"சிக்கன் பிரை சேமியாதான் வேண்டும்" - ரகளையில் ஈடுபட்ட அரசியல் பிரமுகர்கள்
பதிவு : ஜூன் 30, 2021, 01:32 PM
ஆம்பூரில், சிக்கன் ஃப்ரை சேமியாவுக்காக பிரியாணிக் கடையை, அரசியல் பிரமுகர்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் ரயில் நிலையம் முன்பு பிரபல பிரியாணி கடை உள்ளது. மதிய நேரத்தில் அந்தக் கடைக்குள் நுழைந்த ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த அதிமுக கிளைச் செயலாளர் தயாளன் மற்றும் காங்கிரஸ் பிரமுகர் பிரபு ஆகியோர் கடை உரிமையாளர்கள் சாலிக் மற்றும் சர்தார் ஆகியோரிடம் சிக்கன் ஃப்ரை சேமியா கொடுக்குமாறு கேட்டுள்ளனர்.

அவர்களோ, சிக்கன் ஃப்ரை சேமியா மாலையில் தான் தயார் செய்யப்படும் எனவும், தற்போது பிரியாணி மட்டுமே உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். உடனே தயாளனும் பிரபுவும், தங்களுக்கு சிக்கன் ஃப்ரை சேமியாதான் வேண்டும் என்று அடம்பிடித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடை உரிமையாளர் சாலிக்கை மிரட்டிய தயாளன், திடீரென்று அவரை சரமாரியாகத் தாக்கத் துவங்கியுள்ளார்... அத்துடன் குளிர்பான பாட்டில்களைக் கொண்டும் கண்மூடித் தனமாக தாக்கியுள்ளார். உடன் வந்த பிரபுவும் சேர்ந்து தாக்கிய நிலையில், சாலிக்கிற்கு கை முறிவு ஏற்பட்டு நிலை குலைந்து போனார்.

அத்துடன், அரசியல் பிரமுகர்கள் இருவரும் இணைந்து கடையில் இருந்த மேஜை நாற்காலிகளை அடித்து நொறுக்கியுள்ளனர். இத்தனைக் காட்சிகளும் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த நிலையில், அந்தக் காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடை உரிமையாளர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிக்கன் ஃப்ரை சேமியாவிற்கு பதிலாக பிரியாணி சாப்பிட கூறியதற்காக, அரசியல் பிரமுகர்கள் இருவர் பிரியாணிக் கடையை அடித்து நொறுக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிற செய்திகள்

4 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சேர்ந்து வாழ வந்த மனைவி தற்கொலை - கணவரை கைது செய்ய வலியுறுத்தல்

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்ற மனைவி மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ வந்த ஒரே மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் நடந்துள்ளது.

2 views

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு துணை தேர்வு - ஹால்டிக்கெட் வெளியிட்டது தேர்வுத்துறை

தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட், தேர்வுத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

8 views

"3-வது அலை வராமல் தடுப்போம்" - முதலமைச்சர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

தமிழக அரசு சார்பில் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரசாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

20 views

சோதனையில் போலீசாரை தாக்க முயற்சி - கத்தியால் தாக்க வந்த இரு இளைஞர்கள் கைது

திண்டிவனம் அருகே வாகன சோதனையின் போது சப் இஸ்பெக்டரை கத்தியால் தாக்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.

10 views

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொலை - கொலைக்கான காரணம் குறித்து விசாரணை

காஞ்சிபுரம் அருகே முன்னாள் ஊராட்சித் தலைவரின் மரணம் குறித்து போலீசர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

93 views

மீண்டும் கொரோனா பரவல் எதிரொலி - சென்னையில் முக்கிய வணிக பகுதிகள் மூடல்

சென்னை மாநகரின் முக்கிய வணிக பகுதிகளில் கடைகள் திறக்கப்பட்டுள்ளதா என மண்டல கண்காணிப்பு குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

184 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.