வரதட்சணைக்கு பலியான கேரளா விஸ்மயாவின் கணவருக்கு கொரோனா தொற்று
பதிவு : ஜூன் 30, 2021, 04:07 PM
கேரளாவில் வரதட்சணை கொடுமையால் உயிரிழந்த விஸ்மயாவின் கணவர் கிரண்குமாருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து அவர் பராமரிப்பு மையத்திற்கு மாற்றப்பட்டார்.
கொல்லம் அருகே உள்ள நிலமேல் பகுதியை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மாணவியான விஸ்மயா, மோட்டார் வாகன அதிகாரி கிரண்குமாரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கூடுதலாக பணம், நகை வரதட்சணை கேட்டு விஸ்மயாவை கிரண்குமார் துன்புறுத்தி வந்த நிலையில் கடந்த 21ஆம் தேதி விஸ்மயா, தன் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து கிரண்குமார் கைது செய்யப்பட்ட நிலையில் அவரை போலீசார் விசாரணைக்காக காவலில் எடுத்து விசாரித்தனர். அவர்கள் வசித்த வீடு உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரித்த நிலையில் திருமணத்திற்கு பிறகு விஸ்மயாவை 5 முறை தாக்கியதாக ஒப்புக் கொண்டார். 3 நாள் காவல் முடிவடைந்த நிலையில் அவருக்கு கொரோனா பரிசோதனை  செய்ததில் அவருக்கு தொற்று இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் கொரோனா பராமரிப்பு மையத்திற்கு மாற்றப்பட்டார். 

பிற செய்திகள்

14 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை - 5 கிலோ ஐஇடி வெடிப்பொருட்கள் பறிமுதல்

ஜம்மு மற்றும் காஷ்மீரில் நாச வேலைகளுக்கு பயன்படுத்த எடுத்து வரப்பட்ட 5 கிலோ ஐஇடி வெடிபொருட்களை கைப்பற்றிய என்.ஐ.ஏ. லஷ்கர் -இ-முஸ்தபா அமைப்பின் தலைவனை கைது செய்துள்ளது.

5 views

சர்ச்சையில் சிக்கிய பெகாசஸ் ஸ்பைவேர் - பெகாசஸ் உருவாக்கிய NSO நிறுவனம் மீது விசாரணை

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு உலகம் முழுவதிலும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதனை உருவாக்கிய NSO நிறுவனத்தின் சேவையை சில நாடுகள் ரத்து செய்துள்ளன.

6 views

உடைந்து விழுந்த மேல்தேக்க குடிநீர் தொட்டி - பாய்ந்தோடிய தண்ணீர்

குஜராத் மாநிலம் ஜூனாகாத் பகுதியில் உள்ள கிர்ஷாரா கிராமத்தில் 40 ஆண்டு பழமையான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இருந்தது.

13 views

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - இரண்டு நாட்களுக்கு முழு ஊரடங்கு

கேரளாவில் 2 நாட்கள் முழு ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

113 views

மருத்துவ மாணவியை சுட்டுக் கொன்ற இளைஞர் - காதல் விவகாரத்தில் நடந்த பயங்கர​ம்

கேரளாவில் காதல் விவகாரத்தில் பல் மருத்துவ கல்லூரி மாணவியை கொடூரமாக சுட்டுக் கொன்ற இளைஞர் தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்....

235 views

காட்டாற்றில் அடித்து செல்லப்பட்ட பாலம் - ஏணி மூலம் ஆற்றை கடந்த அமைச்சர்

இமாச்சல பிரதேச அமைச்சர் ஒருவர் வெள்ள பாதிப்புகளை பார்வையிட காட்டாற்று வெள்ளத்தை கடந்து சென்றார்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.