"சிமெண்ட் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை" - தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
பதிவு : ஜூன் 09, 2021, 07:08 PM
சிமென்ட் விலை உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசிக்கப்பட்டு, விலை கட்டுக்குள் கொண்டுவரப்படும் என, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை, கோவைக்கு, இணையாக, மதுரை தூத்துக்குடி தொழில் வழிச்சாலையை  மேம்படுத்த, தொழில் துறை திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
மதுரை, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை போன்ற தென் மாவட்டங்களில், தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் போன்றவற்றை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக மதுரையை மையமாக கொண்டு தொழில் சார்ந்த வல்லுநர்கள், நிறுவங்களை உள்ளடக்கிய மன்றம் அமைக்க உள்ளதாக கூறினார். ஊரடங்கிலும் சிமென்ட்விலை அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தப்படும் என தெரிவித்தார். அதன் பின்னர் சிமென்டவிலையை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.



தொடர்புடைய செய்திகள்

வடகொரியாவில் கடும் உணவுப்பற்றாக்குறை - ஒப்புக் கொண்ட அதிபர் கிம் ஜாங் உன்

உலகின் பார்வையிலிருந்து தப்பி, ஒரு மர்மப் பிரதேசமாகவே விளங்கும் நாடு வட கொரியா... அங்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக முதன் முறையாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக் கொண்டுள்ளார்...என்னதான் நடக்கிறது வட கொரியாவில்...? இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

136 views

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்றரை வயது குழந்தை - ஆக்ராவில் திக் திக் நிமிடங்கள் !

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்றரை வயது குழந்தை - ஆக்ராவில் திக் திக் நிமிடங்கள் !

81 views

பிற செய்திகள்

தந்தையை போலீசார் தாக்கியதாக புகார் - விடிய விடிய போராட்டம் நடத்திய மகள்

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே தந்தையை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி இளம்பெண் விடிய விடிய போராட்டம் நடத்திய நிலையில், வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது, மாநில மனித உரிமை ஆணையம்.

7 views

ஊரடங்கு தளர்வு குறித்து நாளை ஆலோசனை - முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

ஊரடங்கு தளர்வு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

8 views

"ரூ.100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பழமையான கோவில்களில் புனரமைப்பு பணி" - முதலமைச்சர் ஸ்டாலின்

நூறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருக்கோவில்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

8 views

நதிநீர் இணைப்புத் திட்டம் தாமதம் - இந்திய கணக்காய்வு, தணிக்கைத் துறை அறிக்கை

நதிநீர் இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்தாத காரணத்தால், பல முக்கிய நோக்கங்கள் நிறைவேறவில்லை என இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தெரிவித்துள்ளது.

6 views

"டெல்டா பிளஸ் வைரஸ் : அச்சப்பட தேவையில்லை" - மா.சுப்பிரமணியன் (சுகாதாரத்துறை அமைச்சர்)

சென்னையில் டெல்டா பிளஸ் வைரசால் பாதிக்கப்பட்ட நபர் குணமடைந்து விட்டதாகவும், இந்த வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்....

14 views

"டாய்க்கத்தான் 2021" போட்டி - பங்கேற்பாளர்களுடன் பிரதமர் உரையாடல்

உள்நாட்டு பொம்மை தயாரிப்பை மேம்படுத்தும் வகையில் "டாய்க்கத்தான் 2021" என்ற போட்டியை மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

2 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.