"வன ஆக்கிரமிப்பு; சட்ட நடவடிக்கை எடுங்கள்" - தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
பதிவு : ஜூன் 30, 2021, 07:37 PM
வனப்பகுதியை ஆக்கிரமிப்போர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
"வன ஆக்கிரமிப்பு- சட்ட நடவடிக்கை எடுங்கள்"

வனப்பகுதியை ஆக்கிரமிப்போர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், நடுவட்டம் கிராமத்தில் அனுமதியின்றி கட்டப்படும் ரிசார்ட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி கூடலூரைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். 
இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. 
அப்போது நீலகிரி மாவட்ட ஆட்சியர், வனத்துறை அதிகாரி ஆகியோரின் அறிக்கை தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. 
அதில், ரிசார்ட்டுக்கு வழங்கப்பட்ட கட்டிட அனுமதி ரத்து, குடிநீர் இணைப்பு துண்டிப்பு, உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது. 

அரசின் நடவடிக்கையில் திருப்தி அடைவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

ரிசார்ட் கட்டிய குற்றச்சாட்டுக்கு ஆளான மருத்துவர் கவிதா தரப்பில், வனப்பகுதி நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை என்றும், 

தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என வாதிடப்பட்டது. 

அனைத்து வாதங்களை கேட்ட நீதிபதிகள், மீட்கப்பட்ட வனப்பகுதியை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். 

வனத்தை ஆக்கிரமிக்கும் ஒவ்வொருவர் மீதும் சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்தி, வழக்கை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

172 views

சொத்து தகராறு - தந்தையை வெட்டிய மகன்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சொத்து தகராறில் தந்தையை, மகனே வெட்டிய நிலையில், இது தொடர்பான வீடியோ வேகமாக பரவி வருகிறது.

46 views

"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு

இந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

35 views

ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஒலிம்பிக் ஜோதியை சுமந்து உற்சாகம்

ஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் உற்சாகத்துடன் நடந்தது.

17 views

பிற செய்திகள்

9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் - முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை

தமிழகத்தி்ல் டிசம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின், முக்கிய அமைச்சர்களுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

14 views

சட்டப்பேரவையில் கருணாநிதி படம் திறப்புவிழா - முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சட்டப்பேரவையில் கருணாநிதியின் படம் திறக்கும் விழாவின் ஏற்பாடுகள் குறித்து, முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

10 views

வாகனங்களுக்கு எரிவாயு விநியோகம் செய்ய 25 சிஎன்ஜி நிலையங்கள் - முதலமைச்சர் காணொலி மூலம் திறந்து வைப்பு

வாகனங்களுக்கு எரிவாயு விநியோகம் செய்ய 25 சிஎன்ஜி நிலையங்களை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து இன்று திறந்து வைத்தார்.

25 views

"அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையீடு செய்வதில்லை" - பாஜக தலைவர் அண்ணாமலை

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுவதாக கூறுவது உண்மையில்லை என்று, அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

80 views

கோயில் இடங்கள் ஆக்கிரப்புகளை அகற்ற வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

சங்கரன்கோவில், செல்லியம்மன் சூலப் பிடாரியம்மன் கோயில் ஆக்கிரமிப்பை அகற்றி அறநிலையத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

12 views

விஜய் காருக்கான நுழைவு வரி - சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

நடிகர் விஜய் காருக்கு நுழைவு வரியில் இருந்து விலக்கு கோரிய வழக்கில், ஒரு லட்சம் அபராதம் விதித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.