ஊரடங்கு வரும் 21ஆம் தேதி வரை நீட்டிப்பு - 11 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள்
பதிவு : ஜூன் 11, 2021, 10:01 PM
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தொற்று குறையாத 11 மாவட்டங்களுக்கு ஏற்கனவே உள்ள தளர்வுகளுடன் கூடுதலாக சில தளர்வுகள் மட்டும் வழங்கப்பட்டுள்ளன
வரும் 14 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் தளர்வுகளின் விபரங்களை தற்போது பார்க்கலாம்... தமிழகத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் கொரோனா தொற்று குறையாத நிலை உள்ளது. இதனை அடிப்படையாக வைத்து இந்த 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய மேலும் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.ஏற்கனவே உள்ள தளர்வுகளுடன், எலெக்ட்ரிஷியன், பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர், தச்சர் உள்ளிட்ட சுயதொழில் செய்வோர் சேவை கோருபவர் வீடுகளுக்கு  காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இ-பதிவுடன் பணிபுரியலாம் .தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள், அலுவலகம், வீடுகள் மற்றும் அடுக்கு மாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் இ-பதிவுடன் அனுமதிக்கப்படும்.இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வாடகை வாகனங்கள், டாக்சிகள், ஆட்டோக்களில் இ - பதிவுடன் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வாடகை டாக்சிகளில் ஓட்டுநருடன் சேர்த்து 3 பயணிகள், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து 2 பயணிகள் பயணிக்கலாம். ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்ளுக்கு இடுபொருட்களை தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 25 சதவீத பணியாளர்களுடன் வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.வேளாண் உபகரணங்கள், பம்பு செட் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படலாம்கண்கண்ணாடி விற்பனை, பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படலாம் மண்பாண்டம் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம்...இந்த 11 மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகள், சலூன்கள் திறக்க அனுமதியில்லை என்றும் அரசு அறிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6916 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1747 views

ஹாரிபாட்டர் ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் : திரைப்படத்தில் வரும் பொருட்கள் நிஜத்தில்..

புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான "ஹாரி பாட்டர்" ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் ஒன்று காத்திருக்கிறது.

82 views

பொருட்களை பரிமாற்றம் செய்யும் விண்கலம்... வெற்றிகரமாக சீனா ஏவியது

விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு பொருட்களை பரிமாற்றம் செய்யும் விண்கலத்தை சீனா வெற்றிகரமாக ஏவி உள்ளது.

37 views

பிற செய்திகள்

ஜூன் 14-ம் தேதி முதல் எவை இயங்கும், எவை இயங்காது..!

ஜூன் 14-ம் தேதி முதல் எவை இயங்கும், எவை இயங்காது..!

57 views

தடகள வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை - நாகராஜனின் ஜாமின் மனு தள்ளுபடி

தடகள வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பயிற்சியாளர் நாகராஜனின் ஜாமின் மனுவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

12 views

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

60 views

21 நகரங்களில் விமான சேவை அதிகரிப்பு - விமானங்களில் பயணிப்பவர் எண்ணிக்கை உயர்வு

கொரோனா இரண்டாவது அலை பரவல் குறைந்ததையடுத்து, 21 நகரங்களுக்கு 104 விமானங்களின் சேவை அதிகரித்துள்ளது.

25 views

"என் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு; சமூக வலைதளங்களில் நான் இல்லை" - நடிகர் சார்லி மனு

தன் பெயரில் தொடங்கப்பட்ட போலியான ட்விட்டர் கணக்கை நீக்கக் கோரி நடிகர் கார்லி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

19 views

கொடிங்கால் வாய்க்கால் தூர்வாரும் பணிகள்- முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு

இதனை தொடர்ந்து, திருச்சி மாவட்டம், புலிவலம் பகுதியில், உய்யகொண்டான் ஆற்றில் உள்ள புதிய மணல் போக்கி மற்றும் கொடிங்கால் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை, முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டார்.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.