பணத்திற்காக கடலூரில் நடந்த பயங்கரம் - நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய கணவன்
பதிவு : ஜூன் 08, 2021, 12:54 PM
கடலூரில் பணத்திற்காக மனைவியை தன் நண்பர்களுக்கு கணவனே விருந்தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...
கடலூரில் பணத்திற்காக மனைவியை தன் நண்பர்களுக்கு கணவனே விருந்தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...

கடலூர் மாவட்டம், பண்ருட்டியை சேர்ந்தவர் ஜெயமணி. 31 வயதான இவருக்கு 21 வயதில் மனைவி உள்ளார். இவர்களுக்கு 3 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடந்துள்ளது. 

2 வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில் மனைவி மீண்டும் 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஜெயமணி, தன் நண்பர்களுடன் சேர்ந்து ஒன்றாக மது அருந்துவது வழக்கம்.

அப்படி மது அருந்தும் போது ஜெயமணியின் மனைவி மீதான விருப்பத்தை பகிர்ந்துள்ளார் ஆண்டிக்குப்பத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி. இதற்காக பணம் தருவதாக அவர் கூறியதை கேட்ட ஜெயமணி, மனைவி அதிலும் கர்ப்பிணியான மனைவி என்றும் பார்க்காமல் சத்து மாத்திரை என கூறி மயக்க மாத்திரையை மனைவிக்கு கொடுத்துள்ளார். 

இதில் அவர் மயக்கமடையவே, தன் நண்பனை வீட்டிற்கு வரவைத்து அவரின் விருப்பத்தையும் நிறைவேற்றி இருக்கிறார் அந்த கொடூர மனம் படைத்த கணவன். இதேபோல் மற்றொரு நண்பரான மணிகண்டன் என்பவரையும் வீட்டுக்கு வரவைத்து நண்பரோடு இணக்கமாக இருக்குமாறு கூறவே பதறிப்போனார் அந்த  பெண்... தனக்கு பணம் தேவைப்படும் போதெல்லாம் நண்பர்களை வீட்டுக்கு வரவைத்து மீண்டும் மீண்டும் இந்த கொடூரத்தை அரங்கேற்றி இருக்கிறார். 

பின்னர் தற்கொலை மிரட்டலை கையில் எடுத்து மனைவியை பிளாக் மெயில் செய்த அவர், அடிக்கடி நண்பர்களுக்கு தன் மனைவியை விருந்தாக்கி உள்ளார். இணங்காவிட்டால் மயக்க மாத்திரை கொடுத்ததை போலவே மீண்டும் செய்வேன் என கூறி இருக்கிறார் ஜெயமணி. 

ஒரு கட்டத்தில் வெறுத்துப்போன மனைவி தன் குழந்தையை தூக்கிக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று தனக்கு நடந்ததை எல்லாம் கூறி கதறி அழுதுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பண்ருட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. 

இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கணவன் ஜெயமணி, அவரின் நண்பர்களான சுந்தரமூர்த்தி, மணிகண்டன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6873 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1677 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

315 views

ஹாரிபாட்டர் ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் : திரைப்படத்தில் வரும் பொருட்கள் நிஜத்தில்..

புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான "ஹாரி பாட்டர்" ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் ஒன்று காத்திருக்கிறது.

47 views

பொருட்களை பரிமாற்றம் செய்யும் விண்கலம்... வெற்றிகரமாக சீனா ஏவியது

விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு பொருட்களை பரிமாற்றம் செய்யும் விண்கலத்தை சீனா வெற்றிகரமாக ஏவி உள்ளது.

11 views

தடுப்பூசிகள் தருவதாக அமெரிக்கா உறுதி - அமெரிக்க துணை அதிபருடன் பிரதமர் பேச்சு

பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் இருவரும் தொலைபேசியில் கலந்துரையாடி உள்ளனர்.

11 views

பிற செய்திகள்

காரைக்கால் மாவட்டம் வாஞ்சூரில் அதிக அளவில் திரண்ட மதுப்பிரியர்கள் - போலீசார் திணறல்

காரைக்கால் மாவட்டம் வாஞ்சூரில் மதுபானம் வாங்க குவிந்த மதுப்பிரியர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

30 views

ஊசியை அகற்றுவதற்கு பதிலாக விரலை வெட்டிய செவிலியர்கள்

பிறந்து 14 நாட்கள் ஆன பெண் குழந்தையின் கட்டை விரலை செவிலியர்கள் வெட்டி எடுத்ததாக புகார் எழுந்துள்ளது.

12 views

மேட்டூர் அணையில் நீர்வரத்து உயர்வு

மேட்டூர் அணையில் இருந்து வரும் 12-ஆம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவுள்ள நிலையில், அணையில் நீர்வரத்து 881 கனஅடியாக உயர்ந்திருக்கிறது.

7 views

காரைக்காலில் மதுபான கடைகள் திறப்பு - சூடம் ஏற்றி, தேங்காய் உடைத்து இளைஞர்கள் உற்சாகம்

புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் மதுக்கடை திறக்கப்பட்டதை இளைஞர்கள் சூடம் ஏற்றி, தேங்காய் உடைத்து கொண்டாடினர்.

62 views

குடைமிளகாய் விலை வீழ்ச்சி - விவசாயிகள் கவலை

கொடைக்கானல் மேல்மலை கவுஞ்சி கிராமத்தில் குடைமிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது,. தற்போது குடைமிளகாய் விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்,.

7 views

கொரோனா சிகிச்சைக்கு நாட்டு மருந்து - ஆந்திர வைத்தியரின் மருந்து விநியோகம்

ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா பட்டணத்தை சேர்ந்த நாட்டு வைத்தியர் ஆனந்தையாவின் கொரோனா சிகிச்சை மருந்து விநியோகம் தெடங்கியது.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.