ஆன்லைன் கேம் - அடிமையாகும் மாணவர்கள்?
பதிவு : ஜூலை 01, 2021, 02:47 PM
ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு அடிமையாகாமல் இருப்பதை மத்திய, மாநில அரசுகள் தான் தடுக்க முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆன்லைன் வகுப்புகளுக்கு பயன்படுத்தப்படும் செல்போன், கணினி, மடிக்கணினி ஆகியவற்றில் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் விளையாட்டுக்களை தடை செய்ய கோரி மார்ட்டின் ஜெயக்குமார் என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆன்லைன் விளையாட்டுகளில் உள்ள கதாப்பாத்திரங்களாக  மாணவர்கள் மாறிவிடுவதுடன், வன்முறை எண்ணங்களும் ஏற்படுவதாக வாதிட்டார்.ஆன்லைன் விளையாடுகளில் இருந்து மாணவர்களை பாதுகாப்பதற்கான தகுந்த நடவடிக்கையை எடுக்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டுமென வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார்.அப்போது, அதிக அளவில் மொபைல் மற்றும் கணினி பயன்படுத்தும் மாணவர்கள், அதிகப்படியான கோப மனநிலைக்கும், தற்கொலை முயற்சிக்கும்  ஆளாவதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு மாணவர்கள் அடிமையாகாமல் இருப்பதை அரசுகள் தான் தடுக்க முடியும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.பெற்றோர் மற்றும் பெரியோரிடம் கூட குழந்தைகள் பேசுவது குறைந்து வருவதாக கவலை தெரிவித்த நீதிபதிகள், தங்கள் குழந்தைகளுடன் பெற்றோர் நேரத்தை செலவழிக்க வேண்டும் என அறிவுறுத்தினர். இந்த வழக்கு குறித்து மத்திய - மாநில அரசுகள் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் - தவறி விழுந்த பெண்ணை மீட்ட காவலர்

தெலங்கானாவில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண்ணை ரயில்வே காவலர் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார்.

55 views

தடுப்பூசி செலுத்த குவிந்த மக்கள் - தடுப்பூசி மையத்தில் கைகலப்பு

கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் ஏற்பட்ட மோதலில் பலர் காயம் அடைந்தனர்.

41 views

பிற செய்திகள்

13ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் - நிதியமைச்சர் பி.டி.ஆர் தாக்கல் செய்கிறார்

தமிழக பட்ஜெட் வரும் 13ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

19 views

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கள் - "தடை செய்ய புதிய சட்டம் இயற்றப்படும்"

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்களை தடை செய்ய புதிய சட்டம் இயற்றப்படும் என, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிவித்துள்ளார்.

12 views

"தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு" - சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடின்றி சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

15 views

அறநிலைத்துறையின் மூலம் கல்லூரிகள் விரைவில் கட்டப்படும் - அமைச்சர் சேகர்பாபு

அறநிலைத்துறையின் மூலம் கல்லூரிகள் விரைவில் கட்டப்படும் - அமைச்சர் சேகர்பாபு

17 views

நரம்பியல் மருத்துவர் கொலை வழக்கு : "குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள்" - தண்டனை விவரங்கள் பிற்பகல் அறிவிப்பு

பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் ஒன்பது பேர் குற்றவாளிகள் என சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

24 views

வேறு சமூக சிறுமியை வீடியோ எடுத்து மிரட்டல் : சிறுமியை மிரட்டிய புகாரில் இளைஞர் கைது- சமூக மோதல் ஏற்படும் சூழல்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே 17 வயது சிறுமியை வீடியோ எடுத்து மிரட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.