ஊரடங்கு வரும் 21ஆம் தேதி வரை நீட்டிப்பு - 27 மாவட்டங்களுக்கு மட்டும் கூடுதல் தளர்வுகள்
பதிவு : ஜூன் 11, 2021, 10:11 PM
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களுக்கு கூடுதலாக மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவை வருகின்ற 14 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.
இதன்படி, அனைத்து மாவட்டங்களிலும், ஊரடங்கின் போது செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை கட்டாயம் என்றும், குளிர் சாதன வசதி இல்லாமல் கடைகள் செயல்படுவது அவசியம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
மேலும், வாடிக்கையாளர்கள் பயன்படுத்து வகையில் சானிடைசர் கட்டாயமாக வைக்கப்படுவதோடு, சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிதல் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 27 மாவட்டங்களில் மட்டும் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சலூன் மற்றும் அழகு நிலையங்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி, கல்லூரி, பல்கலைகழகங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
பூங்காக்கள், விளையாட்டு திடல்களில் காலை 6 மணி முதல் 9 மணி வரை நடைபயிற்சிக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.கண் கண்ணாடி விற்பனை, பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்,வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை, பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம்  2 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் 20% பணியாளர்கள் அல்லது 10 பணியாளர்களுக்கு மட்டும் வைத்து இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6922 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1760 views

கொடைக்கானலில் ரூ.100ஐ தாண்டிய பெட்ரோல் விலை

தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

8 views

பிற செய்திகள்

ஆன்லைன் வர்த்தகத்தில் மோசடி!..மக்களே உஷார்!

ஆன்லைன் வர்த்தகத்தில் மோசடி!..மக்களே உஷார்!

5 views

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 15,108 பேருக்கு கொரோனா உறுதி

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 15,108 பேருக்கு கொரோனா உறுதி

11 views

மேட்டூர் அணை நீர் திறப்பு - டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி

மேட்டூர் அணையை திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், 8 கண் மதகுகள் வழியாக சீறிப்பாய்ந்த நீரை மலர் தூவி வரவேற்றார்.

12 views

செலவுகளை 20% குறைக்க கோரும் மத்திய நிதியமைச்சகம் - மத்திய அமைச்சகங்களுக்கு கோரிக்கை

நிதிப்பற்றாக்குறை காரணமாக, அனைத்து மத்திய அமைச்சகங்கள் மற்றும் அதனை சார்ந்த துறைகள், தங்களது செலவுகளை 20 சதவீதம் குறைக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சரகம் கேட்டுக் கொண்டுள்ளது. இதைப் பற்றிய விவரங்களை தற்போது பார்க்கலாம்.

10 views

"9ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் சேர்க்கை" - உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தகவல்

9ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

20 views

ஏ.டி.எம். கட்டண உயர்வு - மக்கள் கருத்து

ஏடிஎம் சேவைக்கான கட்டணத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தி உள்ள நிலையில், அது குறித்து மக்கள் கூறுவதை தற்போது பார்க்கலாம்....

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.