் திட்டம் - அமைச்சர் அறிவிப்பும்.. எதிர்ப்பும்..
பதிவு : ஜூலை 02, 2021, 09:42 AM
காவிரி ஆற்றில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார். இதற்கு துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவிக்கும் கருத்துகள் என்ன? தற்போது பார்க்கலாம்
தமிழ்நாட்டின் உயிர்நாடியாக பாய்ந்து ஓடும் காவிரி ஆற்றுடன் கோதாவரி ஆற்றை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது தமிழக அரசு..
காவிரி நீரை தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு கொண்டு செல்ல முயற்சிகள் நடந்து வரும் சூழலில், காவிரி உபரி நீரை சென்னைக்கு கொண்டு வர திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு அண்மையில் அறிவித்துள்ளார் அமைச்சர் அறிவிப்பு பேசுபொருளான நிலையில், இதுதொடர்பாக துறைசார்ந்த நிபுணர்கள் பல்வேறு கருத்துகளை முன்வைத்துள்ளனர். சென்னையில் ஆண்டுக்கு சராசரியாக 1,350 மில்லி மீட்டர் மழை பொழியும் போது, காவிரியில் இருந்து தண்ணீர் கொண்டு வருவது என்ற திட்டம் தேவை இல்லாதது என கூறுகிறார் நீரியியல் நிபுணர் ஜனகராஜன்.சென்னை மாநகரில் 4100 நீர்நிலைகள் உள்ளதாகவும், இவற்றை முறையாக பராமரித்தால் 100 டிஎம்சி அளவிற்கு தண்ணீரைச் சேமிக்கலாம் எனக்கூறும் ஜனகராஜன், ஒரு முறை சேமிக்கப்படும் தண்ணீரை நான்கு ஆண்டுகளுக்கு மழை பெய்யாமல் இருந்தால் கூட பயன்படுத்தலாம் என விளக்குகிறார்.சென்னையில் உள்ள நீர் நிலைகளை மேம்படுத்துவதோடு, நீர்நிலைகளை ஒரு துறையின் கீழ் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என வலியுறுத்துகிறார் எக்ஸ்னோரா அமைப்பு தலைவர் செந்தூர் பாரி.10 ஆண்டுகளுக்கு முன்னரே அறிவிக்கப்பட்ட திட்டம் என அமைச்சர் கே.என். நேரு கூறினாலும், சென்னைக்கு காவிரி நீரை கொண்டு வருவதில் பல சிக்கல்கள் உள்ளதாக நீரியியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

285 views

கோயில் நிலங்களை அரசு மீட்டெடுக்கும் - யார் ஆக்கிரமித்து இருந்தாலும் நடவடிக்கை - அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டம்

சென்னை சேத்துப்பட்டில் 70 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட அம்பேத்கார் விளையாட்டு திடலை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் சேகர்பாபு மற்றும் திமுக எம்.பி. தயாநிதி மாறன் ஆகியோர் திறந்து வைத்து விளையாட்டு வீரர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

40 views

தடுப்பூசி செலுத்த குவிந்த மக்கள் - தடுப்பூசி மையத்தில் கைகலப்பு

கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் ஏற்பட்ட மோதலில் பலர் காயம் அடைந்தனர்.

30 views

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் - தவறி விழுந்த பெண்ணை மீட்ட காவலர்

தெலங்கானாவில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண்ணை ரயில்வே காவலர் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார்.

27 views

பிற செய்திகள்

தந்தி டிவி செய்தி எதிரொலி : ஆறு மாதங்களாக கிடப்பில் போட்ட பணி - இருபது நாட்களில் நிறைவு

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள நாராயணன் நகர் பகுதியில் கழிவு நீர் செல்லும் பாதையின் பராமரிப்பு பணியை ஆறு மாதங்களாக கிடப்பில் போட்டிருந்தததாக கூறப்படுகிறது

1 views

"டெங்கு பரவலை தடுக்க நடவடிக்கை தேவை"- தமிழகம், புதுச்சேரி அரசுகளுக்கு உத்தரவு

டெங்கு பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழகம் மற்றும் புதுசேரி அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

9 views

ஏழுமலையான் கோவிலில் கட்டுப்பாடுகள் தீவிரம்: முகக்கவசம் இல்லையென்றால் அபராதம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகக்கவசம் அணியவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடப்படுள்ளது.

10 views

"புதுக்கோட்டையில் தேவைப்பட்டால் மீண்டும் மினி ஊரடங்கு" - ஆட்சியர் கவிதா ராமு பேட்டி | Pudukkottai

புதுக்கோட்டையில் தேவைப்பட்டால் மீண்டும் மினி ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்

23 views

மருத்துவரிடம் மோசடி கும்பல் கைவரிசை - வங்கி கணக்கில் இருந்து ரூ.2.40 லட்சம் அபேஸ்

சென்னையில் மருத்துவரின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை நூதனமான முறையில் திருடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

20 views

இன்று தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழா - கருணாநிதியின் உருவப்படம் இன்று திறப்பு : விழாவில் பங்கேற்கிறார் குடியரசு தலைவர்

5 நாள் பயணமாக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தனிவிமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

34 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.