வரும் 11ஆம் தேதி கல்லணையை ஆய்வு செய்கிறார் முதல்வர்
பதிவு : ஜூன் 09, 2021, 05:39 PM
மாற்றம் : ஜூன் 09, 2021, 05:50 PM
வரும் 11ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின், கல்லணையை ஆய்வு செய்ய உள்ளார்.
வரும் 11 ஆம் தேதி காலை சென்னையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் திருச்சி செல்லும் முதலமைச்சர், கல்லணை கால்வாய்க்கு செல்கிறார்.
கல்லணை கால்வாயில் கடைமடை வரை தண்ணீர் சென்று அடைய வசதியாக ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி நிதி உதவியுடன் நவீனப்படுத்துதல், சீரமைப்பு பணிகள் நடைப்பெற்று வருகின்றன. இந்த பணிகளை ஆய்வு செய்த பின், முதலமைச்சர்  அதிகாரிகளோடு ஆலோசனை நடத்துகிறார்.
குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக கால்வாய்களை தூர்வாரும் பணிகளுக்காக 65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைப்பெற்று வருகிறது. இந்த பணிகளையும் முதலமைச்சர் ஆய்வு செய்கிறார்.இந்த நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு திருவாரூர் செல்லும் அவர், தொடர்ந்து 12ஆம் தேதி மேட்டூர் அணைக்கு சென்று அங்கு அதிகாரிகளோடு ஆலோசனை நடத்துகிறார். பின்னர், பாசனத்திற்காக தண்ணீர திறந்து வைக்க உள்ளார். 


பிற செய்திகள்

"கோவை மாநகரை புறக்கணிக்கவில்லை" - சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

கோவை மாநகரை எக்காரணத்தைக் கொண்டும் புறக்கணிக்க மாட்டோம் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

4 views

எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். நூதன திருட்டு வழக்கு - அரியானாவில் முக்கிய குற்றவாளி கைது

எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். நூதன திருட்டு வழக்கில், ஆன்லைன் மோசடிகளுக்கு பெயர் போன அரியானா மாநிலம் மேவாத் மாவட்டத்தை சேர்ந்த முக்கிய குற்றவாளியை சென்னை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

30 views

"நிதிநிலை சீராகும் போது தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்படும்" - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

தமிழகத்தின் நிதிநிலை சீரான பிறகு, பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

14 views

போலீசார் தாக்கியதில் மளிகை கடை உரிமையாளர் உயிரிழப்பு

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே போலீசார் தாக்கியதில் மளிகை கடை உரிமையாளர் உயிரிழந்துள்ளார்.

698 views

ஜூன் 28 ம் தேதி முதல் "கீழமை நீதிமன்றங்களில் நேரடி விசாரணை" - உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர்

தமிழகத்தில் ஜூன் 28 ம் தேதி முதல் கீழமை நீதிமன்றங்களில் நேரடி விசாரணை நடத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிவித்துள்ளார்.

10 views

கொரோனா காலத்திலும் தங்க கடத்தல் ஜரூர் - 7.5 கிலோ தங்கம் பறிமுதல்

கொரோனா கால சிறப்பு விமான சேவையிலும் தங்க கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், திருச்சியில் ஏழரை கிலோ தங்கம் சிக்கியுள்ளது.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.