அரியவகை மரபணு நோயால் குழந்தை பாதிப்பு - பிரதமர் மோடிக்கு வைகோ வேண்டுகோள்
பதிவு : ஜூலை 01, 2021, 08:25 AM
குமாரபாளையத்தில் அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையை காப்பாற்ற பிரதமர் மோடி உதவ வேண்டுமென மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.
அரியவகை மரபணு நோயால் குழந்தை பாதிப்பு - பிரதமர் மோடிக்கு வைகோ வேண்டுகோள்

குமாரபாளையத்தில் அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையை காப்பாற்ற பிரதமர் மோடி உதவ வேண்டுமென மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்தவர், 23 மாத பெண் குழந்தையான மித்ரா. இவர் ஆட்டோசோமல் ரெசெஸ்ஸிவ் ஸ்பைனல் ஆட்ரோஃபி என்ற அரியவகை மரபணு கோளாறு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். உயிருக்கு ஆபத்தான நோயால் பாதிக்கப்பட்டுள்ள இந்த குழந்தையை காப்பாற்ற வேண்டி, பிரதமர் மோடிக்கு வைகோ எழுதியுள்ள கடிதத்தில், இந்த நோயைக் குணப்படுத்தும் ஒரே மருந்தான ஜோல்ஜென்ஸ்மாவின் விலை 16 கோடி ரூபாய் என்றும், குழந்தை இரண்டு வயதை நிறைவு செய்வதற்குள் இதனை வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், சுவிட்சர்லாந்து நாட்டின் நோவார்டிஸ் நிறுவனம், உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த இஷானி என்ற குழந்தைக்கு, குலுக்கல் முறையில் இந்த மருந்தை இலவசமாக வழங்கியதை சுட்டிக் காட்டியுள்ள வைகோ, அதே நிறுவனத்திடம் இருந்து ஜோல்ஜென்ஸ்மா மருந்தை, தமிழ்நாட்டுக் குழந்தை மித்ராவுக்கு பெற்றுத் தந்து, உயிரைக் காப்பாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் - தவறி விழுந்த பெண்ணை மீட்ட காவலர்

தெலங்கானாவில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண்ணை ரயில்வே காவலர் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார்.

56 views

தடுப்பூசி செலுத்த குவிந்த மக்கள் - தடுப்பூசி மையத்தில் கைகலப்பு

கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் ஏற்பட்ட மோதலில் பலர் காயம் அடைந்தனர்.

41 views

பிற செய்திகள்

அறநிலைத்துறையின் மூலம் கல்லூரிகள் விரைவில் கட்டப்படும் - அமைச்சர் சேகர்பாபு

அறநிலைத்துறையின் மூலம் கல்லூரிகள் விரைவில் கட்டப்படும் - அமைச்சர் சேகர்பாபு

21 views

கருணாநிதி படத்திறப்பு விழாவில் அதிமுக பங்கேற்காதது குறித்து கூறும் காரணம் ஏற்கத்தக்கதல்ல - அமைச்சர் துரைமுருகன்

கருணாநிதி படத்திறப்பு விழாவில் பங்கேற்காதது குறித்து அதிமுக சொல்லும் கருத்து ஏற்கத்தக்கதல்ல என நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

49 views

கோவிட்டைப் போல சமநிலையான மனம்; ஏழை பணக்காரர் என்ற வேறுபாடு கூடாது - கமல்ஹாசன்

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நடத்தப்பட்ட இலவச கொரோனா தடுப்பூசி முகாமினை அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் துவக்கி வைத்தார்.

38 views

தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழா - நிகழ்ச்சியை புறக்கணித்த அதிமுக - தேமுதிக

தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் கருணாநிதி உருவப் படத்திறப்பு விழாவை பிரதான எதிர்க்கட்சியான அதிமுக புறக்கணித்துள்ளது.

196 views

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்

தமிழக அமைச்சரவைக் கூட்டம் வருகிற 4ஆம்தேதி நடைபெற உள்ளது. சென்னை தலைமை செயலகத்தில், காலை 11 மணிக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.

23 views

சட்டமன்றத்தில் இன்று கருணாநிதி படம் திறப்பு - கருணாநிதி படத்தில் இடம்பெற்றுள்ள வாசகம்

சட்டமன்றத்தில் திறக்கப்பட உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் புகைப்படத்தில் இடம்பிடித்த வாசகம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

459 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.