"பன்னிரென்டாம் வகுப்பு பொது தேர்வு ரத்து"
பதிவு : ஜூன் 05, 2021, 10:25 PM
கொரோனா தொற்று பரவல் காரணமாக மாணவர்கள் நலன் கருதி தமிழகத்தில் இந்த ஆண்டு பன்னிரென்டாம் வகுப்பு பொது தேர்வு நடத்தப்படமாட்டாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
"பன்னிரென்டாம் வகுப்பு பொது தேர்வு ரத்து" 

கொரோனா தொற்று பரவல் காரணமாக மாணவர்கள் நலன் கருதி தமிழகத்தில் இந்த ஆண்டு பன்னிரென்டாம் வகுப்பு பொது தேர்வு  நடத்தப்படமாட்டாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க  போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.மாணவர்களின் கல்வியிலும் , பாதுகாப்பிலும் மிகுந்த அக்கறை கொண்ட தமிழக அரசு , பொது தேர்வுகள் தொடர்பாக பல்வேறு தரப்பினரையும் கலந்து ஆலோசித்து  தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சிபிஎஸ்இ பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொது தேர்வை ஒன்றிய அரசு  ரத்து செய்தது போல் பல்வேறு மாநிலங்களும் பன்னிரென்டாம் வகுப்பு பொது தேர்வுகளை ரத்து செய்துள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 3 நாட்களாக பல்வேறு தரப்பினரிடமும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் தலைமையில் கருத்துகள் கவனமுடன் கேட்டறியப்பட்டதாகவும், அனைத்து தரப்பினரும் மாணவர்களின் உடல் மற்றும் மன நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கருத்தில் உறுதியாக உள்ளதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்த இயலும் என்ற நடைமுறையால் அதற்கு குறைவான வயதுள்ள மாணவர்களை தேர்வு எழுத ஒரே நேரத்தில் வர செய்வது தொற்றை அதிகரிக்க செய்யலாம் என்று வல்லுனர்கள் அறிவுரை வழங்கியுள்ளதாகவும்  முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.பல்வேறு தரப்பினரின் ஆலோசனைகளின்படி தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு இந்த ஆண்டு ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.மாணவர்களுக்கு எவ்வாறு  மதிப்பெண் வழங்குவது என்பதனை முடிவு செய்ய உயர் அதிகாரிகள், தலைமை ஆசிரியர்களை  கொண்ட குழு அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுகள் முழுமையாக ரத்து செய்யப்பட்ட நிலையில்  அகில இந்திய அளவில் நீட் போன்ற நுழைவு தேர்வுகளை நடத்துவது உகந்ததாக இருக்காது என்று மாநில அரசு கருதுவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.இதனால் உயர்கல்விக்காக நடத்தப்படும் பல்வேறு நுழைவுத்தேர்வுகளையும் ரத்து செய்ய  வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு தாம் கடிதம் எழுதியுள்ளதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6952 views

கேரளாவில் நடந்த விபத்தில் புதிய திடுக்கிடும் தகவல்கள்

கேரளாவில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் தங்கம் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

135 views

ஹாரிபாட்டர் ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் : திரைப்படத்தில் வரும் பொருட்கள் நிஜத்தில்..

புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான "ஹாரி பாட்டர்" ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் ஒன்று காத்திருக்கிறது.

106 views

வடகொரியாவில் கடும் உணவுப்பற்றாக்குறை - ஒப்புக் கொண்ட அதிபர் கிம் ஜாங் உன்

உலகின் பார்வையிலிருந்து தப்பி, ஒரு மர்மப் பிரதேசமாகவே விளங்கும் நாடு வட கொரியா... அங்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக முதன் முறையாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக் கொண்டுள்ளார்...என்னதான் நடக்கிறது வட கொரியாவில்...? இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

97 views

அபூர்வ நோயால் போராடும் குழந்தை ரூ.16 கோடிக்கு மருந்து வாங்க உதவி கோரி உயர்நீதிமன்றத்தை நாடிய தந்தை

அபூர்வ நோயால் போராடும் குழந்தையின் தந்தை பணஉதவி கேட்டு, கேரள உயர்நீதிமன்ற கதவுகளை தட்டியுள்ளார்.ம

59 views

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்றரை வயது குழந்தை - ஆக்ராவில் திக் திக் நிமிடங்கள் !

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்றரை வயது குழந்தை - ஆக்ராவில் திக் திக் நிமிடங்கள் !

48 views

பிற செய்திகள்

"நிதிநிலை சீராகும் போது தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்படும்" - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

தமிழகத்தின் நிதிநிலை சீரான பிறகு, பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

7 views

ஒருவருக்கே எத்தனை பதவியை கொடுப்பது? - சசிகலா

அதிமுக, இரண்டு மாநிலங்களவை பதவியை, எதிர்க்கட்சியினருக்கு தாரைவார்த்து இருப்பதாக சசிகலா தெரிவித்து உள்ளார்.

64 views

"அரசு பணியில் பிற மாநிலத்தவர் - ஆய்வு செய்து நடவடிக்கை" - நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

தமிழகத்தில் எதன் அடிப்படையில் வெளிமாநிலத்தவருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

36 views

பிரபல ரவுடி விஷ்வா 200-க்கும் மேற்பட்டோருடன் தமிழக பாஜக தலைவரை சந்தித்ததால் பரபரப்பு

ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த பிரபல ரவுடி விஷ்வா 200-க்கும் மேற்பட்டோருடன், தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை சந்தித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

49 views

மத்திய அரசு மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு - 9 மாநில முதல்வர்களுக்கு கடிதம்

சிறுதுறைமுகங்கள் தொடர்பாக மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ள மசோதாவை, ஆரம்ப நிலையிலேயே எதிர்க்க 9 மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்களுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

8 views

"பிரதமர் கண்ணீரால் உயிரிழப்பை தடுக்க இயலாது" - மத்திய அரசு மீது ராகுல்காந்தி சாடல்

கொரோனாவின் முதல் 2 அலைகளில் மத்திய அரசு முன்னெச்சரிக்கை உடன் செயல்பட்டு இருந்தால் 90 சதவீத உயிரிழப்புகளை தடுத்திருக்க முடியும் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

105 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.