மேலும் வலுவானது சேப்பாக் சூப்பர் கில்லிஸ் - சேப்பாக் அணியில் சந்தீப் வாரியர்
பதிவு : ஜூன் 30, 2021, 10:56 PM
தமிழ்நாடு பிரீமியர் லீக் வீர‌ர்கள் தேர்வில், ஐ.பி.எல் நட்சத்திர வீர‌ர் சந்தீப் வாரியர் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். நெல்லை, திருப்பூர், சேலம் என புதிதாக 3 அணிகள் உருவாகியுள்ளன.
தமிழ்நாடு பிரீமியர் லீக் வீர‌ர்கள் தேர்வில், ஐ.பி.எல் நட்சத்திர வீர‌ர் சந்தீப் வாரியர் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். நெல்லை, திருப்பூர், சேலம் என புதிதாக 3 அணிகள் உருவாகியுள்ளன.

தமிழக அரசு அதிகாரப்பூர்வ அனுமதி அளிக்கும் பட்சத்தில் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி 20 போட்டிகளை ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. அரசின் நெறிமுறைகளை கடைபிடித்து போட்டிகளை நடத்த தயார் என சங்கத்தின் செயலாளர் ஆர்.எஸ்.ராமசாமி கூறியுள்ளார். 

கேரள அணியில் இருந்து தமிழக அணிக்கு இடம் மாறியுள்ள வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் வாரியரை சேப்பாக் சூப்பர் அணி தேர்வு செய்துள்ளது. 

சந்தீப் வாரியர், நிலேஷ் சுப்பிரமணியம்,
 எஸ் ராதாகிருஷ்ண‌ன் ஆகியோரை தேர்வு செய்த‌தன் மூலம் அணி மேலும் வலுவாகியுள்ளது என சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியின் கேப்டன் கவுசிக் காந்தி கூறியுள்ளார்

2019 ஆம் ஆண்டில் கோப்பையை வென்ற அணியை மீண்டும் கட்டமைப்போம் என அணியின் தலைமை பயிற்சியாளர் ஹேமாங் பதானி தெரிவித்துள்ளார்.

சேலம் ஸ்பார்டன்ஸ், ஐ டிரீம் திருப்பூர் தமிழன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் என புதிதாக 3  அணிகள் உருவாகியுள்ளன. 

திருநெல்வேலி மாவட்டத்திற்காக சொந்தமாக ஒரு அணி உருவாக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதாகவும், உள்ளூர் போட்டிகளில் கவனம் ஈர்த்த வீர‌ர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் நெல்லை ராயல் கிங்ஸ் அணியினர் தெரிவித்தனர். 

தங்களிடம் ஆல்ரவுண்டர்கள் நிறைய இருப்பதால், வெற்றி வாய்ப்புகளும் நிறைய உள்ளதாக சேலம் ஸ்பார்டன்ஸ் அணியின் உரிமையாளர் தெரிவித்தார். 

லீக் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட பந்துவீச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள் உள்ளதால் தங்களிடம் சீரான அணி உருவாகியுள்ளதாக ஐடிரீம் திருப்பூர் தமிழன் அணியினர் தெரிவித்தனர். 

புதிதாக மூன்று அணிகளுடன் நடக்கவிருக்கும் டி.என்.பி.எல் போட்டியை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்... 

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

252 views

"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு

இந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

114 views

இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்பனை : வடசென்னையில் போதை மாத்திரை விற்பனை ஜரூர் - வடமாநிலம் டூ வடசென்னை தலைவன் கைது

வடசென்னையில் சிறுவர்கள், இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்த தலைவனை போலீசார் பொறி வைத்து பிடித்தனர்.

84 views

ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஒலிம்பிக் ஜோதியை சுமந்து உற்சாகம்

ஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் உற்சாகத்துடன் நடந்தது.

35 views

பிற செய்திகள்

டோக்கியோ ஒலிம்பிக் - 8-ம் நாள் நிகழ்வுகள்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் 8-ம் நாளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தற்போது பார்க்கலாம்...

2 views

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டி; 4-3 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டியின் லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை, இந்திய மகளிர் அணி வென்றது.

1 views

"பயிற்சிக்கு உதவிய லாரி ஓட்டுநர்களை சந்திக்க வேண்டும் - மீரா பாய் சானு விருப்பம்

டோக்கியோ ஒலிம்பிக் பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சானு, தன்னை பயிற்சிக்கு அழைத்துச் சென்ற லாரி ஓட்டுநர்களை சந்திக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து உள்ளார்.

1 views

பதக்கத்தை உறுதிப்படுத்துவாரா சிந்து..? - ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பு

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் பேட்மிண்டன் அரையிறுதிப் போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனையுடன், இந்திய வீராங்கனை பி.வி. சிந்து இன்று பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

3 views

டோக்கியோ ஒலிம்பிக் தடகள போட்டிகள் - மகளிர் வட்டெறிதல் போட்டி தகுதி சுற்றில் கமல்பிரீத் கவுர் வெற்றி

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் வட்டெறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை கமல்பிரீத் கவுர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

6 views

டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டி - இந்திய வீரர் அமித் பங்கால் தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் குத்துச்சண்டைப் போட்டியின் முதல் சுற்றில் உலகின் நம்பர் ஒன் வீரரான அமித் பங்கால் தோல்வி அடைந்தார்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.