கொரோனாவால் ஆதரவற்று நிற்கும் 3,621 சிறார்கள் - பெற்றோரை இழந்து தவிப்பு
பதிவு : ஜூன் 08, 2021, 05:31 PM
கொரோனா பெருந்தொற்று காலத்தில், நாடு முழுவதும் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகள் பற்றிய புள்ளி விவரங்களை தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று காலத்தில், நாடு முழுவதும்  பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகள் பற்றிய புள்ளி விவரங்களை  தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ளது.  

இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடிய கொரோனா, பலரது வாழ்க்கையை சிதைத்து விட்டது. பல்லாயிரக்கணக்கான பாதிப்புகளும், மரணங்களும் நூற்றாண்டுகளில் இல்லாத பேரழிவுக்கு சாட்சியாக மாறியிருக்கின்றன. இந்த பெரும் தொற்றில் எண்ணற்ற குழந்தைகள் தாய், தந்தையரை இழந்து ஆதரவற்று நிர்கதியாக கோர வடுக்களை சுமந்து நிற்கின்றனர். 

 
கடந்த ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல்  இந்த ஆண்டு  ஜூன் 5 ஆம் தேதி வரை நாடு முழுவதும் 3 ஆயிரத்து 621 குழந்தைகள், பெற்றோர்களை இழந்து நிற்கதியாக நிற்பதாக தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியுள்ளது.


கொரோனா பரவலுக்கு மத்தியில் பாதுகாப்பு இல்லங்களில் இருக்கும் சிறுவர்களின் நலன் குறித்த வழக்கை தாமாக முன்வைத்து விசாரிக்கும் உச்ச நீதிமன்றத்தில், தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம் பதில் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. 


அதில், 3 ஆயிரத்து 621 குழந்தைகள் தங்களுடைய தாய், தந்தையரை இழந்துள்ளனர் என்றும் 

26 ஆயிரத்து 176 குழந்தைகள் தாய், தந்தை இருவரில் ஒருவரை இழந்து உள்ளனர் என்றும்

 274 குழந்தைகள் கைவிடப்பட்டுள்ளனர் என்றும் கூறியுள்ளது.


இந்த 30 ஆயிரத்து 71 குழந்தைகளில் 15 ஆயிரத்து 620 பேர் சிறுவர்கள் எனவும் 14 ஆயிரத்து 447 பேர் சிறுமிகள் எனவும் 4 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இவர்களில் 11 ஆயிரத்து 815 சிறுவர், சிறுமியர் 8 முதல் 13 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் 5 ஆயிரத்து 17 பேர் 4 முதல் 7 வயதுக்குட்டப்பட்வர்கள் என்றும் ஆணையம் கூறியிருக்கிறது. 


இந்த குழந்தைகளின் பெற்றோர் மரணத்திற்கு கொரோனா தொற்று மட்டும் காரணமாக சொல்ல முடியாது என்றும், இதர காரணங்களும் இருக்கலாம் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது. 


 இவ்வாறு ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளின் விபரங்களை யாருக்கும் வழங்கவும் கூடாது, பொதுவெளியில் வெளியிடவும் கூடாது என மாநிலங்களுக்கு உத்தரவிட கேட்டுக் கொண்டுள்ள ஆணையம், 


இதுபோன்ற தகவல் பகிரப்பட்டால் குழந்தை கடத்தல் போன்ற சட்டவிரோத செயல்களால், அவர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது என எச்சரித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1833 views

"ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது" - டாஸ்மாக் வழிகாட்டு நெறிமுறைகள்

தமிழகத்தில் 27 மாவட்டங்களில், நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், கடைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன..

68 views

கொடைக்கானலில் ரூ.100ஐ தாண்டிய பெட்ரோல் விலை

தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

35 views

பிற செய்திகள்

"மத்திய பிரதேசத்தில் புதிய வகை கொரோனா" - ம.பி. மருத்துவக் கல்வி அமைச்சர் தகவல்

மத்திய பிரதேச தலைநகர் போபாலில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக அம்மாநில மருத்துவக் கல்வி அமைச்சர் விஸ்வாஸ் சாரங் கூறி உள்ளார்.

6 views

சோனியா காந்தி,ராகுல் காந்தியை இன்று சந்திக்கிறார் ஸ்டாலின்

டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை இன்று சந்திக்க உள்ளார்.

21 views

ஆயிஷா சுல்தானா மீதான தேசதுரோக வழக்கு; கைதானால் இடைக்கால ஜாமீன் தரவேண்டும்

லட்சத்தீவைச் சேர்ந்த ஆயிஷா சுல்தானா, தேசத்துரோக வழக்கில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

17 views

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் - ஹைதராபாத்தில் பிறந்த சத்ய நாதெல்லா

உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவராக, அதன் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றும் சத்ய நாதெல்லா நியமிக்கப்பட்டுள்ளார்.

9 views

பேருந்து, படகு போக்குவரத்து தொடங்கியது...

கேரளாவில் இன்று முதல் பேருந்து, படகு போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

219 views

கோவோவேக்ஸ் இந்தியாவில் எப்போது கிடைக்கும்? இந்தியாவில் விலை என்னவாக இருக்கும்...?

கொரோனாவுக்கு எதிராக மற்றொரு ஆயுதமாக பார்க்கப்படும் கோவோவேக்ஸ் தடுப்பூசி இந்தியாவில் எப்போது கிடைக்கும்...?

187 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.