யார் இந்த சரத் கமல்? - ஒலிம்பிக் வீர‌ர் சரத் கமலின் வாழ்க்கை வரலாறு
பதிவு : ஜூலை 01, 2021, 12:21 PM
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றே தீருவேன் என 38 வயதிலும் விடாமுயற்சியில் வியக்க வைக்கும், தமிழக டேபிள் டென்னிஸ் வீர‌ர் சரத்கமலின் வாழ்க்கை வரலாற்றை பார்க்கலாம்...
இந்திய வரலாற்றில தவிர்க்க முடியாத சிறந்த டேபிள் டென்னிஸ் வீர‌ர் சரத் கமல்.... இது ஒலிம்பிக்கோட அதிகாரப்பூர்வ தளத்துல நம்ம தமிழக வீர‌ர் சரத் கமல் பற்றி குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தைகள்...சரத்கமல்... முழு பெயர் அசந்தா சரத் கமல்... 1982 வது வருஷம் ஜூலை 12 ஆம் தேதி சென்னைல பிறந்தாரு சரத்கமல்... ஆமாங்க அவருக்கு இப்போ வயசு 38. இந்த வருஷம் ஒலிம்பிக்ல கலந்துக்குற வயதான நபர்கள் இவரும் மேரி கோமும் தான்... 
சரத் கமலுக்கு மரபுலயே டேபிள் டென்னிஸ் ஊறி கிடக்கு.... காரணம் அவரோட அப்பா சீனிவாச ராவும், மாமா முரளிதர ராவும் டேபிள் டென்னிஸ் வீர‌ர்களாம்...  இதனால நாலு வயசுலயே டேபிள் டேன்னிஸ் விளையாட்டுல ஈடுபட ஆரம்பிச்சிட்டாரு சரத்கமல்... இத வச்சி  பாத்தா டேபிள் டென்னிஸ்ல இவருக்கு அனுபவம் 34 வருஷம்... 15 வ‌து வயசுல பொறியியல் படிப்பா டேபிள் டென்னிஸானு வந்தப்போ, டேபிள் டென்னிஸ தேர்வு பன்னிருக்காரு..  அது தான் என் வாழ்க்கையோட திருப்புமுனைனு சொல்றாரு சரத்...2002 ல, சரத்கமல் 20 வயசா இருக்குறப்போ முதல் தேசிய அளவிலான போட்டிகள்ல பங்கேற்ற சரத்கமலுக்கு, தோல்வியே மிஞ்சுது...அந்த தோல்வியால துவண்டு போகாத சரத், கடினமா பயிற்சி பண்ணி, 2003 ல நடந்த காமன்வெல்த் போட்டில முதல் முறையா பதக்கம் வென்றாரு...அடுத்தடுத்து ஜெயிச்ச சரத்கமல், ஒரே வருஷத்துல, அதாவது 2004 ல ஏதேன்ஸ்ல நடந்த ஒலிம்பிக் போட்டியில இந்தியா சார்பா பங்கேற்குற வாய்ப்பு பெற்றாரு...ஆனா அதுலயும் தோல்வி தான்... இன்னும் கடினமா பயிற்சி பண்ண ஆரம்பிச்ச சரத் கமல், தொடர்ந்து 5 முறை தேசிய அளவில சாம்பியன் பட்டம் வாங்குனாரு... இந்திய அரசு அர்ஜூனா விருது வழங்கி கவுரவிச்சாங்க...இதனால இன்னும் ஆக்ரோஷமா பயிற்சி பண்ண சரத்கமல், அடுத்த ரெண்டே வருஷத்துல அதாவது 2006ல மெல்போர்ன்ல நடந்த காமன்வெல்த் போட்டியில முதல் முறையா தங்க பதக்கம் ஜெயிச்சாரு... அதுமட்டும் இல்ல, அந்த போட்டில இந்திய டேபிள் டென்னிஸ் அணிக்கு தலைமை தாங்கி, தங்கப்பதக்கம் ஜெயிக்கவும் இவர் தான் முக்கிய காரணம்....2010 ல எகிப்துல நடந்த உலக டேபிள்டென்னிஸ் தொடர்ல சாம்பியன் பட்டம் ஜெயிச்ச சரத்கமல், இந்த பட்டத்தை பெறும் முதல் இந்தியர். Card -12 அதே வருஷம், நடந்த காமன்வெல்த் போட்டில 2 தங்க பதக்கம் ஜெயிச்சாரு சரத்கமல்...ஆனா அதுக்கு அப்றம் மறுபடியும் அவரோட சோதனை காலம் தொடங்கிச்சி...

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

172 views

சொத்து தகராறு - தந்தையை வெட்டிய மகன்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சொத்து தகராறில் தந்தையை, மகனே வெட்டிய நிலையில், இது தொடர்பான வீடியோ வேகமாக பரவி வருகிறது.

46 views

"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு

இந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

35 views

ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஒலிம்பிக் ஜோதியை சுமந்து உற்சாகம்

ஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் உற்சாகத்துடன் நடந்தது.

17 views

பிற செய்திகள்

டோக்கியோ ஒலிம்பிக்கில் ருசிகரம் - காதலை வெளிப்படுத்திய பயிற்சியாளர்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் அர்ஜென்டினா வாள் வீச்சு வீராங்கனையிடம் அவரின் பயிற்சியாளர் காதலை வெளிப்படுத்திய ருசிகர சம்பவம் அரங்கேறி உள்ளது.

12 views

2020 டோக்கியோ ஒலிம்பிக் திருவிழா : கூடைப்பந்து களத்தில் கலக்கும் ரோபோக்கள்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பு அடைந்துவரும் நிலையில், கூடைப்பந்து விளையாட்டில் ரோபோக்களும் கலக்கி வருகின்றன.

37 views

டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டிகள் - முன்னணி வீரர் சிட்ஸிபாஸ் வெற்றி

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் டென்னிஸ் போட்டியின் மூன்றாவது சுற்று ஆட்டத்துக்கு, கிரீஸை சேர்ந்த முன்னணி வீரர் சிட்ஸிபாஸ் முன்னேறி உள்ளார்.

20 views

இரண்டு முறை கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரிட்டன் வீரர் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று சாதனை

இரண்டு முறை கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரிட்டன் நீச்சல் வீரர் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்து உள்ளார்.

9 views

டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டி - இந்திய வீராங்கனை லவ்லினா காலிறுதிக்கு தகுதி

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை போட்டியின் காலிறுதி ஆட்டத்துக்கு இந்திய வீராங்கனை லவ்லினா பார்ஹோஹெய்ன் முன்னேறி உள்ளார்.

12 views

டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டிகள் - ஜப்பான் வீராங்கனை ஒசாகா அதிர்ச்சி தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் ஜப்பானை சேர்ந்த முன்னணி வீராங்கனை நவோமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி அடைந்து உள்ளார்.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.