3 நாட்களாக வெளுத்து வாங்கிய கனமழை - நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரிப்பு
பதிவு : ஜூன் 07, 2021, 09:45 AM
கொடைக்கானல் மலைப்பகுதிகளில், பெய்த கனமழையால் அருவிகளில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
கொடைக்கானல் மலைப்பகுதிகளில், பெய்த கனமழையால் அருவிகளில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக வெள்ளிநீர் வீழ்ச்சியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதேபோல், தேவதை அருவி, கரடி சோலை அருவி , பம்பார் அருவி உள்ளிட்ட அருவிகளிலும் நீர் அதிகளவில் கொட்டுகிறது. 

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை/ஆறுகளில் வெள்ளம்-விவசாயிகள் மகிழ்ச்சி///

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள புளியங்குடி மேற்குத்தொடர்ச்சி மலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது,. இதனால் கோட்டை மலையாறு, வாழமலையாறு ஆகிய ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது,. இதனால் புளியங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏரி மற்றும் குளங்கள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

குமரியில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை/அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர்/திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம் 

கன்னியாகுமரி மாவட்டத்தில் திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தென் மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதோடு, அணைகளுக்கு நீர் வரத்தும் அதிகமாகி உள்ளது. இந்நிலையில், பேச்சிப்பாறை  அணையிலிருந்து  விநாடிக்கு 2 ஆயிரத்து 263 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால், கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதன் காரணமாக அருவிக்கு அருகே அமைந்துள்ள கல் மண்டபத்தின் பெரும்பகுதி தண்ணீரில் மூழ்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(28.03.2021)மக்கள் தர்பார்: போடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் Vs நடுநிலை வாக்காளர்கள்

(28.03.2021)மக்கள் தர்பார்: போடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் Vs நடுநிலை வாக்காளர்கள்

109 views

"ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது" - டாஸ்மாக் வழிகாட்டு நெறிமுறைகள்

தமிழகத்தில் 27 மாவட்டங்களில், நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், கடைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன..

43 views

4வது நாளாக நீடிக்கும் கனமழை - மும்பைக்கு ’ரெட் அலர்ட்’

மும்பையில் 4-வது நாளாக நீடிக்கும் மழை காரணமாக, மாநகரின் பெரும்பாலான இடங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதியுறுகின்றனர்.

20 views

தடுப்பூசி குறித்த பிரதமரின் அறிவிப்பு - டுவிட்டரில் நன்றி தெரிவித்த பினராயிவிஜயன்

கொரோனா தடுப்பூசி தொடர்பான பிரதமரின் அறிவிப்புக்கு கேரள முதலமைச்சர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

13 views

பிற செய்திகள்

கொரோனா 3வது அலை : குழந்தைகளை பாதிக்குமா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனா மூன்றாம் அலை வந்தாலும் அதனை சமாளிக்க தமிழக அரசு தயார் நிலையில் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

58 views

நடிகர்கள் பெயரில் போலி கணக்குகள் - அடுத்தடுத்து புகார் அளித்த நடிகர்கள்

அடுத்தடுத்து காமெடி நடிகர்கள் பெயரில் போலியாக சமூக வலைதளங்களில் கணக்குகள் துவங்கப்பட்டுள்ளதாக புகார்கள் வெளியாகி இருப்பது சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது...

4 views

கொரோனா தடுப்பு நிவாரண நிதி - விஜய்சேதுபதி ரூ.25 லட்சம் நிதியுதவி

நடிகர் விஜய்சேதுபதி கொரோனா தடுப்பு நிவாரண நிதியாக 25 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.

17 views

கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் டாப் 10 நாடுகள்

கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் உலகில் முதல் பத்து இடங்களில் உள்ள நாடுகளை பற்றி ஒரு செய்தி தொகுப்பு..

404 views

மாணவிகளிடம் அத்துமீறியதாக புகார் - சிவசங்கர் பாபாவை கைது செய்ய நடவடிக்கை

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில், சிவசங்கர் பாபாவை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி தனிப்படை போலீசார் உத்தரகண்டிற்கு விரைந்துள்ளனர்.

7 views

மாவட்ட ஆட்சியர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை

மாவட்ட ஆட்சியர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.