இந்தியன் 2 பட விவகாரம் - நீண்டு கொண்டே செல்லும் பிரச்சினை
பதிவு : ஜூலை 01, 2021, 11:06 AM
லைகா நிறுவனம் மற்றும் இயக்குநர் சங்கருக்கு இடையேயான பிரச்சினைக்குத் தீர்வு காண, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.பானுமதியை மத்தியஸ்தராக நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மிகப்பெரும் எதிர்பார்ப்பில், இயக்குநர் சங்கர் இயக்கத்தில், நடிகர் கமல் நடிப்பில் உருவாகும் இந்தியன் 2 திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது...இந்நிலையில், தங்கள் நிறுவனத்தின் இந்தியன் 2 திரைப்படத்தை முடித்துக் கொடுக்காமல், வேறு நிறுவனங்களின் படங்களை இயக்க, இயக்குநர் சங்கருக்கு தடை விதிக்கக் கோரி, லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது...மனுவில், பட்ஜெட்டுக்கு மீறி செலவு செய்தும், படத்தின் 80 சதவீதம் பணிகளை மட்டுமே முடித்திருப்பதாகவும், இதனால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது... வழக்கில் சங்கர் சார்பாக அளிக்கப்பட்ட மனுவில், படத்தின் பட்ஜெட்டை லைகா நிறுவனம் 270 கோடியிலிருந்து 250 கோடியாகக் குறைத்ததாகவும்... அரங்குகள் அமைத்துத் தருதல் மற்றும் நிதி ஒதுக்கீட்டில் ஏற்படுத்திய தாமதமே படப்பிடிப்பு தாமதத்திற்குக் காரணம் எனவும் கூறப்பட்டுள்ளது...மேலும், நடிகர் கமலுக்கு மேக்கப் அலர்ஜி, கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது, மற்றும் கொரோனா ஊரடங்குகளால் படப்பிடிப்பு தாமதமானதாகவும் குறிப்பிடப்பட்டது...இதனால் பட தயாரிப்புப் பணிகளில் ஏற்பட்ட தாமதத்திற்குத் தான் பொறுப்பல்ல எனவும், வரும் அக்டோபருக்குள் படத்தை முடித்துக் கொடுக்க தயார் எனவும் கூறப்பட்டது...இந்த வழக்கில், லைகா தரப்பும் இயக்குநர் சங்கர் தரப்பும் தாங்களே சமரசம் செய்து கொள்ள நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில், அம்முயற்சியும் தோல்வியில் முடிந்தது...
நீண்ட நாட்களாக பெரும் சிக்கலில் இருக்கும் இவ்வழக்கு, மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்...அதே சமயம் இந்தியன் 2 பட விவகாரத்தில், லைகா நிறுவனம் மற்றும் இயக்குனர் ஷங்கர் இடையேயான பிரச்சினையில் தீர்வுகாணும் மத்தியஸ்தராக உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.பானுமதியை நியமனம் செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்...உலக நாயகன் நடிப்பில், மிகப்பெரும் ஆவலை ஏற்படுத்தியிருக்கும் இந்தியன் 2 திரைப்படம், இழுபறியில்லாமல் சிக்கல்கள் தீர்ந்து விரைவில் வெளிவர வேண்டும் என்பதே தமிழ் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது...தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

246 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

199 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

132 views

பிற செய்திகள்

சார்பட்டா பரம்பரை படம் பேசும் அரசியல்? "எம்.ஜி.ஆர். குறித்து தவறாக சித்தரிப்பு" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

சார்பட்டா திரைப்படத்தில் அதிமுக குறித்து தவறாக சித்தரித்திருப்பதாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

12 views

90களில் கொடிகட்டி பறந்த ரியல் டான்சிங் ரோஸ் - யார் இந்த டான்சிங் ரோஸ்?

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் இடம்பெற்ற டான்சிங் ரோஸ் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

609 views

சூர்யாவின் புதிய திரைப்படம் "ஜெய் பீம்".. ஒடுக்கப்பட்ட மக்களை பற்றிய படம் என தகவல்

நடிகர் சூர்யா நடிக்கும் புதிய படத்திற்கு ஜெய் பீம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

177 views

யார் இந்த டான்சிங் ரோஸ்? 90களில் கொடிகட்டி பறந்த ரியல் டான்சிங் ரோஸ்

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் இடம்பெற்ற டான்சிங் ரோஸ் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

797 views

"சார்பட்டா" திரைப்படம் - பா.ரஞ்சித்துக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

"சார்பட்டா" திரைப்படம் - பா.ரஞ்சித்துக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

256 views

கவனம் ஈர்க்கும் சார்பட்டா திரைப்படம் - சார்பட்டா பரம்பரையின் கடைசி வாரிசு

சார்பட்டா - உண்மை கதையை உயிரோட்டத்தோடு பேசியுள்ள படம் என்கின்றனர் சினிமா பார்வையாளர்கள். வடசென்னையும், சார்பட்டா வரலாறும் என்ன? பார்க்கலாம்.

789 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.