"டிசம்பருக்குள் 200 கோடி தடுப்பூசி உற்பத்தி" - பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தகவல்
பதிவு : ஜூன் 11, 2021, 08:03 AM
இந்தியாவில் வரும் டிசம்பர் மாதத்திற்கு 200 கோடி கொரோனா தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்பட்டிருக்கும் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
"டிசம்பருக்குள் 200 கோடி தடுப்பூசி உற்பத்தி" - பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தகவல்
 
இந்தியாவில் வரும் டிசம்பர் மாதத்திற்கு 200 கோடி கொரோனா தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்பட்டிருக்கும் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.அருணாச்சலபிரதேசம் மாநிலத்தில் பாஜகவின் புதிய கட்சி அலுவலகத்திற்கான திறப்பு விழா நடைபெற்றது. காணொலி காட்சி வாயிலாக, இதனை திறந்து வைத்துப் பேசிய ஜேபி நட்டா, கொரோனா தடுப்பு நடவடிக்கையில், மத்திய அரசின் செயல்பாடுகளை பாராட்டிப் பேசினார். பின்னர், ஒரு மாதத்தில் ஒரு கோடி கொரோனா தடுப்பூசிகள் வரை தற்போது உற்பத்தி செய்யப்படுவதாகவும், வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இந்த எண்ணிக்கை 6 முதல் 7 கோடியாக அதிகரிக்கும் எனவும், செப்டம்பர் மாதத்தில் இது 10 கோடியாக அதிகரித்திருக்கும் என்றும் தெரிவித்தார். மேலும், இந்தியாவில் இரண்டு தடுப்பு மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது 13 நிறுவனங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜேபிநட்டா, டிசம்பர் மாதத்திற்குள் தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களின் எண்ணிக்கை 19ஆக அதிகரிக்கக் கூடும் என்றார். இதேபோல், டிசம்பர் மாதத்திற்குள் 200 கோடி தடுப்பூசி வரை உற்பத்தி செய்யப்பட்டிருக்கும் எனவும் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1905 views

கொடைக்கானலில் ரூ.100ஐ தாண்டிய பெட்ரோல் விலை

தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

81 views

வடகொரியாவில் கடும் உணவுப்பற்றாக்குறை - ஒப்புக் கொண்ட அதிபர் கிம் ஜாங் உன்

உலகின் பார்வையிலிருந்து தப்பி, ஒரு மர்மப் பிரதேசமாகவே விளங்கும் நாடு வட கொரியா... அங்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக முதன் முறையாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக் கொண்டுள்ளார்...என்னதான் நடக்கிறது வட கொரியாவில்...? இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

60 views

பிற செய்திகள்

லட்சத்தீவின் அதிகார வரம்பு, கேரள உயர் நீதிமன்றத்தில் இருந்து கர்நாடக உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம்

யூனியன் பிரதேசங்கள் உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வருகின்றன.

8 views

2022-க்குள் 36 ரபேல் போர் விமானங்கள் : இந்திய விமானப் படையில் சேர்க்கப்படும் - இந்திய விமானப் படைத் தளபதி உறுதி

திட்டமிட்டபடி 36 ரபேல் போர் விமானங்களும் 2022க்குள் இந்திய விமான படையில் சேர்க்கப்படும் என்று இந்திய விமானப்படையின் தளபதி ஆர்.கே.எஸ். பதூரியா கூறியுள்ளார்.

7 views

சாதாரண மக்கள் வலைதளத்தை பயன்படுத்த வேண்டும் - தகவல் தொழில் நுட்பத்துறையில் புதிய விதிகள்

சமூக ஊடகங்களை சாதாரண மக்கள் பயன்படுத்தும் வகையில், புதிய தகவல் தொழில் நுட்ப விதிகள் கொண்டு வந்துள்ளதாக, ஐ.நா.வுக்கு இந்தியா பதிலளித்துள்ளது.

12 views

இன்று கங்கை தசரா கொண்டாட்டம் - பக்தர்கள் புனித நீராடி வழிபாடு

கங்காவதாரன் என்றும் அழைக்கப்படும் கங்கை தசரா, கங்கையின் அவதாரத்தை கொண்டாடும் ஒரு இந்து பண்டிகையாகும். கங்கை நதி இந்த நாளில் வானத்திலிருந்து பூமிக்கு இறங்கியது என்று இந்துக்களால் நம்பப்படுகிறது.

7 views

கண்டறியப்பட்டது பச்சை பூஞ்சை நோய் - பஞ்சாப்பில் ஒருவருக்கு பாதிப்பு

கொரோனா தொற்றை தொடர்ந்து கருப்பு பூஞ்சை அச்சுறுத்தி வந்த நிலையில், தற்போது பச்சை பூஞ்சை பாதிப்பையும் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்

8 views

என் குழந்தைகளை கடத்த திட்டமிட்டார்" - கேரள முதல்வர் முன்வைத்த குற்றச்சாட்டு

தனது குழந்தைகளை கடத்த திட்டமிட்டிருந்ததாக, கேரள முதல்வர் பினராயி விஜயன் முன்வைத்த குற்றச்சாட்டை, கேரள காங்கிரஸ் மாநில தலைவர் சுதாகரன் மறுத்துள்ளார்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.