வரதட்சணை கொடுமைக்கு பலியாகும் பெண்கள் - கார், நகை, பணம் கேட்டு தொடரும் வன்முறை
பதிவு : ஜூன் 30, 2021, 10:37 AM
கேரளாவில் வரதட்சணையால் பலியாகும் பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் இதற்கு எதிரான குரல்களும் ஓங்கி ஒலித்து வருகிறது...
கேரளாவில் வரதட்சணையால் பலியாகும் பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் இதற்கு எதிரான குரல்களும் ஓங்கி ஒலித்து வருகிறது...கல்வியறிவில் முன்னணியில் உள்ள மாநிலமாக இருக்கும் கேரளா சமீபத்தில் பெண்களின் கொடூர மரணத்தால் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது... இந்த மரணங்கள் அனைத்தும் வரதட்சணை காரணமாக நடக்கிறது என்பது தான் கொடூரத்தின் உச்சம்.. அதற்கு சாட்சியாக இருக்கிறது விஸ்மயாவின் மரணம்... கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த விஸ்மயா, வரதட்சணை கூடுதலாக கேட்டு கணவனால் துன்புறுத்தப்பட்டு உயிரிழந்தார்...இதேபோல் தான் கடந்த ஆண்டு வரதட்சணை கொடுமைக்கு கொடூரமான முறையில் தன் உயிரை விட்டார் உத்ரா. அடூர் பகுதியில் கடந்த 2020 மே 7ம் தேதி தன்  மனைவி உத்ரா மீது பாம்பை விட்டு கடிக்க வைத்து கொலை செய்தார் சூரஜ்.. அதுவும் 40 சவரன் நகைகள், 5 லட்ச ரூபாய் ரொக்கம், கார், சொத்துகள் என எல்லாமே வரதட்சணையாக கொடுத்த பிறகும் கூடுதலாக பணம், நகை கேட்டு இந்த கொடூர கொலை நடந்தது கேரளாவையே உலுக்கியது...கொலை செய்த கணவர் சூரஜ், சூரஜின் தாய், சகோதரி, பாம்பாட்டி என பலரும் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் தான் இந்த ஆண்டு விஸ்மயாவின் மரணம் ஆறாத வடுவை ஏற்படுத்தி இருக்கிறது... நகைகள், சொத்து, கார், பணம் என எல்லாம் தந்த போதிலும் ஆசை அடங்காத கணவர் கிரண்குமாரால் பெரும் கொடுமைகளை சந்தித்து கடைசியில் தன் உயிரை விட்ட விஸ்மயாவின் மரணம் பலரை கேள்வி எழுப்ப வைத்திருக்கிறது...இந்த பாதிப்பிலிருந்து மீள்வதற்குள் விழிஞ்ஞம் பகுதியை சேர்ந்த அர்ச்சனா என்ற பெண் தற்கொலை செய்து  கொண்டார். காதல் திருமணம் செய்து கொண்ட இவருக்கு 3 லட்ச ரூபாய் பணம் கேட்டு கணவர் சுரேஷ் செய்த கொடுமையே தற்கொலை வரை கொண்டு போய் விட்டது. இந்த விவகாரத்தில் பெரும் போராட்டத்திற்கு பிறகு சுரேஷ் கைது செய்யப்பட்டார். இதேபோல் ஆலப்புழா மாவட்டம் வள்ளிக்குந்நம் பகுதியை சேர்ந்த 19 வயதான சுஜித்ரா, ராணுவ வீரரான விஷ்ணுவை கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் போது ஒரு கிலோ தங்க நகைகள், கார் உள்ளிட்டவை வழங்கிய போதும் கூடுதலாக 10 லட்ச ரூபாய் பணம் கேட்டு மனைவியை துன்புறுத்தினார் விஷ்ணு. இதனால் விரக்தியடைந்த சுஜித்ரா, தன் உயிரை மாய்த்துக் கொண்டார். கேரளாவின் பிரபல நடிகரான ராஜன் பி.தேவின் மகன் உன்னி, பிரியங்கா என்ற பெண்ணை காதலித்து மணமுடித்த நிலையில் அதே பாணியில் வரதட்சணை கொடுமை நடக்கவே பிரியங்காவும் தற்கொலை செய்து கொண்டார். இப்படியாக சமீப காலங்களில் 4 பெண்கள் வரதட்சணைக்கு பலியாகி இருக்கிறார்கள். கேரளாவில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் 66 பெண்கள் வரதட்சணை கொடுமைக்கு பலியாகி இருக்கிறார்கள். இந்த அடுத்தடுத்த சம்பவங்கள் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இதுதொடர்பான வழக்குகளை விசாரிக்க பெண் ஐபிஎஸ் அதிகாரி நிஷாந்தினி  நியமிக்கப்பட்டுள்ளார். பெண்கள் அமைப்பினர் பலரும் வரதட்சணைக்கு எதிராக கைகோர்த்திருக்கின்றனர். இதனிடையே, வரதட்சணை வாங்காமல் பெண்களுக்கு நீதியும் சமத்துவமும் இருக்கும் ஒரு கேரளாவை உருவாக்குவோம் என  முன்னணி நடிகர் மோகன்லால் வரதட்சணைக்கு எதிராக  வெளியிட்டுள்ள வீடியோவும் வரவேற்பை பெற்றிருக்கிறது. 
முன்னணி நடிகர்கள் பலரும் வரதட்சணை கொடுமைக்கு எதிராக தங்கள் குரலை பதிவு செய்திருக்கும் நிலையில் இது முற்றிலும் ஒழிய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு... 

