தேசிய மருத்துவர் தினம் - பிதான் சந்திர ராய், யார்?
பதிவு : ஜூலை 01, 2021, 05:07 PM
டாக்டர் பிதான் சந்திர ராயின் நினைவாக இந்தியாவில் இன்று தேசிய மருத்துவர் தினம் கொண்டாடப்படும் நிலையில், அவர் யார் என்பதை பார்க்கலாம்...
உலகம் முழுவதும் வெவ்வேறு நாட்களில் மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படும் நிலையில், இந்தியாவில் ஜூலை 1ஆம் தேதி தேசிய மருத்துவர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.மகாத்மா காந்தியின் மருத்துவராகவும், மேற்கு வங்கத்தின் 2வது முதலமைச்சராகவும் பதவி வகித்து, சர்வதேச புகழ்பெற்ற மருத்துவராக விளங்கிய டாக்டர் பிதான் சந்திர ராயின் நினைவாக தேசிய மருத்துவர் தினம் கொண்டாடப்படுகிறது.
பீகார் மாநிலம் பாட்னாவில், 1882ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி பிறந்த பிதான் சந்திர ராய், கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில், மருத்துவம் பயின்றார்.ஆனால், பார்த்தலோமியோ மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பித்த போது, நிற வேறுபாட்டால் புறக்கணிக்கப்பட்ட பிதான் சந்திர ராய்க்கு, அவரது முப்பதாவது முயற்சியில் அனுமதி கிடைத்தது.
ஒரே சமயத்தில் மருந்தியல் மற்றும் அறுவை சிகிச்சை மருத்துவத்திற்கான எம்.ஆர்.சி.பி. மற்றும் எம்.ஆர்.சி.எஸ். ஆகிய படிப்புகளை, இரண்டு ஆண்டுகள் மூன்று மாதங்களில் படித்து சாதனை படைத்தார்.லண்டனில் இருந்து திரும்பிய பிறகு, கொல்கத்தா கல்லூரியில் பணியாற்றியபடி, தனது மருத்துவ சேவையைத் துவங்கினார்.தனது அரசியல் பிரவேசத்தைத் துவங்கும் முன்பு, நாட்டு மக்கள் நல்ல உடல் மற்றும் மன நலத்துடன் இருந்தால் தான், சுதந்திர போராட்டத்தில் பங்கேற்க முடியும் என்று தீவிரமாக நம்பினார்.மக்களின் உடல் நலத்தைப் பேண, ஜடவ்பூர் டிபி மருத்துவமனை, கமலா நேரு நினைவு மருத்துவமனை, உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளையும் சேவை மையங்களையும் உருவாக்கினார்.பிதான் சந்திர ராயின் சாதனைகளைப் பாராட்டி 1961ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதும் வழங்கப்பட்டது.சிறந்த மருத்துவராகவும், விடுதலை இயக்க போராளியாகவும் புகழ் பெற்ற பிதான் சந்திர ராய் 1962ஆம் ஆண்டு, ஜூலை 1ஆம் தேதி தனது 80வது பிறந்த நாள் அன்றே இயற்கை எய்தினார்.தான் வசித்த வீட்டை ஏழைகளுக்கு மருத்துவமனை கட்ட தானமாய் வழங்கி, இறந்தும் தனது சேவையை ஆற்றினார்.பிதான் சந்திர ராய் நினைவைப் போற்றும் விதமாகக் கொண்டாடப்படும் இந்த தேசிய மருத்துவர் தினத்தில், சீரிய நோக்கத்தோடு பாடுபடும் மருத்துவர்களின் சேவையைப் போற்றுவோம்.

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

285 views

கோயில் நிலங்களை அரசு மீட்டெடுக்கும் - யார் ஆக்கிரமித்து இருந்தாலும் நடவடிக்கை - அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டம்

சென்னை சேத்துப்பட்டில் 70 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட அம்பேத்கார் விளையாட்டு திடலை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் சேகர்பாபு மற்றும் திமுக எம்.பி. தயாநிதி மாறன் ஆகியோர் திறந்து வைத்து விளையாட்டு வீரர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

40 views

தடுப்பூசி செலுத்த குவிந்த மக்கள் - தடுப்பூசி மையத்தில் கைகலப்பு

கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் ஏற்பட்ட மோதலில் பலர் காயம் அடைந்தனர்.

30 views

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் - தவறி விழுந்த பெண்ணை மீட்ட காவலர்

தெலங்கானாவில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண்ணை ரயில்வே காவலர் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார்.

27 views

பிற செய்திகள்

மாநிலங்களவையில் கூச்சல் - மசோதாவை கிழித்து உறுப்பினர்கள் போராட்டம்

எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

8 views

"பெகாசஸ் குறித்து விவாதம் வேண்டும்" - எதிர்கட்சியினரின் அமளியால் மாநிலங்களவை முடக்கம்

மாநிலங்களவை தொடங்கியதும் விவசாய சட்டம், பெகாசஸ் குறித்து விவாதிக்க நேரம் கேட்டு எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை இன்றும் ஒத்தி வைக்கப்பட்டது.

8 views

ஒலிம்பிக்கில் 2வது முறையாக வெண்கலம் வென்ற பிவி சிந்துவிற்கு மக்களவையில் வாழ்த்து

ஒலிம்பிக்கில் 2வது முறையாக வெண்கலம் வென்ற பிவி சிந்துவிற்கு வாழ்த்து தெரிவித்து தொடங்கிய மக்களவை எதிர்கட்சியினரின் அமளியால் முடங்கியது.

7 views

குழந்தைகள் இருந்தால் மாதம் ரூ.2000 - கேரள கிறிஸ்தவ சபை அறிவிப்பு

உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக நான்கிற்கு மேல் குழந்தைகள் உள்ள பெற்றோருக்கு மாதம் 2000 ரூபாய் வழப்படும் என கேரள கிறிஸ்தவ சபை அறிவித்துள்ளது.

10 views

"நாடாளுமன்ற முடக்கம் - மத்திய அரசே பொறுப்பு": மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர்

நாடாளுமன்றம் செயல்படாமல் முடங்கினால் அதற்கு மத்திய அரசு தான் பொறுப்பாகும் என்று மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தெரிவித்துள்ளார்.

7 views

"கல்லெறிந்தால் பாஸ்போர்ட் கிடையாது" - இளைஞர்கள் வன்முறையில் ஈடுபடுவதாக தகவல்

ராணுவத்தினர் மீது கல்லெறிதல் உள்ளிட்ட சட்ட ஒழுங்கு நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு பாஸ்போர்ட் மற்றும் விசா வழங்கப்படாது என்று ஜம்மு காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.