கருப்பு பணம், பேரம் பேசியதாக குற்றச்சாட்டு - கடும் நெருக்கடியில் கேரள பாஜக தலைவர்கள்
பதிவு : ஜூன் 06, 2021, 10:42 AM
கருப்பு பணம் கடத்தல், வேட்பாளரிடம் பேரம் பேசியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளால் கேரள பா.ஜ.க தலைவர்கள் கடும் நெருக்கடியில் சிக்கி உள்ளனர்.
கருப்பு பணம் கடத்தல், வேட்பாளரிடம் பேரம் பேசியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளால் கேரள பா.ஜ.க தலைவர்கள் கடும் நெருக்கடியில் சிக்கி உள்ளனர்.

கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் கார் ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட 3 கோடியே 50 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்க பட்டதாகவும், 

இந்த பணம் பாஜகவின் தேர்தல் செலவுக்காக கர்நாடகாவில் இருந்து கொண்டு வரப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்த‌து.
இந்த பணத்தை பாஜக நிர்வாகிகளே கொள்ளை அடித்த‌தாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் கேரள ஜனநாயக கட்சியின் பெண் தலைவரான ஜானு என்பவருடன், பாஜக நிர்வாகி ஒருவர் பேரம் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அதேபோல், பாஜக மாநில தலைவர் சுரேந்திரன் போட்டியிட்ட தொகுதியில், சுயேச்சை வேட்பாளர் ஒருவரிடம் பேரம் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள் காரணமாக கேரள பாஜகவின் முக்கிய தலைவர்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கேரள சட்டமன்ற தேர்தலில் பாஜக கருப்பு பணத்தை பயன்படுத்தியதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்த சம்பவங்கள் கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மாநில பாஜக தலைவர்கள் கொச்சியில் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

வடகொரியாவில் கடும் உணவுப்பற்றாக்குறை - ஒப்புக் கொண்ட அதிபர் கிம் ஜாங் உன்

உலகின் பார்வையிலிருந்து தப்பி, ஒரு மர்மப் பிரதேசமாகவே விளங்கும் நாடு வட கொரியா... அங்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக முதன் முறையாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக் கொண்டுள்ளார்...என்னதான் நடக்கிறது வட கொரியாவில்...? இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

98 views

அபூர்வ நோயால் போராடும் குழந்தை ரூ.16 கோடிக்கு மருந்து வாங்க உதவி கோரி உயர்நீதிமன்றத்தை நாடிய தந்தை

அபூர்வ நோயால் போராடும் குழந்தையின் தந்தை பணஉதவி கேட்டு, கேரள உயர்நீதிமன்ற கதவுகளை தட்டியுள்ளார்.ம

59 views

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்றரை வயது குழந்தை - ஆக்ராவில் திக் திக் நிமிடங்கள் !

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்றரை வயது குழந்தை - ஆக்ராவில் திக் திக் நிமிடங்கள் !

48 views

பிற செய்திகள்

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு 3 நாளில் 39 லட்சம் தடுப்பூசி வழங்கப்படும் - மத்திய அரசு தகவல்

மத்திய அரசு இதுவரை29 கோடியே 68 லட்சத்து 27 ஆயிரத்து 450 கொரோனா தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இலவசமாக வழங்கியுள்ளது.

7 views

டெல்டா பிளஸ் வகை கொரோனா தொற்று - நாட்டில் 40 பேருக்கு உள்ளதாக தகவல்

டெல்டா பிளஸ் வகை கொரோனா தொற்று நாட்டில் 40 பேருக்கு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

16 views

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள்; தேசம் பெருமிதம் கொள்கிறது - பிரதமர் மோடி

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர்கள் குறித்து தேசம் பெருமை கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

5 views

புதுச்சேரி அமைச்சரவை பட்டியல்;தமி​ழிசையிடம் வழங்கினார் ரங்கசாமி - ஒப்புதல் கிடைத்த உடன் பதவியேற்பு விழா

அமைச்சரவை பட்டியலை துணைநிலை ஆளுநர் தமிழிசையிடம், முதல்வர் ரங்கசாமி இன்று வழங்கினார்.

7 views

டெல்லிக்கு போதை பொருள் கடத்தல் - 2 பேருக்கு அதிகாரிகள் வலைவீச்சு

பெங்களூரு வழியாக டெல்லிக்கு ஹெராயின் கடத்திய 2 பேரை, கொச்சி மற்றும் பெங்களூர் போதை பொருள் தடுப்புப் பிரிவினர் தேடி வருகின்றனர்.

17 views

கொட்டித் தீர்த்த கனமழை; வெள்ளத்தில் மிதக்கும் சாலைகள் - மக்கள் கடும் அவதி

மேற்கு வங்கத்தில் கொட்டித் தீர்த்த கன மழையால் பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.