வண்டலூரில் விலங்குகள் தீவிர கண்காணிப்பு - புவனா என்ற சிங்கத்திற்கு தீவிர சிகிச்சை
பதிவு : ஜூன் 09, 2021, 07:13 PM
வண்டலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிங்கங்களும், பிற விலங்குகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று, விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை.ஐதராபாத், ஜெய்ப்பூர் மற்றும் உத்தரபிரதேச மாநிலம் எட்டவாவில், சிங்கங்கள் கொரோனா தொற்றுக்கு ஆளானதாக தகவல்கள் வெளிவந்தன.இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா 2-வது அலை தீவிரம் அடைந்த நிலையில், கடந்த மாதம் 20 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள உயிரியல் பூங்காக்கள் , பார்வையாளர்கள் வருகையை தவிர்க்கும் வகையில் மூடப்பட்டன.இந்தநிலையில், சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில்,  ஆசிய சிங்கங்கள் கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டிருப்பது கடந்த 3 ஆம் தேதி தெரியவந்தது. அங்கு நீலா என்ற 9 வயது பெண் சிங்கம், கொரோனா தொற்றால் உயிரிழந்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  அத்துடன் மேலும் சில சிங்கங்களுக்கு கொரோனா தொற்று பாதிப்புக்கான அறிகுறிகள் தென்பட்டன.இதையடுத்து, உடனடியாக சிங்கங்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பரிசோதனையில் 8 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது... இதனையடுத்து அந்த சிங்கங்கள் தனிமைப்படுத்தப்பட்டன. அவைகளுக்கு சிகிச்சையளிக்கும்  மருத்துவ குழுவினர், சிங்கங்களின் நடவடிக்கைகளையும் கண்காணித்து வருகின்றனர்.வண்டலூர் உயிரியல் பூங்காவில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.கொரோனா காரணமாக தீவிர சிகிச்சையில் இருக்கும் கவிதா என்ற சிங்கம் உடல் நலம் தேறிவரும் நிலையில், புவனா என்ற சிங்கத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.மற்ற 6 சிங்கங்களும் அறிகுறி எதுவும் இன்றி நல்ல நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பூங்காவில் இருக்கும் பிற விலங்குகளுக்கு தனித்தனியாக உணவு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் புலி, சிங்கம், சிறுத்தையென 7 விலங்குகளின் மாதிரிகள் பரிசோதனைக்காக, ஐதராபாத் மூலக்கூறு உயிரியல் ஆய்வு மையத்திற்கும், ரேபரேலி தேசிய கால்நடை ஆராய்ச்சி மையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிங்கங்களை மீட்கவும், மற்ற விலங்குகளை வைரஸ் தொற்றாமல் இருப்பதை உறுதி செய்யவும் மருத்துவ குழுவினரும், பராமரிப்பாளர்களும் ஓய்வின்றி பணியாற்றி வருகிறார்கள்.

தந்தி டிவி செய்திகளுக்காக செய்தியாளர் மீரான்....

தொடர்புடைய செய்திகள்

வடகொரியாவில் கடும் உணவுப்பற்றாக்குறை - ஒப்புக் கொண்ட அதிபர் கிம் ஜாங் உன்

உலகின் பார்வையிலிருந்து தப்பி, ஒரு மர்மப் பிரதேசமாகவே விளங்கும் நாடு வட கொரியா... அங்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக முதன் முறையாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக் கொண்டுள்ளார்...என்னதான் நடக்கிறது வட கொரியாவில்...? இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

96 views

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்றரை வயது குழந்தை - ஆக்ராவில் திக் திக் நிமிடங்கள் !

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்றரை வயது குழந்தை - ஆக்ராவில் திக் திக் நிமிடங்கள் !

47 views

பிற செய்திகள்

"நிதிநிலை சீராகும் போது தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்படும்" - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

தமிழகத்தின் நிதிநிலை சீரான பிறகு, பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

5 views

போலீசார் தாக்கியதில் மளிகை கடை உரிமையாளர் உயிரிழப்பு

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே போலீசார் தாக்கியதில் மளிகை கடை உரிமையாளர் உயிரிழந்துள்ளார்.

569 views

ஜூன் 28 ம் தேதி முதல் "கீழமை நீதிமன்றங்களில் நேரடி விசாரணை" - உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர்

தமிழகத்தில் ஜூன் 28 ம் தேதி முதல் கீழமை நீதிமன்றங்களில் நேரடி விசாரணை நடத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிவித்துள்ளார்.

6 views

கொரோனா காலத்திலும் தங்க கடத்தல் ஜரூர் - 7.5 கிலோ தங்கம் பறிமுதல்

கொரோனா கால சிறப்பு விமான சேவையிலும் தங்க கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், திருச்சியில் ஏழரை கிலோ தங்கம் சிக்கியுள்ளது.

5 views

கொரோனாவுக்கு நேற்று 1,358 பேர் இறப்பு - 16-வது நாளாக 5%க்கும் கீழ் தினசரி பாதிப்பு

இந்தியாவில் தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 16-வது நாளாக 5 சதவீதத்திற்கு கீழ் குறைந்து 2 புள்ளி ஆறு ஏழு சதவீதமாக உள்ளது.

7 views

"மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமனம்" - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமனம் செய்வது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும் என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.