ஊரடங்கால் மூடப்பட்ட தேயிலை தொழிற்சாலைகள் - 60 ஆயிரம் சிறு, குறு விவசாயிகள் பாதிப்பு
பதிவு : ஜூன் 06, 2021, 11:43 AM
நீலகிரியில் தேயிலை தொழிற்சாலைகள் மூடப்பட்டிருப்பதால், சுமார், 60 ஆயிரம் சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி அலசுகிறது இந்த தொகுப்பு...
நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர், கோத்தகிரி, குன்னூர், சுற்றுவட்டார பகுதிகளில் 60% பேர் தேயிலை விவசாயம் செய்து வருகின்றனர். பெருந்தோட்டங்கள் தவிர 60 ஆயிரம் சிறு, குறு தேயிலை விவசாயிகள் உள்ளனர்.நாள்தோறும் சுமார் 5 லட்சம் கிலோ பசுந்தேயிலை பறிக்கப்பட்டு தொழிற்சாலைளுக்கு அனுப்பப்படுவது வழக்கம். தேயிலை தூள் உற்பத்தி செய்ய அரசு தேயிலை தொழிற்சாலைகள் உட்பட 50க்கும் 
மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.இந்த நிலையில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று பரவிய நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அனைத்து தொழிற்சாலைகளையும் மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதனால், கூடலூர், பந்தலூர் பகுதிகளில் தேயிலை தொழிற்சாலைகள் அனைத்தும் முழுவதுமாக மூடப்பட்டுள்ளன.இதனால், அடுத்த விளைச்சலுக்காக விவசாயிகள் வேறு வழியின்றி பசுந்தேயிலைகளை பறித்து வீணாக வீசி வருகின்றனர். சில விவசாயிகள் தேயிலைச் செடிகளுக்கே உரமாக கொட்டி வருகின்றனர். இதனால் நாள்தோறும் சிறு குறு விவசாயிகள்
பல ஆயிரம் ரூபாய் நஷ்டத்தை எதிர்கொண்டுவருகின்றனர்.எனவே, தமிழக அரசு உடனடியாக தேயிலை தொழிற்சாலைகள் இயங்க சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி தர வேண்டும் என தேயிலை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும், சிறு-குறு தேயிலை விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
தேயிலை விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வருமா? 
தந்தி டிவி செய்திகளுக்காக கூடலூர் செய்தியாளர் சுரேஷ்குமார்...


தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6952 views

கேரளாவில் நடந்த விபத்தில் புதிய திடுக்கிடும் தகவல்கள்

கேரளாவில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் தங்கம் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

135 views

ஹாரிபாட்டர் ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் : திரைப்படத்தில் வரும் பொருட்கள் நிஜத்தில்..

புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான "ஹாரி பாட்டர்" ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் ஒன்று காத்திருக்கிறது.

106 views

வடகொரியாவில் கடும் உணவுப்பற்றாக்குறை - ஒப்புக் கொண்ட அதிபர் கிம் ஜாங் உன்

உலகின் பார்வையிலிருந்து தப்பி, ஒரு மர்மப் பிரதேசமாகவே விளங்கும் நாடு வட கொரியா... அங்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக முதன் முறையாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக் கொண்டுள்ளார்...என்னதான் நடக்கிறது வட கொரியாவில்...? இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

96 views

அபூர்வ நோயால் போராடும் குழந்தை ரூ.16 கோடிக்கு மருந்து வாங்க உதவி கோரி உயர்நீதிமன்றத்தை நாடிய தந்தை

அபூர்வ நோயால் போராடும் குழந்தையின் தந்தை பணஉதவி கேட்டு, கேரள உயர்நீதிமன்ற கதவுகளை தட்டியுள்ளார்.ம

58 views

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்றரை வயது குழந்தை - ஆக்ராவில் திக் திக் நிமிடங்கள் !

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்றரை வயது குழந்தை - ஆக்ராவில் திக் திக் நிமிடங்கள் !

47 views

பிற செய்திகள்

"நிதிநிலை சீராகும் போது தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்படும்" - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

தமிழகத்தின் நிதிநிலை சீரான பிறகு, பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

1 views

போலீசார் தாக்கியதில் மளிகை கடை உரிமையாளர் உயிரிழப்பு

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே போலீசார் தாக்கியதில் மளிகை கடை உரிமையாளர் உயிரிழந்துள்ளார்.

559 views

ஜூன் 28 ம் தேதி முதல் "கீழமை நீதிமன்றங்களில் நேரடி விசாரணை" - உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர்

தமிழகத்தில் ஜூன் 28 ம் தேதி முதல் கீழமை நீதிமன்றங்களில் நேரடி விசாரணை நடத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிவித்துள்ளார்.

6 views

கொரோனா காலத்திலும் தங்க கடத்தல் ஜரூர் - 7.5 கிலோ தங்கம் பறிமுதல்

கொரோனா கால சிறப்பு விமான சேவையிலும் தங்க கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், திருச்சியில் ஏழரை கிலோ தங்கம் சிக்கியுள்ளது.

5 views

கொரோனாவுக்கு நேற்று 1,358 பேர் இறப்பு - 16-வது நாளாக 5%க்கும் கீழ் தினசரி பாதிப்பு

இந்தியாவில் தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 16-வது நாளாக 5 சதவீதத்திற்கு கீழ் குறைந்து 2 புள்ளி ஆறு ஏழு சதவீதமாக உள்ளது.

7 views

"மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமனம்" - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமனம் செய்வது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும் என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.