24 நாட்களில் முதலீடு இரட்டிப்பு - இந்தியர்களுக்கு வலை விரிப்பு
பதிவு : ஜூன் 11, 2021, 05:59 PM
இந்தியாவில் முதலீடு இரட்டிப்பாகும் என செல்போன் செயலிகள் மூலம் சீனர்கள் 150 கோடியை சுருட்டிய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவின் வேட்டைக்கு மத்தியில், சீனர்களின் பண மோசடி வேட்டை இந்தியாவில் அரங்கேறுவது தொடர்கதையாக உள்ளது.ஒருவனை ஏமாற்ற வேண்டும் என்றால், முதலில் அவன் ஆசையை தூண்ட வேண்டும் என்ற திரைப்பட வசனத்தை கட்சிதமாக நிறைவேற்றி வருகிறார்கள் சீனர்கள். இதற்காக அவர்கள் கையிலெடுக்கும் ஆயுதம் செல்போன் செயலிகள்... ஏற்கனவே கடன் செயலி என ஆசையைகாட்டிய சீனர்கள், இப்போது முதலீடு இரட்டிப்பாகும் என கைவரிசையை காட்டியுள்ளனர்.இதற்காக  பவர்பேங்க், ஈ- இஸட்-பிளான் என இரு செயலிகளை வெளியிட்டு, 24 நாட்களில் முதலீடு என்ற கவர்ச்சி விளம்பரத்தை அறிவித்து உள்ளனர்.செயலியை தரவிறக்கம் செய்வோரிடம் கேரமா மற்றும் தொடர்பு விபரங்களை அணுகும் அனுமதியை பெற்றுவிடுகிறது. பின்னர் பயன்படுத்துவோர் முதலில் முதலீடு செய்யும் போது  5 முதல் 10 சதவீதம் வரையிலான தொகை திருப்பி வழங்கப்பட்டுள்ளது. பணம் திரும்ப கிடைத்து நம்பிக்கை பெற்றதும் பலர் லட்சக்கணக்கில் முதலீடு செய்து உள்ளனர். அவ்வாறு செய்யும் போது அவர்களுடைய கணக்கு முடங்கியுள்ளது. இதனையடுத்து சமூக வலைதளங்களில் தங்களுடைய மனக்குமுறலை வெளியிடவும் சைபர் கிரைம் போலீசார் விசாரிக்க தொடங்கியிருக்கின்றனர். அப்போது இந்த செயலிகளின் மெயின் சர்வர் சீனாவில் இருப்பதும், அங்கிருந்து கையாளப்படுவதும் தெரியவந்திருக்கிறது. 
மேலும்,  பவர் பேங்க் செயலி, கூகுள் பிளேயில் அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளில் 4-வது இடம் உள்ளதும் தெரியவந்துள்ளது.  தொடர்ந்து கண்காணிப்பையும், விசாரணையையும் தீவிரப்படுத்திய டெல்லி போலீசார், திபெத்திய பெண், 2 பட்டைய கணக்காளர்கள் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் உதவியுடன்  சீனர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் பல்வேறு வங்கி கணக்கை வைத்திருந்ததும், பணம் கைமாறுவது தெரியாமல் போலியாக 110 செல் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு இருந்ததும் தெரியவந்து உள்ளது.  பெங்களூரு, டெல்லி, ஒடிசா, அசாம், மேற்கு வங்கம், சூரத் உள்பட பல இடங்களில் மோசடி கும்பல் செயல்படுவது தெரியவந்திருக்கிறது. இந்த மோசடி கும்பல் 2 மாதங்களில் 5 லட்சத்திற்கும் அதிமானோரிடம் 150 கோடிக்கும் அதிகமான தொகையை மோசடியாக சுருட்டி உள்ளனர்.  

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6915 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1745 views

ஹாரிபாட்டர் ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் : திரைப்படத்தில் வரும் பொருட்கள் நிஜத்தில்..

புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான "ஹாரி பாட்டர்" ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் ஒன்று காத்திருக்கிறது.

80 views

பொருட்களை பரிமாற்றம் செய்யும் விண்கலம்... வெற்றிகரமாக சீனா ஏவியது

விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு பொருட்களை பரிமாற்றம் செய்யும் விண்கலத்தை சீனா வெற்றிகரமாக ஏவி உள்ளது.

28 views

தடுப்பூசிகள் தருவதாக அமெரிக்கா உறுதி - அமெரிக்க துணை அதிபருடன் பிரதமர் பேச்சு

பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் இருவரும் தொலைபேசியில் கலந்துரையாடி உள்ளனர்.

14 views

பிற செய்திகள்

காதலியை மறைத்து வைத்த காதலன் - 11 ஆண்டுகளாக ஒரே வீட்டில் தனி குடும்பம்

கேரளாவில் ஒரே வீட்டில் குடும்பத்திற்கு தெரியாமல் இளைஞர் ஒருவர் தனது காதலியுடன் 11 ஆண்டுகள் குடும்பம் நடத்திய விசித்திர சம்பவம் அரங்கேறியுள்ளது.

4 views

மூத்த தம்பதியர் வெட்டிக் கொலை - முகமூடி அணிந்து வந்த கும்பல் வெறிச்செயல்

கேரளாவில் வயதான தம்பதியரை முகமூடி அணிந்த கும்பல் கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

4 views

பெட்ரோல், டீசல் விலை உயர்வு - காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம்

பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டத்தை நடத்தி வருகின்றது.

25 views

கேரள தங்க கடத்தல் வழக்கு - தொடரும் அதிரடி.. ஆதாரங்களை தேடும் விசாரணை ஆணையம்

கேரளாவில் அமலாக்க இயக்குநரகத்திற்கு எதிரான நீதி விசாரணையில் ஆதாரங்கள் இருந்தால் சமர்ப்பிக்கலாம் என விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.

14 views

டெல்லியில் நள்ளிரவில் வீசிய புழுதி புயல்... விவசாயிகளின் கூடாரங்கள் சேதம்

டெல்லியில் நள்ளிரவில் வீசிய புழுதி புயல் மற்றும் மழையால் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளின் கூடாரங்கள் சேதமடைந்தன.

26 views

"காங்கிரசுக்கு பெரிய அறுவை சிகிச்சை தேவை" காங். மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கருத்து

காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய அறுவை சிகிச்சை தேவை என காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கருத்து தெரிவித்து உள்ளார்.

43 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.