"ஏரியில் பழங்கால கிணறு கண்டுபிடிப்பு" - தூர் வாரும் போது தெரிந்ததாக தகவல்
பதிவு : ஜூன் 30, 2021, 10:27 AM
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே ஏரியை தூர் வாரும் போது பழங்கால கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு அருகே உள்ள நல்லம்பல் கிராமத்தில் 56 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய ஏரி உள்ளது. சுற்றுலா பகுதியான நல்லம்பல் ஏரி , தூர்வாரப்படாததால் பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது. தற்போது காவிரியில் தண்ணீர்  திறக்கப்பட்டுள்ள நிலையில் ஏரியை தூர் வாரும் பணிகள் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் நடைபெற்று வருகின்றன. 

தூர்வாரும் போது ஏரியின் ஒரு பகுதியில் பழமையான  கிணறு  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் தூர்வாரும் பணிகள்  நிறுத்தப்பட்டு ஏரியின் மற்ற இடங்களில் நடைபெற்று வருகின்றன. பழமையான கிணறு குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு எந்த தகவலும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஏரியை தொல்லியல் துறையின் கண்காணிப்பில் தூர்வாரி ஆய்வு செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிற செய்திகள்

+2 தேர்வு - மாற்று திறனாளிகளுக்கு விலக்கு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பன்னிரெண்டாம் வகுப்பு துணை தேர்வு எழுதுவதில் இருந்து மாற்றுத்திறன் உடைய தனித்தேர்வர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் விலக்கு அளித்துள்ளார்.

1 views

4 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சேர்ந்து வாழ வந்த மனைவி தற்கொலை - கணவரை கைது செய்ய வலியுறுத்தல்

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்ற மனைவி மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ வந்த ஒரே மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் நடந்துள்ளது.

9 views

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு துணை தேர்வு - ஹால்டிக்கெட் வெளியிட்டது தேர்வுத்துறை

தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட், தேர்வுத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

10 views

"3-வது அலை வராமல் தடுப்போம்" - முதலமைச்சர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

தமிழக அரசு சார்பில் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரசாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

22 views

சோதனையில் போலீசாரை தாக்க முயற்சி - கத்தியால் தாக்க வந்த இரு இளைஞர்கள் கைது

திண்டிவனம் அருகே வாகன சோதனையின் போது சப் இஸ்பெக்டரை கத்தியால் தாக்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.

10 views

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொலை - கொலைக்கான காரணம் குறித்து விசாரணை

காஞ்சிபுரம் அருகே முன்னாள் ஊராட்சித் தலைவரின் மரணம் குறித்து போலீசர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

98 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.