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

192 views

ஒளிப்பதிவு திருத்த மசோதா 2021 - கமலை தொடர்ந்து சூர்யாவும் எதிர்ப்பு

ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவு, கருத்து சுதந்திரத்தை நெறிக்கும் செயல் என நடிகர் சூர்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

122 views

சொத்து தகராறு - தந்தையை வெட்டிய மகன்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சொத்து தகராறில் தந்தையை, மகனே வெட்டிய நிலையில், இது தொடர்பான வீடியோ வேகமாக பரவி வருகிறது.

72 views

"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு

இந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

58 views

மும்பையில் தொடரும் கனமழை - மரைன் டிரைவ் பகுதியில் கடல் சீற்றம்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பெய்து வரும் தொடர் மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

30 views

ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஒலிம்பிக் ஜோதியை சுமந்து உற்சாகம்

ஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் உற்சாகத்துடன் நடந்தது.

26 views

பிற செய்திகள்

அமர்நாத் மலை பகுதியில் மேக வெடிப்பு - குகை அருகே ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளம்

ஜம்மூ காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகை அருகே மேக வெடிப்பு காரணமாக தீடீர் வெள்ளம் ஏற்பட்டது.

3 views

"எதிர்க்கட்சிகள் வலிமையாக அமைந்தால் வரலாறு" - சோனியாவை சந்தித்த பின் மம்தா பானர்ஜி பேட்டி

எதிர்க்கட்சிகள் வலிமையாக அமைந்தால் வரலாறு படைக்கலாம், 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு அதுவே நம்பிக்கை என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

3 views

பெகாசஸ் விவகாரம் - ராகுல்காந்தி கேள்வி

பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்தி, செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதா இல்லையா என, பிரதமர் மோடி,உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்திட வேண்டும் என, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.

3 views

"கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றுங்கள்" - மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் கடிதம்

எதிர்வரும் பண்டிகைகளை முன்னிட்டு கூட்டம் உள்ள இடங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்ற மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார்.

7 views

ஆபாச படங்கள் எடுத்த வழக்கு - ராஜ் குந்த்ராவிற்கு 14 நாள் நீதிமன்ற காவல்

ஆபாச படங்கள் எடுத்த குற்றச்சாட்டில் கைதாகியுள்ள நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

21 views

இந்தியாவில் கொரோனா பாதிப்பு திடீர் உயர்வு - ஒரே நாளில் 47 % தொற்று அதிகரிப்பு

இந்தியாவில் 4 மாதங்களுக்கு பின்னர் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, அதிர்ச்சியளிக்கும் விதமாக ஒரே நாளில் 47 சதவீதம் அதிகரித்துள்ளது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.