வரிசை கட்டி நிற்கும் பிரச்சினைகள்... பள்ளி கல்வித்துறை என்ன செய்யப் போகிறது?
பதிவு : ஜூன் 07, 2021, 10:56 AM
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பள்ளிகள் செயல்படாத நிலையில், பள்ளி கல்வித்துறை எதிர் கொண்டிருக்கும் சவால்கள் குறித்து பார்க்கலாம்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பள்ளிகள் செயல்படாத நிலையில், பள்ளி கல்வித்துறை எதிர் கொண்டிருக்கும் சவால்கள் குறித்து பார்க்கலாம்...

கொரோனா அச்சுறுத்தல் உலகையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. மாணவர்களின் நலன் கருதி, கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு, ஆன்லைன் மூலம் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. 

ஒட்டுமொத்த கல்வித்துறையும் முடங்கிக் கிடக்கும் இந்த சூழலில், மாணவர்களின் எதிர்காலம் குறித்த பல்வேறு கேள்விகளும் எழுந்திருக்கின்றன. 

கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தியே தீருவதில் உறுதியாக இருந்த அதிமுக அரசு, நீதிமன்றத்தின் கடுமையான விமர்சனத்தால், தமது முடிவில் இருந்து பின்வாங்கியது. 

இதைத் தொடர்ந்து, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, காலாண்டு, அரையாண்டு தேர்வுகளின் மதிப்பெண்கள் அடிப்படையில், மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
 
தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என, கடந்த பிப்ரவரி மாதம் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. 

ஆனால், கடந்த ஆண்டைப் போல் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படாத நிலையில், எதன் அடிப்படையில் மதிப்பெண்களை கணக்கீடு செய்வது என்பது தெரியாமல், நான்கு மாதங்களாக அதிகாரிகள் திணறிக் கொண்டிருக்கிறார்கள். 

இதே சிக்கல், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு விவகாரத்திலும் இருப்பதால், எப்படி மதிப்பெண்களை வழங்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.  

இது ஒருபுறமிருக்க, 10 மற்றும் 12ம் வகுப்பு தனித்தேர்வர்கள் விவகாரத்தில், இரண்டு ஆண்டுகளாக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால், பல்லாயிரக் கணக்கான தனித்தேர்வர்களும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். 

அரசு பள்ளி மாணவர்கள் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கல்வித்துறையால் வழங்கப்பட்டு வந்த நீட் தேர்வு பயிற்சி வகுப்பும் கொரோனாவால் முடங்கியுள்ளது. 

பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியோ, சட்டமன்றம் கூடிய பிறகுதான், இதில் முடிவெடுக்க முடியும் என கூறிவிட்டதால், அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவும் கேள்விக்குறியாகி நிற்கிறது. 
 
இதற்கிடையே, பதினோராம் வகுப்பு சேர்க்கை விவகாரமும் விடை தெரியாமல் நிற்கிறது. 

தனியார் பள்ளிகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, நுழைவுத் தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடத்திக் கொள்ள உத்தரவு பெற்றுவிட்ட நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான முடிவை, அரசு இன்னமும் அறிவிக்காமல் உள்ளது. 

இப்படி, பள்ளி கல்வித்துறையை நோக்கி வரிசைகட்டி நிற்கும் சவால்களுக்கு, தீர்வு எப்போதுதான் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள், லட்சக்கணக்கான மாணவர்கள்…

தொடர்புடைய செய்திகள்

(28.03.2021)மக்கள் தர்பார்: போடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் Vs நடுநிலை வாக்காளர்கள்

(28.03.2021)மக்கள் தர்பார்: போடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் Vs நடுநிலை வாக்காளர்கள்

109 views

"ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது" - டாஸ்மாக் வழிகாட்டு நெறிமுறைகள்

தமிழகத்தில் 27 மாவட்டங்களில், நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், கடைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன..

40 views

4வது நாளாக நீடிக்கும் கனமழை - மும்பைக்கு ’ரெட் அலர்ட்’

மும்பையில் 4-வது நாளாக நீடிக்கும் மழை காரணமாக, மாநகரின் பெரும்பாலான இடங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதியுறுகின்றனர்.

20 views

தடுப்பூசி குறித்த பிரதமரின் அறிவிப்பு - டுவிட்டரில் நன்றி தெரிவித்த பினராயிவிஜயன்

கொரோனா தடுப்பூசி தொடர்பான பிரதமரின் அறிவிப்புக்கு கேரள முதலமைச்சர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

13 views

பிற செய்திகள்

ஆட்சியர்களுடன் முதல்வர் நாளை ஆலோசனை - கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை

மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் நாளை காலை ஆலோசனை நடத்த உள்ளார்.

11 views

2019 -20 உயர்கல்வித் துறை ஆண்டறிக்கை - விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம்

பாஜக ஆட்சியில் உயர் கல்வித்துறையில் எஸ்சி, எஸ்டி மற்றும் இஸ்லாமிய மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டி உள்ளார்.

21 views

தடுப்பூசி போடும் தமிழகம் - தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் ஆர்வம்

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.

31 views

சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு - சிறப்பு உணவாக சிக்கன் கறி, மட்டன் சூப்

வண்டலூர் உயிரியல் பூங்காவில், கொரோனா பாதித்த சிங்கங்களுக்கு சிக்கன் கறி மற்றும் மட்டன் சூப் வழங்கப்பட்டு வரும் நிலையில், அவற்றின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது...

12 views

தடை செய்த பிறகும் தொடர்ந்து விளையாட்டு - போலீசில் வசமாக சிக்கிய பப்ஜி மதன்

தடை செய்த பிறகும் பப்ஜி விளையாட்டை சட்டவிரோதமாக விளையாடி யூட்யூபில் நேரலையில் ஒளிபரப்பியதோடு, சிறுமிகளிடம் ஆபாசமாக பேசியதாக யூட்யூப் பிரபலம் ஒருவருக்கு சிக்கல் வலுத்துள்ளது...

12 views

மத்திய தொல்லியல் துறை பாதுகாப்பு சின்னம் - அருங்காட்சியகம், நினைவுச் சின்னம் திறப்பு

மத்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் நினைவுச் சின்னங்களை பார்வையிட, வரும்16ஆம் தேதி முதல் அனுமதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.