மோடி அரசு கொள்கை - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
பதிவு : ஜூன் 06, 2021, 11:46 AM
23 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே தள்ளப்பட்டதற்கு மோடி அரசின் தவறான கொள்கைகளே காரணம் என முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
23 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே தள்ளப்பட்டதற்கு மோடி அரசின் தவறான கொள்கைகளே காரணம் என முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கொரோனா பெருந்தொற்றின் பொருளாதார விளைவுகளை, மத்திய அரசு கையாண்ட விதத்தை நான் தொடர்ந்து விமர்சித்து வருகிறேன் என ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இந்தப் பெருந்தொற்று, கீழ் அடுக்கு நடுத்தர மக்களை எப்படிப் பாதித்திருக்கிறது என்ற ஆய்வை வல்லுநரின் துணையுடன் நடத்தினேன் எனவும், அதில் ஆயிரத்து 4 நபர்கள் கலந்துகொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதில், கடந்த 14 மாதங்களில் தங்கள் மாத வருமானம் குறைந்திருப்பதாக 880 நபர்கள் பதிலளித்தார்கள் என கூறியுள்ள ப. சிதம்பரம், 758 நபர்கள் தங்கள் குடும்பச் செலவு கூடியிருப்பதை பதிவு செய்தனர் என தெரிவித்துள்ளார்.

மேலும்,  725 நபர்கள் தங்கள் சேமிப்பிலிருந்து பணம் எடுத்திருக்கிறார்கள் எனவும், 329 நபர்கள் தங்கள் உடமைகளை விற்றனர் அல்லது அடமானம் வைத்திருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

702 நபர்கள் கடன் வாங்கியிருக்கிறார்கள் என கூறியுள்ள ப. சிதம்பரம், இந்த கீழ் நடுத்தர மக்கள் ஏழைகளாக மாறிக் கொண்டிருக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இவர்களுக்கும் இவர்களை விட வறுமையில் உள்ள எழை வர்க்கத்திற்கும் மோடி அரசு என்ன செய்திருக்கிறது? என கேள்வி எழுப்பியுள்ள ப. சிதம்பரம்,  

23 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே தள்ளப்பட்டதற்கு மோடி அரசின் இயலாமையும், தவறான கொள்கைகளுமே காரணம் என்ற குற்றச்சாட்டு நியாயம் தானே? என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

வடகொரியாவில் கடும் உணவுப்பற்றாக்குறை - ஒப்புக் கொண்ட அதிபர் கிம் ஜாங் உன்

உலகின் பார்வையிலிருந்து தப்பி, ஒரு மர்மப் பிரதேசமாகவே விளங்கும் நாடு வட கொரியா... அங்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக முதன் முறையாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக் கொண்டுள்ளார்...என்னதான் நடக்கிறது வட கொரியாவில்...? இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

136 views

அபூர்வ நோயால் போராடும் குழந்தை ரூ.16 கோடிக்கு மருந்து வாங்க உதவி கோரி உயர்நீதிமன்றத்தை நாடிய தந்தை

அபூர்வ நோயால் போராடும் குழந்தையின் தந்தை பணஉதவி கேட்டு, கேரள உயர்நீதிமன்ற கதவுகளை தட்டியுள்ளார்.ம

86 views

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்றரை வயது குழந்தை - ஆக்ராவில் திக் திக் நிமிடங்கள் !

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்றரை வயது குழந்தை - ஆக்ராவில் திக் திக் நிமிடங்கள் !

84 views

பிற செய்திகள்

பெஞ்ச் கிளர்க்-ஆக இருந்து கடின உழைப்பால் நீதிபதியாக உயர்ந்த பதருதீன்

கேரளாவில் பெஞ்ச் கிளர்க்காக தனது பணியைத் துவங்கி, உயர்நீதிமன்ற நீதிபதி பதவியை அடைந்துள்ளார் கொல்லம் பகுதியைச் சேர்ந்த பதருதீன்.

7 views

ஆயிஷா சுல்தானாவுக்கு எதிராக கேரளா உயர் நீதிமன்றத்தில் புகார் - லட்சத்தீவு நிர்வாகம் நடவடிக்கை

ஆயிஷா சுல்தானாவுக்கு எதிராக கேரளா உயர் நீதிமன்றத்தில் லட்சத்தீவு நிர்வாகம் புகார் தெரிவித்துள்ளது.

34 views

பிரதமர் குறித்து சர்ச்சை பேச்சு - சூரத் நீதிமன்றத்தில் ராகுல் ஆஜர்

பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சூரத் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்

6 views

தின்பண்டம் வேண்டும் என முதல்வருக்கு கடிதம் - 6ம் வகுப்பு மாணவி கோரிக்கை நிறைவேற்றம்

கேரளாவில் ஆறாம் வகுப்பு மாணவியின் கோரிக்கையை ஏற்று, இலவச ரேசன் பொருட்கள் வழங்கும் திட்டத்தில் தின்பண்டம் வழங்கப்படும் என முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

504 views

ஜம்மு காஷ்மீர் அரசியல் விவகாரம் - பிரதமர் மோடி ஆலோசனை கூட்டம்

ஜம்மு காஷ்மீர் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

13 views

லட்சத்தீவு விவகாரத்தில் தேசத்துரோக வழக்கு - ஆயிஷா சுல்தானாவிடம் 8 மணி நேரம் விசாரணை

லட்சத்தீவு விவகாரம் தொடர்பான தேசத்துரோக வழக்கில் நடிகை ஆயிஷா சுல்தானாவிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.