பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் தாளாளர், முதல்வர் ஆகிய இருவர் நேரில் ஆஜராகி விளக்கம்
பதிவு : ஜூன் 08, 2021, 01:13 PM
சென்னை பத்ம சேஷத்திரி பள்ளி முதல்வர் மற்றும் தாளாளர் ஆகிய இருவர் மாவட்ட குழந்தைகள் நலக்குழு முன்பு இருவரும் நேரில் ஆஜராகியுள்ளனர்.
சென்னை பத்ம சேஷத்திரி பள்ளி முதல்வர் மற்றும் தாளாளர் ஆகிய இருவர்
மாவட்ட குழந்தைகள் நலக்குழு முன்பு இருவரும் நேரில் ஆஜராகியுள்ளனர். இது தொடர்பான விவரங்களை செய்தியாளர் லோகநாதனிடம் கேட்போம்..........

மாவட்ட குழந்தைகள் நலக் குழு சார்பில் பத்ம சேஷாத்ரி பள்ளி முதல்வர் மற்றும் தாளாளரை விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியிருந்த நிலையில், இருவரும் இந்த 31-ஆம் தேதி  விசாரணைக்கு ஆஜராகவில்லை.

பத்ம சேஷாத்ரி பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் கடந்த 24 ஆம் தேதி அப்பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலனை அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பாக அசோக்நகர் காவல் துறையினர் பள்ளியின் முதல்வர் மற்றும் தாளாளர் ஆகியோரிடம் 2 நாட்களாக சுமார் 6 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தினர். அப்போது பள்ளி மாணவிகள், பெற்றோர்களின் புகார்களை அலட்சியப்படுத்தியது ஏன் ? புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் ? உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் காவல்துறை சார்பில் முன்வைக்கப்பட்டது.

இந்த பாலியல் விவகாரம் தொடர்பாக சென்னை மாவட்ட குழந்தைகள் நல குழு பள்ளியின் முதல்வர் கீதா கோவிந்தராஜன் மற்றும் தாளாளர் ஷீலா ராஜேந்திரன் ஆகியோரை 31ந்தேதிக்குள் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியிருந்தனர்.

 முதல்வர் மற்றும் தாளாளர் ஆகிய இருவரும் விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்துள்ளனர். 

ஏற்கனவே இரு மாணவிகள் ஆசிரியர் ராஜகோபாலன் மீது புகார் அளித்திருந்த நிலையில், ராஜகோபால் தங்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக  மேலும் 3 மாணவிகள் எழுத்துப்பூர்வமாக காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகார்களின் அடிப்படையில் தனித்தனி வழக்குகளாக பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர் காவல்துறையினர் 

மாநில குழந்தைகள் உரிமைகளுக்கான ஆணையம் பத்ம சேஷாத்ரி பள்ளி நிர்வாகிள் ஜூன் 8 ஆம் தேதிக்கு விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளிக்க சம்மன் அனுப்பப்பட்டது

இந்த நிலையில் சென்னை கெல்லிசில் உள்ள மாவட்ட குழந்தைகள் நலக்குழு முன்பு இருவரும் நேரில் ஆஜராகினர்

தொடர்புடைய செய்திகள்

(28.03.2021)மக்கள் தர்பார்: போடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் Vs நடுநிலை வாக்காளர்கள்

(28.03.2021)மக்கள் தர்பார்: போடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் Vs நடுநிலை வாக்காளர்கள்

110 views

"ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது" - டாஸ்மாக் வழிகாட்டு நெறிமுறைகள்

தமிழகத்தில் 27 மாவட்டங்களில், நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், கடைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன..

92 views

4வது நாளாக நீடிக்கும் கனமழை - மும்பைக்கு ’ரெட் அலர்ட்’

மும்பையில் 4-வது நாளாக நீடிக்கும் மழை காரணமாக, மாநகரின் பெரும்பாலான இடங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதியுறுகின்றனர்.

24 views

தடுப்பூசி குறித்த பிரதமரின் அறிவிப்பு - டுவிட்டரில் நன்றி தெரிவித்த பினராயிவிஜயன்

கொரோனா தடுப்பூசி தொடர்பான பிரதமரின் அறிவிப்புக்கு கேரள முதலமைச்சர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

14 views

பிற செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 8,183 பேருக்கு கொரோனா உறுதி

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 8,183 பேருக்கு கொரோனா உறுதி

33 views

கருப்பு பூஞ்சை - தற்காத்துக் கொள்வது எப்படி?

கருப்பு பூஞ்சை - தற்காத்துக் கொள்வது எப்படி?

21 views

பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டார் மதன் - ஜூலை 3ஆம் தேதி வரை அடைக்க உத்தரவு

பப்ஜி மதனை ஜூலை 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து அவர், பூந்தமல்லியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

18 views

குழந்தைகளுக்கு கொரோனா தொற்று சிகிச்சை - வழிகாட்டுதலை வெளியிட்டது ஐ.சி.எம்.ஆர்.

குழந்தைகளுக்கு கொரோனா தொற்று சிகிச்சை அளிப்பது தொடர்பாக ஐ.சி.எம்.ஆர். வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.

11 views

3ஆம் நபர் பெயரில், போலியாக சொத்துப் பதிவு விவகாரம்

தனது சொத்து, வேறொருவர் பெயரில் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், அந்த விற்பனை பத்திரத்தை ரத்து செய்யவும் மரக்காணம் சார் பதிவாளருக்கு உத்தரவிடக் கோரி, பாதிக்கப்பட்ட நில உரிமையாளர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

20 views

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மீது தொகுதி மேம்பாட்டு நிதியில் மோசடி... லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவு

தொகுதி மேம்பாட்டு நிதியில் மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ, தி.நகர் சத்ய நாராயணன் மீது வழக்குப்பதிய கோரிய மனுவுக்கு, லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.