டிக் டாக் பிரபலங்களுக்கு வலுக்கும் சிக்கல் - சர்ச்சையான யூட்யூப் சேனல் முடக்கப்படுமா?
பதிவு : ஜூன் 29, 2021, 08:49 PM
பப்ஜி மதன் விவகாரத்தை தொடர்ந்து பிரபல டிக் டாக் பதிவர்களுக்கும் சிக்கல் வலுத்து வருகிறது...
ஆபாசமான பதிவுகளை இணையத்தில் ஏற்றி பணம் சம்பாதித்த அவர்களின் பக்கத்தை முடக்க கோரி தொடர்ச்சியாக கண்டன குரல்கள் ஒலித்து வருகின்றன. இது குறித்த ஒரு தொகுப்பை இப்போது பார்க்கலாம்.... டிக் டாக் செயலி முடக்கப்பட்ட போதிலும் அதன் முகமாக கொண்டாடப்பட்ட பலரும் இன்றும் இணையத்தில் தொடர்பில் தான் உள்ளனர்... இன்ஸ்டாகிராம், மோஜ் உள்ளிட்ட தளங்களில் தீவிரமாக இயங்கி வரும் இவர்கள், தங்களுக்கென ஒரு யூட்யூப் சேனலை வைத்துக் கொண்டு தாங்கள் விரும்பியதை எல்லாம் பேசி வந்தனர்...ஒருவரை ஒருவர் மாறி மாறி திட்டிக் கொள்வது இவர்களின் வழக்கம். அதுவும் ஆபாசமான வார்த்தைகளால் அவர்கள் பேசுவதற்கு எதிர்வினை வருவதும், கமெண்ட் பாக்ஸ்கள் நிரம்பி வழிவதும், இவர்களுக்கு யூட்யூப் தரப்பில் இருந்து வருமானத்தை வரவைத்தது...இதனால் எந்த வரைமுறைகளும் இன்றி அவர்கள் இணையத்தில் உலா வந்தனர். இந்த சூழலில் தான் கடந்த சனிக்கிழமை ராமநாதபுரம் எஸ்.பி.அலுவலகத்தில் ஜி.பி.முத்து, ரவுடி பேபி சூர்யா, சிக்கந்தர், திருச்சி சாதனா ஆகிய 4 பேரால் கலாச்சார சீரழிவு ஏற்படுவதாக புகார் அளிக்கப்பட்டது. இதனிடையே சர்ச்சைக்குரிய பதிவுகளை வெளியிடும் டிக் டாக் பிரபலங்கள் 8 பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது...ஏற்கனவே உள்ள 4 பேருடன் திவ்யா, சேலம் மணி, டிஜேபி என்ற பெண், சுகந்தி ஆகிய 4 பேரை கூடுதலாக சேர்த்து மொத்தம் 8 பேர் மீது நடவடிக்கை கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது...கார்த்தி மாமா.. என இணையத்தில் சுற்றி வரும் திவ்யா, சமீபத்தில் திருநங்கைகளை பற்றி அவதூறாக பேசி அடிவாங்கிய வீடியோவே இணையத்தில் லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டது. இப்படியாக நெகடிவ் பப்ளிசிட்டியால் இணையத்தில் தங்களை செலிபிரிட்டியாக கருதும் இவர்கள் எந்த நேரத்திலும் முடக்கப்படலாம் என்ற கருத்தும் உள்ளது...பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு என்பதால் ஸ்மார்ட் போன்கள் அவர்களின் கைகளில் இருக்கும் சூழலில் இதுபோன்ற அத்துமீறும் வீடியோக்கள் அவர்களை பாழாக்கும் என்பதே அடுத்தடுத்து புகார் அளிப்பவர்களின் எண்ணமாக உள்ளது....ஆபாசமாக பேசியதாக சிக்கலில் உள்ள பப்ஜி மதனை போல டிக் டாக் பிரபலங்களுக்கும் சிக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது... எனவே அவற்றை சரிசெய்ய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் நோக்கமும் கூட... 

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

246 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

199 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

132 views

பிற செய்திகள்

சென்னையில் 2வது விமான நிலையம்? - விமான நிலைய விரிவாக்கப் பணி மும்முரம்

சென்னையில் 2-வது விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தை தமிழக அரசு இன்னும் இறுதி செய்யாததால், அதற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

49 views

எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த சோதனையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை -அமைச்சர் செந்தில் பாலாஜி

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்பு சோதனையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி எதுவும் இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து உள்ளார்.

21 views

"மழை நீரை முழுமையாக சேமிக்க நடவடிக்கை" - முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்

மழை காலத்தில் கிடைக்கும் நீரை முழுமையாக சேமித்து பயன்படுத்தும் வகையில், புதிய நீர் சேமிப்பு கட்டுமானங்களை அமைத்திட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்

15 views

"புதிய மாநகராட்சி, நகராட்சி விரைவில் அறிவிப்பு" - அமைச்சர் கே.என்.நேரு

புதிய மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் விரைவில் அறிவிக்கப்பட்டதும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் தொடங்கப்பட்டு, இந்த ஆண்டிற்குள் நடத்தி முடிக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

35 views

"சென்னை, கரூரில் சொந்த வீடு இல்லை" - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை விவகாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன் என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்....

30 views

மீண்டும் லாட்டரி சீட்டு - எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்

தமிழகத்தில் ஏழை எளிய மக்களை பாதிக்கக்கூடிய லாட்டரி சீட்டு விற்பனையை தமிழக அரசு மீண்டும், கொண்டு வந்தால் மக்களின் மிகப் பெரிய எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

51 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.