கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணமா?மருத்துவமனைகளின் உரிமம் ரத்தாகும் - தமிழக அரசு எச்சரிக்கை
பதிவு : ஜூன் 07, 2021, 04:37 PM
கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ள
கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால், தனியார் மருத்துவமனைகளை அரசு, தன் கட்டுப்பாட்டில் எடுத்து இலவச சிகிச்சை வழங்க கோரி டி.ஐ.நாதன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, முதல்வரின் காப்பீட்டு திட்டத்தில் சேராதவர்கள் சிகிச்சை பெற ஏதுவாக தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிர்ணயித்து அரசாணை பிறப்பித்துள்ளதாகவும், 

அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகளின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

 கூடுதல் கட்டண வசூல் தொடர்பாக புகார் அளிக்க தனி பிரிவு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதை பதிவு செய்த நீதிபதிகள், மருத்துவமனைகள் லாப நோக்குடன் செயல்படுவது கண்டறிந்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவை, திருப்பூர், ஈரோட்டில் சற்றும் குறையாத கொரோனா பாதிப்பு - அச்சத்தில் மக்கள்

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை மெதுவாக குறைந்து வருகிறது. அதேசமயம் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் பாதிப்பு சரசாரியாக அப்படியே தொடர்வது அச்சத்தை ஏற்படுத்துகிறது.

53 views

பிற செய்திகள்

"பாலாற்றில் தடுப்பணை கட்டப்படும்" - அமைச்சர் துரைமுருகன் பேச்சு

தென்பெண்ணை ஆற்றில் மழை காலங்களில் வீணாகும் தண்ணீரை பாலாற்றில் திருப்பி விடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் தெரிவித்துள்ளார்.

4 views

தடுப்பூசி செலுத்துவதில் டாப் 10 மாநிலங்கள் என்ன..?

நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 23.27 கோடியை தாண்டியுள்ளது.

139 views

தமிழகம் முழுவதும் எத்தனை கோயில்கள்? - பட்டியல் தயாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அரசுக்கு உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களின் பட்டியலை தயாரித்து, கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2 views

"தி பேமிலி மேன் 2" தொடர் விவகாரம்; தொடரை மத்திய அரசு நிறுத்த வேண்டும் - பாரதிராஜா வலியுறுத்தல்

தமிழ் இனத்திற்கு எதிரான, "தி பேமிலி மேன் 2" இணையத் தொடரை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என்று, திரைப்பட இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

17 views

கர்நாடகாவில் இருந்து மதுபானம் கடத்தல் - பெட்டி பெட்டியாக மதுபானம் பறிமுதல்

கர்நாடகாவில் இருந்து சரக்கு வாகனத்தில் தக்காளி பெட்டிகளுக்கு இடையே மறைத்து வைத்து கடத்திவரப்பட்ட ஆயிரத்து 680 மது பாட்டில்களை திருக்கோவிலூர் போலீசார் பறிமுதல் செய்தனர்

9 views

தமிழகத்தில் 31% பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி

தமிழகத்தில் கொரோனோவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டோர், 31 சதவிகிதத்தில் இருந்து 23 சதவிகிதமாக குறைந்து உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.