திருச்சி கல்லூரியில் பாலியல் புகார் - சர்ச்சையில் சிக்கிய தமிழ்த்துறை தலைவர்
பதிவு : ஜூலை 01, 2021, 11:45 AM
திருச்சியில் புகழ்பெற்ற கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் மீது, அக்கல்லூரியில் பயின்று வரும் மாணவிகள் 5 பேர், பாலியல் புகார் அளித்துள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் பால் சந்திரமோகனை, கல்லூரி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி, பல ஆட்சியர்களையும், அரசு அதிகாரிகளையும், நீதிபதிகளையும் உருவாக்கிய பெருமை கொண்டது...இந்நிலையில், திருச்சியின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகத் திகழும், இக்கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் பால் சந்திர மோகன் மீது, அங்கு பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவிகள் 5 பேர் பாலியல் புகார் கொடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...அவர்கள் கல்லூரி முதல்வருக்கு அனுப்பியுள்ள 5 பக்க புகார் மனுவில் கேட்கவே காது கூசும் வகையிலான பேராசிரியரின் பாலியல் தொல்லைகள் அம்பலமாகியுள்ளன...அதில், வகுப்பறையில் மாணவிகள் அருகே மிகவும் நெருக்கமாக அமர்ந்து கொண்டு, இரட்டை அர்த்தங்களில் கொச்சையாக பேசுவது என பல பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது...அத்துடன், வகுப்பிற்கு குறைந்தளவு மாணவிகள் வந்திருந்தால், அவர்களைத் தன் அறைக்கு வரச்சொல்லி கட்டாயப் படுத்தியதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது...மேலும் அவருக்கு ஆதரவாக ஒரு பெண் உதவிப் பேராசிரியரும் செயல்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது...
கடந்த மார்ச் மாதம் கொடுக்கப்பட்ட இந்த புகாரில், விசாரணை நடத்திய விசாரணைக்குழு ஏப்ரல் இறுதியில் அறிக்கை தாக்கல் செய்தது...அதில், பேராசிரியர் பால் சந்திரமோகன் மீதான குற்றச்சாட்டுகள் உண்மையானவை என்றும், பெண் உதவி பேராசிரியை மீதான  குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித முகாந்திரமும் இல்லை என்றும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது...இந்த நிலையில், மாணவிகளின் பாலியல் புகார்களை தொடர்ந்து,  தமிழ் துறை தலைவர் பேராசிரியர் பால் சந்திரமோகனை பணியிடை நீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.தந்தி டிவி செய்திகளுக்காக திருச்சி செய்தியாளர் விஜயகோபால்.

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

172 views

சொத்து தகராறு - தந்தையை வெட்டிய மகன்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சொத்து தகராறில் தந்தையை, மகனே வெட்டிய நிலையில், இது தொடர்பான வீடியோ வேகமாக பரவி வருகிறது.

46 views

"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு

இந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

35 views

ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஒலிம்பிக் ஜோதியை சுமந்து உற்சாகம்

ஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் உற்சாகத்துடன் நடந்தது.

17 views

பிற செய்திகள்

9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் - முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை

தமிழகத்தி்ல் டிசம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின், முக்கிய அமைச்சர்களுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

15 views

சட்டப்பேரவையில் கருணாநிதி படம் திறப்புவிழா - முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சட்டப்பேரவையில் கருணாநிதியின் படம் திறக்கும் விழாவின் ஏற்பாடுகள் குறித்து, முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

10 views

வாகனங்களுக்கு எரிவாயு விநியோகம் செய்ய 25 சிஎன்ஜி நிலையங்கள் - முதலமைச்சர் காணொலி மூலம் திறந்து வைப்பு

வாகனங்களுக்கு எரிவாயு விநியோகம் செய்ய 25 சிஎன்ஜி நிலையங்களை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து இன்று திறந்து வைத்தார்.

25 views

"அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையீடு செய்வதில்லை" - பாஜக தலைவர் அண்ணாமலை

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுவதாக கூறுவது உண்மையில்லை என்று, அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

80 views

கோயில் இடங்கள் ஆக்கிரப்புகளை அகற்ற வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

சங்கரன்கோவில், செல்லியம்மன் சூலப் பிடாரியம்மன் கோயில் ஆக்கிரமிப்பை அகற்றி அறநிலையத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

12 views

விஜய் காருக்கான நுழைவு வரி - சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

நடிகர் விஜய் காருக்கு நுழைவு வரியில் இருந்து விலக்கு கோரிய வழக்கில், ஒரு லட்சம் அபராதம் விதித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.