ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் - உறுப்பினராக இந்தியா தேர்வு
பதிவு : ஜூன் 08, 2021, 03:39 PM
ஐ.நா சபையின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஐ.நா சபையின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

சமூக, பொருளாதாரம் மற்றும சுற்றுச்சூழல் ஆகிய மூன்று பரிமாணங்களில் நீடிக்கத்த்தக்க வளர்ச்சியை மேம்படுத்த ஐ.நா சபையின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் வகை செய்கிறது.

ஐ.நாவின் கீழ் உள்ள 15 சிறப்பு அமைப்புகளையும், எட்டு செயல்முறை ஆணையங்களையும், ஐந்து பிராந்திய ஆணையங்களையும் ஒருங்கிணைக்கும் பணிகளை இந்த கவுன்சில் மேற்கொள்கிறது.

54 உறுப்பினர்களுடன், சுமார் 1,600 தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இந்த கவுன்சிலுடன் இணைந்து பல்வேறு ஐ.நா பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

ஐ.நா சபையின் சார்பில் நடைபெறும் உச்சி மாநாடுகள் மற்றும் இதர மாநாடுகளில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை செயல்படுத்துவதில் இந்த கவுன்சில் முக்கிய பங்காற்றுகிறது.


54 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நாவின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலில், 2022 முதல் 2024 வரையில் உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த கவுன்சிலுக்கு இந்தியாவை தேர்வு செய்த ஐ.நா சபையின் உறுப்பினர் நாடுகளுக்கு, ஐ.நாவிற்கான இந்திய தூத டி.எஸ்.திருமூர்த்தி நன்றி தெரிவித்துள்ளார். 

இந்தியாவுடன், எஸ்ட்வானி, மொரிசியஸ், டுனிஷியா, டான்சானியா, குரோசியா, செக் குடியரசு, பெலிசி, சீலே மற்றும் பெரு ஆகிய நாடுகளும் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1832 views

"ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது" - டாஸ்மாக் வழிகாட்டு நெறிமுறைகள்

தமிழகத்தில் 27 மாவட்டங்களில், நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், கடைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன..

66 views

கொடைக்கானலில் ரூ.100ஐ தாண்டிய பெட்ரோல் விலை

தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

34 views

பிற செய்திகள்

விண்வெளி நிலையத்தை அமைக்கும் சீனா.. மூன்று வீரர்களை விண்வெளிக்கு அனுப்பியது

மூன்று விண்வெளி வீரர்களுடன் சீனாவின் லாங் மார்ச் 2எப் ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.

0 views

மலை சிகரத்தில் இருந்து குதித்த 3 வீரர்கள் - "ஸ்கை டைவிங்" செய்து அசத்தல்

லெபானன் நாட்டில் பிரசித்தி பெற்ற உயர்ந்த மலைசிகரத்தில், 3 வீரர்கள், ஸ்கை டைவிங் வீரர்கள் மேலேயிருந்து குதித்து அசத்தியுள்ளனர்.

12 views

டிஸ்னிலேண்ட் துவங்கி 5 ஆண்டுகள் நிறைவு

சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் டிஸ்னிலேண்ட் துவங்கி ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, கொண்டாட்டங்கள் களை கட்டின.

8 views

உலகின் 3வது மிகப்பெரிய வைரத்தை பார்க்க ஆசையா? | Diamond

உலகின் 3வது மிகப்பெரிய வைரத்தை பார்க்க ஆசையா?இதோ...

16 views

புவி வெப்ப மயமாதல் ஏற்படுத்தும் அழிவு... ஆர்டிக் பனிப்பாறைகள் முற்றிலும் அழியும்

புவி வெப்பமயமாதல் இனி தடுத்து நிறுத்த முடியாத கட்டத்தை கடந்து விட்டதாக மார்கஸ் ரெக்ஸ் என்ற ஜெர்மன் விஞ்ஞானி எச்சரித்துள்ளார்.

13 views

ஜெனிவாவில் புதின் - பைடன் சந்திப்பு... பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதம்

ஜெனிவாவில் நடைபெற்ற ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவைப் புதுப்பிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.