சாலை வசதி கூட இல்லாத பழங்குடியின கிராமம் - பள்ளி ஒன்றைத் துவங்கி இளைஞர் அசத்தல்
பதிவு : ஜூன் 30, 2021, 05:43 PM
சாலை வசதி கூட இல்லாத மலை கிராமத்தில் பிறந்து முனைவர் பட்டம் பெற்ற பழங்குடியின இளைஞர் ஒருவர், கொரோனா காலத்தில் பழங்குடியின மாணவ மாணவிகளுக்கு பள்ளி ஒன்றை உருவாக்கி ஓராண்டு காலமாக பாடம் நடத்தி அசத்தி வருகிறார்.
மலை உச்சியில்...பசுமையான சூழலில்...சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதி நடுவே...விலங்குகள் நடமாட்டத்திற்கு இடையே...இயற்கையோடு இயைந்து வாழும் கிராம்தான் காளிதிம்பம்...

கரடு முரடான சாலைகளுடன், செல்ஃபோன் சிக்னல் கூட இல்லாத இக்கிராமத்தில், சுமார் 70க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு வசிக்கும் மாணவ மாணவிகள் பள்ளிக்குப் போக பல கிலோ மீட்டர் தூரம் கடந்து செல்ல வேண்டியுள்ளது. ஆனால், இப்படிப்பட்ட சூழலிலும், தடைகளைத் தாண்டி, விடாமுயற்சியுடன் படித்து, இயற்பியல் பிரிவில் முனைவர் பட்டம் பெற்று அசத்தியுள்ளார் சத்தியமூர்த்தி.

இதை எளிதாக சொல்லி விட்டாலும், அவரது வெற்றிக்குப் பின்னால் இருக்கும் கடின உழைப்பு நம்மை மலைக்க வைக்கிறது. தற்போது பணிக்காக காத்திருக்கும் சத்தியமூர்த்தி, தான் பெற்ற கல்வி பிறருக்கும் உதவ வேண்டும் என்ற நோக்கில், பழங்குடியின மாணவர்களுக்காக பள்ளி ஒன்றைத் துவங்கியுள்ளார்.

ஏனெனில், கொரோனா ஊரடங்கால், தற்போது பள்ளிகள் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது...செல்ஃபோன் கூட வாங்க வசதியற்ற ஏழைக் குடும்பங்கள் தான் இங்கு அதிகம்... அதனால் ஆன்லைன் கல்வியும் கற்க முடியாது என்பதால், இப்பழங்குடியின கிராம மாணவர்கள் பள்ளியை இடையிலேயே நிறுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது...

அவர்களுக்கு உதவ எண்ணிய சத்திய மூர்த்தி தன் மனைவி சௌமியாவுடன் இணைந்து, அங்கன்வாடி மையத்தை தற்காலிக பள்ளியாக மாற்றினார். அங்கு 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் சுமார் 25 மாணவ மாணவிகளுக்கு இருவரும் வகுப்பு நடத்தி வருகின்றனர்.

கற்காமல் இருப்பதை விட, பிறக்காமல் இருப்பதே நன்று என்று கூறுவார்கள். அந்த வகையில், காளிதிம்பம் கிராம மாணவர்களைக் கல்வியில் முன்னேற்ற போராடும் சத்தியமூர்த்தியின் செயல் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

பிற செய்திகள்

4 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சேர்ந்து வாழ வந்த மனைவி தற்கொலை - கணவரை கைது செய்ய வலியுறுத்தல்

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்ற மனைவி மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ வந்த ஒரே மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் நடந்துள்ளது.

4 views

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு துணை தேர்வு - ஹால்டிக்கெட் வெளியிட்டது தேர்வுத்துறை

தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட், தேர்வுத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

8 views

"3-வது அலை வராமல் தடுப்போம்" - முதலமைச்சர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

தமிழக அரசு சார்பில் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரசாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

20 views

சோதனையில் போலீசாரை தாக்க முயற்சி - கத்தியால் தாக்க வந்த இரு இளைஞர்கள் கைது

திண்டிவனம் அருகே வாகன சோதனையின் போது சப் இஸ்பெக்டரை கத்தியால் தாக்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.

10 views

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொலை - கொலைக்கான காரணம் குறித்து விசாரணை

காஞ்சிபுரம் அருகே முன்னாள் ஊராட்சித் தலைவரின் மரணம் குறித்து போலீசர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

94 views

மீண்டும் கொரோனா பரவல் எதிரொலி - சென்னையில் முக்கிய வணிக பகுதிகள் மூடல்

சென்னை மாநகரின் முக்கிய வணிக பகுதிகளில் கடைகள் திறக்கப்பட்டுள்ளதா என மண்டல கண்காணிப்பு குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

185 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.