காதலியை மறைத்து வைத்த காதலன் - 11 ஆண்டுகளாக ஒரே வீட்டில் தனி குடும்பம்
பதிவு : ஜூன் 11, 2021, 05:43 PM
கேரளாவில் ஒரே வீட்டில் குடும்பத்திற்கு தெரியாமல் இளைஞர் ஒருவர் தனது காதலியுடன் 11 ஆண்டுகள் குடும்பம் நடத்திய விசித்திர சம்பவம் அரங்கேறியுள்ளது.
இருவரும் பார்க்காது காதல், இணைய காதல் என சினிமாவில் காட்டப்பட்ட காதல் காட்சிகள் எல்லாம் தற்போது நிஜமாகி வருகிறது.  ஜானகி ராமன் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி ஒரே வீட்டில் வீட்டுக்கே தெரியாமல், பெண் ஒருவருடன் குடும்பம் நடத்தி குழந்தையும் பெற்றிருப்பார்...கில்லி படத்தில் ஹீரோ விஜய், திரிசாவை வீட்டில் யாருக்கும் தெரியாமல் தன்னுடைய அறையில் மறைத்து வைத்திருப்பார்... தற்போது அதுபோன்ற சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது.கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அயிலூர் கிராமத்தை சேர்ந்த இளைஞர் ரகுமான். கடந்த 2010-ம் ஆண்டு தான் காதலித்த சஜிதா என்ற பெண்ணை வீட்டில் ஆளில்லாத போது அழைத்து வந்து மறைத்து வைத்து உள்ளார்.அப்போது 18 வயதே ஆயிருந்த சஜிதாவை காணவில்லை என அவரது பெற்றோர் கொடுத்த புகாரில் விசாரித்த நெம்மாரா போலீசாரால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை...தனது காதலியை, பெற்றோர், தம்பி, தங்கை பார்த்துவிடாத வகையில் தன்னுடைய அறையில் பல பாதுகாப்பு ஏற்பாடுகளை ரகுமான் செய்துள்ளார். தன்னுடைய அறையின் கதவை யாரும் தொட்டால் ஷாக் அடிக்க ஏற்பாடு செய்திருக்கிறார்.எலக்ட்ரிஷீஸியான ரகுமான் தன்னுடைய அறையின் கதவை சுவிட்சை அழுத்தினால் திறக்கும் வகையில் மாற்றியிருக்கிறார்.காதலி வேறு யாருக்கும் தெரியாமல் குளிக்கவும், கழிவறைக்கு செல்லவும் ஏற்ற வகையில் ஜன்னல் கம்பியை அகற்றிவிட்டு பலகை கொண்ட கதவை மட்டும் பொருத்தியுள்ளார். அதனை பயன்படுத்தி வீட்டில் யாரும் இல்லாத போதும், இரவு நேரங்களிலும்  சஜிதா வெளியே வந்திருக்கிறார்.காதலிக்காக டிவி பார்க்கவும் சிறப்பு ஏற்பாட்டை
செய்திருக்கிறார், ரகுமான்கில்லி படத்தில் விஜய் குடும்பத்துடன் இருந்து சாப்பிடாமல், திரிசாவுக்கு உணவை கடத்துவார். அதேபோன்று ரகுமானும் வீட்டில் சமைக்கும் உணவுகளை சஜிதாவுக்கு கடத்தியுள்ளார். ஜானகி ராமன் படத்தில் குழந்தை சத்தம் கேட்கும் போது எல்லாம், செந்திலை ஏமாற்ற கவுண்டமனி படாதபாடு படுவார். இதுபோன்ற பிரச்சினை ஏற்படாமல் இருக்க ரகுமான் தனது அறையில்  டிவி சத்தத்தை அதிகமாக வைத்து பார்த்துள்ளார். இவ்வாறாக பெற்றோருக்கே தெரியாமல் 11 ஆண்டு ஒரே வீட்டில் ரகுமான் குடும்பம் நடத்தியுள்ளார். ஆனால் ரகுமானின் நடவடிக்கைகளை பார்த்து அதிர்ச்சியடைந்த அவருடைய பெற்றோர் அவரை அடிக்கடி பேய் ஓட்ட அழைத்துச் சென்றுள்ளனர். நிலை விபரீதம் ஆவதை புரிந்துக் கொண்ட ரகுமான் காதலியுடன் வீட்டைவிட்டு வெளியேறி விதானசேரி கிராமத்திற்கு சென்றுள்ளார். அப்போது போலீசில் புகாரளித்துவிட்டு ரகுமானை தேடிய அவருடைய சகோதர், இருவரையும் கண்டுபிடித்ததால் இவ்விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.விசாரணையின் போது இந்த கதையை கேட்டு போலீசார் தலைசுற்றி கிறங்கியுள்ளனர். இருவரும் இணைந்து வாழ நீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து இனி சுதந்திரமாக வாழப்போவதாக ரகுமானும், சஜிதாவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6956 views

