கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம்: "ஆதியும், அந்தமும் என்னுடைய வழக்கே"- வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் தகவல்
பதிவு : ஜூன் 09, 2021, 07:05 PM
கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்திற்கு நடவடிக்கை எடுத்தது தாங்கள் தான் என அதிமுகவும், பாஜகவும் உரிமை கோரும் நிலையில், திட்டத்திற்கு ஆதியும், அந்தமும் தன்னுடைய வழக்கே என வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இதுபற்றிய செய்தித் தொகுப்பு...
கோதாவரி- காவிரி இணைப்புக்கான விரிவான திட்ட அறிக்கையை இறுதி செய்திருக்கும் மத்திய அரசு, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் கருத்துக்காக வரைவு அறிக்கையை அனுப்பியிருக்கிறது.  சுமார் 86 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்டத்தில், தெலுங்கானாவின் இச்சம்பள்ளியில் இருந்து கோதாவரி நீரை கிருஷ்ணா, பெண்ணாறு வழியாக கல்லணைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.  இத்திட்டப்படி ஆண்டு தோறும் ஜூன் முதல் அக்டோபர் வரை 143 நாட்கள், 247 டிஎம்சி நீர் விடுக்கப்படும், இதில் 65.8 டிஎம்சி தெலுங்கானாவுக்கும், 79.92 டிஎம்சி ஆந்திராவுக்கும், 84.28 டிஎம்சி நீர் தமிழகத்துக்கும் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்திற்கு நடவடிக்கை எடுத்தது அதிமுக என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். அதேநேரம், தமிழக மக்கள் மீது பாசம் கொண்ட பிரதமர் மோடி அரசுதான் இத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது என பாஜக மாநில தலைவர் எல். முருகன், தெரிவித்துள்ளார். 
இந்நிலையில் கோதாவரி- காவிரி இணைப்பு திட்டத்திற்கு ஆதியும், அந்தமும் தன்னுடைய வழக்கே என வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.1983-ல் தான் தொடர்ந்த வழக்கில் 2012-ல் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் ஒரு பகுதிதான் இத்திட்டம் எனக் அவர் கூறியிருக்கிறார்

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6916 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1749 views

ஹாரிபாட்டர் ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் : திரைப்படத்தில் வரும் பொருட்கள் நிஜத்தில்..

புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான "ஹாரி பாட்டர்" ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் ஒன்று காத்திருக்கிறது.

84 views

பொருட்களை பரிமாற்றம் செய்யும் விண்கலம்... வெற்றிகரமாக சீனா ஏவியது

விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு பொருட்களை பரிமாற்றம் செய்யும் விண்கலத்தை சீனா வெற்றிகரமாக ஏவி உள்ளது.

37 views

பிற செய்திகள்

"தமிழ்நாட்டில் வெறும் 19% மட்டுமே தடுப்பூசி" - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் அறிக்கை

மத்திய அரசிடமிருந்து தடுப்பூசி பெறுவதில் தமிழ்நாடு அரசு சுணக்கம் காட்டி வருவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் புகார் கூறியுள்ளார்.

50 views

"தமிழ்நாட்டிற்கு 4500 மெ.டன். ஆக்சிஜன்" - இந்திய ரயில்வே அறிவிப்பு

தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரத்து 500 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான ஆக்சிஜன் விநியோகிக்கப்பட்டுள்ளதாக இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.

23 views

டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்க அனுமதி - அரசியல் தலைவர்கள் கண்டனம்

ஊடரங்கு காலத்தில் மதுக்கடைகளை திறக்கக்கூடாது என, பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

115 views

தமிழகத்தில் இன்று 15,759 பேருக்கு கொரோனா - ஒரே நாளில் 378 பேர் கொரோனாவுக்கு பலி

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 378 பேர் உயிரிழந்தனர்.

20 views

ஊரடங்கு வரும் 21ஆம் தேதி வரை நீட்டிப்பு - 27 மாவட்டங்களுக்கு மட்டும் கூடுதல் தளர்வுகள்

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களுக்கு கூடுதலாக மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவை வருகின்ற 14 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.

26 views

ஊரடங்கு வரும் 21ஆம் தேதி வரை நீட்டிப்பு - 11 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள்

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தொற்று குறையாத 11 மாவட்டங்களுக்கு ஏற்கனவே உள்ள தளர்வுகளுடன் கூடுதலாக சில தளர்வுகள் மட்டும் வழங்கப்பட்டுள்ளன

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.