11ம் வகுப்பு சேர்க்கை - வழிகாட்டு நெறிமுறை
பதிவு : ஜூன் 08, 2021, 09:46 PM
அரசு மற்றும் தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
11ம் வகுப்பு சேர்க்கை - வழிகாட்டு நெறிமுறை
 
அரசு மற்றும் தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் எண்ணிக்கைக்கு உட்பட்டு மாணவர்கள் விரும்பும் பாடப்பிரிவுகளை தேர்வு செய்யும் நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.தற்போது அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு மேல் மாணவர்கள் சேர விரும்புவதால், ஒவ்வொரு பிரிவிலும் 10 முதல் 15 சதவீதம் கூடுதல் மாணவர்களை சேர்க்க அனுமதி வழங்கி பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அறிவித்துள்ளார்.ஒரே பிரிவில் அதிகமான விண்ணப்பங்கள் வந்தால், அப்பிரிவோடு தொடர்புடையை கீழ்நிலை வகுப்பு பாடங்களில் இருந்து தேர்வு நடத்தலாம் என கூறப்பட்டுள்ளது.அதாவது 50 வினாக்களை தயார் செய்து கொள்குறிவகை தேர்வு நடத்தி, அந்த மதிப்பெண்கள் அடிப்படையில் பாடப்பிரிவுகளை ஒதுக்கலாம் என பள்ளிக்கல்வி ஆணையர் அறிவித்துள்ளார்.மாணவர் சேர்க்கை முடிந்த பிறகு ஜூன் 3வது வாரத்தில் இருந்து அரசு வழிகாட்டுதல் அடிப்படையில் வகுப்பை தொடங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொடர்ந்து கல்வி தொலைக்காட்சி மூலமும், தொலைத்தொடர்பு முறைகளில் பாடங்களை நடத்த  ஆரம்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

வடகொரியாவில் கடும் உணவுப்பற்றாக்குறை - ஒப்புக் கொண்ட அதிபர் கிம் ஜாங் உன்

உலகின் பார்வையிலிருந்து தப்பி, ஒரு மர்மப் பிரதேசமாகவே விளங்கும் நாடு வட கொரியா... அங்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக முதன் முறையாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக் கொண்டுள்ளார்...என்னதான் நடக்கிறது வட கொரியாவில்...? இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

97 views

அபூர்வ நோயால் போராடும் குழந்தை ரூ.16 கோடிக்கு மருந்து வாங்க உதவி கோரி உயர்நீதிமன்றத்தை நாடிய தந்தை

அபூர்வ நோயால் போராடும் குழந்தையின் தந்தை பணஉதவி கேட்டு, கேரள உயர்நீதிமன்ற கதவுகளை தட்டியுள்ளார்.ம

59 views

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்றரை வயது குழந்தை - ஆக்ராவில் திக் திக் நிமிடங்கள் !

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்றரை வயது குழந்தை - ஆக்ராவில் திக் திக் நிமிடங்கள் !

48 views

பிற செய்திகள்

"நிதிநிலை சீராகும் போது தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்படும்" - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

தமிழகத்தின் நிதிநிலை சீரான பிறகு, பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

9 views

போலீசார் தாக்கியதில் மளிகை கடை உரிமையாளர் உயிரிழப்பு

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே போலீசார் தாக்கியதில் மளிகை கடை உரிமையாளர் உயிரிழந்துள்ளார்.

641 views

ஜூன் 28 ம் தேதி முதல் "கீழமை நீதிமன்றங்களில் நேரடி விசாரணை" - உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர்

தமிழகத்தில் ஜூன் 28 ம் தேதி முதல் கீழமை நீதிமன்றங்களில் நேரடி விசாரணை நடத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிவித்துள்ளார்.

10 views

கொரோனா காலத்திலும் தங்க கடத்தல் ஜரூர் - 7.5 கிலோ தங்கம் பறிமுதல்

கொரோனா கால சிறப்பு விமான சேவையிலும் தங்க கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், திருச்சியில் ஏழரை கிலோ தங்கம் சிக்கியுள்ளது.

5 views

கொரோனாவுக்கு நேற்று 1,358 பேர் இறப்பு - 16-வது நாளாக 5%க்கும் கீழ் தினசரி பாதிப்பு

இந்தியாவில் தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 16-வது நாளாக 5 சதவீதத்திற்கு கீழ் குறைந்து 2 புள்ளி ஆறு ஏழு சதவீதமாக உள்ளது.

7 views

"மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமனம்" - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமனம் செய்வது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும் என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.