கோவாக்சின் இறக்குமதியில் முறைகேடு - ஒப்பந்தத்தை ரத்து செய்த பிரேசில்
பதிவு : ஜூலை 01, 2021, 11:29 AM
கோவாக்சின் தடுப்பூசி இறக்குமதியில் முறைகேடு புகார் எழுந்துள்ளது,
கோவாக்சின் தடுப்பூசி இறக்குமதியில் முறைகேடு புகார் எழுந்துள்ளது, பிரேசில் அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை எந்த ஒரு தொகையும் பெறவில்லை என பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. கொரோனாவிற்கு பலியானவர்கள் எண்ணிக்கையில் உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ள தென் அமெரிக்க நாடான பிரேசிலுக்கு, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. 2,409 கோடி ரூபாய் விலையில் 2 கோடி கோவோக்சின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய பாரத் பயோடெக் நிறுவனத்துடன், பிரேசில் அரசு கடந்த பிப்ரவரியில் ஒப்பந்தம் செய்திருந்த நிலையில், ஜூன் 4ஆம் தேதி, கோவேக்சின் தடுப்பூசிக்கு, பிரேசில் நாட்டு மருந்துக் கட்டுப்பாடு ஆணையம் அங்கீகாரம் அளித்திருந்தது. இந்த ஒப்பந்தத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக, பிரேசில் நாடாளுமன்றத்தின் செனட் சபையின் விசாரணை குழு நடத்திய விசாரணையில் கண்டறியப்பட்டது. இதன் விளைவாக பிரேசில் அதிபர் ஜெய்ர்  போல்சனரோவிற்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தத்தை பிரேசில் அரசு ரத்து செய்துள்ளது. இதுவரையில் பிரேசில் அரசின் சுகாதாரத் துறை அமைச்சரகத்திடம் இருந்து கோவேக்சின் தடுப்பூசி விற்பனைகாக தொகை எதையும் பெறவில்லை என்றும், தடுப்பூசிகள் எதுவும் இதுவரை பிரேசிலுக்கு அனுப்பப்படவில்லை என்றும் பாரத் பயோடெக் நிறுவனம் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

224 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

190 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

121 views

பிற செய்திகள்

ஒலிம்பிக்கில் முதல் பதக்கத்தை வென்றது சீனா

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் முதல் தங்கப் பதக்கத்தை சீனா தட்டிச் சென்று உள்ளது.

23 views

சுற்றுலா பயணிகளை வரவேற்கும் நாடுகள் - இந்தியர்களுக்கு விசா வழங்கும் நாடுகள்

கொரோனா பரவலின் இரண்டாவது அலை இந்தியாவில் குறைந்துள்ள நிலையில், இந்தியர்களை சுற்றுலா மற்றும் வர்த்தக பணிகளுக்கு வரவேற்கும் நாடுகள் பற்றிய விவரங்களை தற்போது பார்க்கலாம்...

18 views

திபெத் சென்ற சீன அதிபர் ஜி ஜின்பிங் - இந்திய எல்லை அருகேயுள்ள நகருக்கு பயணம்

சீன அதிபர் ஷி ஜின்பிங், முதன் முறையாக திபெத் பகுதிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்திய எல்லைக்கு அருகே உள்ள நகரின் வளர்ச்சி பணிகளை அவர் பார்வையிட்டார்.

19 views

பற்றி எரியும் காட்டுத் தீ - தீப்பொறிகளுக்கு நடுவில் வீரர்கள்

அமெரிக்காவின் தமாரக்கில் தீப்பிழம்புகளுக்கு மத்தியில் துணிச்சலாக வாகனத்தை ஓட்டிய தீயனைப்பு வீரர்கள், மக்களை காப்பாற்றினர்.

13 views

தடுப்பூசி செலுத்திக் கொண்டால் 98% பாதுகாப்பு - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவிப்பு

உருமாறிய கொரோனா வைரஸ், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களையே தாக்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

31 views

கோடை விடுமுறைக் கொண்டாட்டம் - அணில், குரங்குகள் குதூகலம்

லண்டன் உயிரியல் பூங்காவில் உள்ள அணில் குரங்குகள் கோடை விடுமுறையைக் குதூகலமாகக் கொண்டாடி வருகின்றன.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.