ஆக்சிஜன் பற்றாக்குறை எதிரொலி : மயங்கி கரை ஒதுங்கும் கெண்டை மீன்கள்
பதிவு : ஜூலை 01, 2021, 10:31 AM
ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மேட்டூர் அருகே தெர்மல் பாலம் காவிரி ஆற்றில் டன் கணக்கில் மீன்கள் மயங்கிய நிலையில் கரையில் ஒதுக்குகிறது.
மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு வினாடிக்கு  15 ஆயிரம் கன அடிநீர் வெளியேற்றப் பட்டு வருகிறது. இவ்வாறு வெளியேறும் நீர் ஏற்கனவே காவிரியில் தேங்கி நிற்கும் நீருடன் கலப்பதால் வெப்பநிலை மாற்றம் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் அணையிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அனல் மின் நிலைய நீரேற்று  நிலையம், தெர்மல் பாலம், மாதையன் குட்டை உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகளில்  மீன்கள், டன் கணக்கில் மயங்கியபடியும், இறந்தும் கரை  ஒதுக்குகின்றன.  இதனை கரையோர மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் பரிசலில் சென்று வலை கொண்டு அள்ளிச் செல்கின்றனர். மேலும் எஞ்சிய மீன்கள் ஆங்காங்கே மிதப்பதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் காவிரி கரையோரப் பகுதியில் வசிக்கும் மக்கள் நோய் தொற்றால் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பிற செய்திகள்

மக்களை தேடி மருத்துவம் புதிய திட்டம் : 5 - ந் தேதி துவக்கி வைக்கிறார் முதல்வர்

ஒரு கோடி மக்களுக்கு வீடு தேடி மாத்திரை மருந்துகள் வழங்கும் "மக்களை தேடி மருத்துவம்" எனும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகின்ற 5 ம்தேதி கிருஷ்ணகிரியில் துவக்கி வைக்கிறார்.

14 views

தமிழகத்தில் மேலும் 1,756 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.

12 views

ஓபிஎஸ், உதயநிதியின் வெற்றியை எதிர்த்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 9ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் ஆகஸ்ட் 9ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

29 views

குப்பையில் கலெக்டர் அலுவலக அரசு ஆவணங்கள் - அதிர்ச்சி

சிவகங்கையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த பல கோப்புகள் குப்பையில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

23 views

சங்கரய்யாவிற்கு 'தகைசால் தமிழர்' விருது - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவராந சங்கரய்யாவிற்கு தகைசால் தமிழர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

18 views

ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள் - அமைச்சர் பொன்முடி தகவல்

பொறியியல் மற்றும் கலைக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களை தவிர, பிற மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.