வடகொரியாவில் கடும் உணவுப்பற்றாக்குறை - ஒப்புக் கொண்ட அதிபர் கிம் ஜாங் உன்

உலகின் பார்வையிலிருந்து தப்பி, ஒரு மர்மப் பிரதேசமாகவே விளங்கும் நாடு வட கொரியா... அங்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக முதன் முறையாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக் கொண்டுள்ளார்...என்னதான் நடக்கிறது வட கொரியாவில்...? இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

137 views

ஹாரிபாட்டர் ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் : திரைப்படத்தில் வரும் பொருட்கள் நிஜத்தில்..

புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான "ஹாரி பாட்டர்" ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் ஒன்று காத்திருக்கிறது.

108 views

அபூர்வ நோயால் போராடும் குழந்தை ரூ.16 கோடிக்கு மருந்து வாங்க உதவி கோரி உயர்நீதிமன்றத்தை நாடிய தந்தை

அபூர்வ நோயால் போராடும் குழந்தையின் தந்தை பணஉதவி கேட்டு, கேரள உயர்நீதிமன்ற கதவுகளை தட்டியுள்ளார்.ம

87 views

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்றரை வயது குழந்தை - ஆக்ராவில் திக் திக் நிமிடங்கள் !

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்றரை வயது குழந்தை - ஆக்ராவில் திக் திக் நிமிடங்கள் !

85 views

பிற செய்திகள்

உலகில் மிக மகிழ்ச்சியான நாடு பின்லாந்து - இந்தியர்களை ஈர்க்க திட்டம்

மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள பின்லாந்தில், பணியாளர்கள் பற்றாக்குறை கடுமையாக நிலவி வருகிறது. இதைப் பற்றிய விவரங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்

5 views

செப்.10 முதல் ஜியோபோன் நெக்ஸ்ட் - முகேஷ் அம்பானி அறிவிப்பு

செப்டம்பர் 10ஆம் தேதி முதல் ஜியோபோன் நெக்ஸ்ட் என்ற புதிய ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வர உள்ளதாக முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.

180 views

தேசத்துரோக வழக்கில் விசாரணை நிறைவு - இன்று 3-வது முறையாக ஆயிஷா சுல்தானா ஆஜர்

தேசத்துரோக வழக்கில் இன்று மூன்றாவது முறையாக ஆஜரான ஆயிஷா சுல்தானா, விசாரணை முடிந்து விடுவிக்கப்பட்டார்.

6 views

ஜூலை-23 ல் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி - இந்தியா சார்பில் "தீம்" பாடல் வெளியீடு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக இந்திய அணிக்கான 'தீம்' பாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

28 views

பெஞ்ச் கிளர்க்-ஆக இருந்து கடின உழைப்பால் நீதிபதியாக உயர்ந்த பதருதீன்

கேரளாவில் பெஞ்ச் கிளர்க்காக தனது பணியைத் துவங்கி, உயர்நீதிமன்ற நீதிபதி பதவியை அடைந்துள்ளார் கொல்லம் பகுதியைச் சேர்ந்த பதருதீன்.

7 views

ஆயிஷா சுல்தானாவுக்கு எதிராக கேரளா உயர் நீதிமன்றத்தில் புகார் - லட்சத்தீவு நிர்வாகம் நடவடிக்கை

ஆயிஷா சுல்தானாவுக்கு எதிராக கேரளா உயர் நீதிமன்றத்தில் லட்சத்தீவு நிர்வாகம் புகார் தெரிவித்துள்ளது.

41 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.