கொரோனாவால் செவிலியர் உயிரிழப்பு - கண்ணீருடன் தவிக்கும் 3 பெண் பிள்ளைகள்
பதிவு : ஜூன் 05, 2021, 05:23 PM
விபத்தில் தந்தையை இழந்து, தாயுடன் பாட்டி வீட்டில் வசித்து வந்த நிலையில், கொரோனாவால் செவிலியரான தன் தாயையும் பாட்டியையும் இழந்து தவிக்கின்றனர், 3 பெண் பிள்ளைகள்.
கண்ணுக்குத் தெரியாத கொரோனா. மூச்சு முட்ட வைக்கும் பிபிஇ கிட். கண்முன்னே உயிர்கள் பறி போவதால் ஏற்படும்  மன அழுத்தம் ஆகியவற்றுடன் நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறார்கள், ஒவ்வொரு மருத்துவரும் செவிலியரும்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம், பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் எழிலரசி. இவர் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்தார்.

விபத்தில் கணவரை இழந்த செவிலியர் எழிலரசி தன் 3 பெண் பிள்ளைகளுடன், தன்னுடைய தாய் வீட்டில் வசித்து வந்தார். கொரோனா காலத்தில் தான் மருத்துவர்களும் செவிலியர்களும் நேரம் காலம் பார்க்காமல் உழைக்கின்றனரே. அப்படித்தான் எழிலரசியும் தன் பிள்ளைகள் பாசத்தால் வற்புறுத்தியும் வீட்டில் இருக்காமல், கடமையே முக்கியம் என கொரோனா அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்ற சென்றுள்ளார்.

எழிலரசிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இரக்கமற்ற கொரோனா மே 24ஆம் தேதி எழிலரசியின் உயிரைப் பறித்துக் கொண்டது. தன் மகளுக்கு உதவியாய் மருத்துவமனைக்கு சென்றிருந்த எழிலரசியின் தாயார் பாப்பம்மாளும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, எழிலரசி இறந்த அடுத்த நாளே உயிரிழந்தார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு, செவிலியரும் அவரது தாயும் அடுத்தடுத்த நாட்களிலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியது. 15 ஆண்டுகள் செவிலியப் பணியில் இருந்த தன் மகளும், உதவியாய்ச் சென்ற மனைவியும் கொரோனாவால் பலியானதால், தற்போது 3 பிள்ளைகளையும் தனி ஆளாக தான் பார்த்துக் கொள்ள வேண்டிய சூழலில் தவித்து வருவதாக எழிலரசியின் தந்தை தமிழ்மாறன் வேதனையுடன் தெரிவித்தார்.

தாயையும் பாட்டியையும் இழந்த மீள முடியா சோகத்திலும், எழிலரசியின் மூத்த மகள் ஹரிணியோ, "மக்கள் ஒற்றுமையாக இருந்தால் கொரோனாவிலிருந்து மீண்டு விடலாம்" என்று கண்ணீருடன் சொல்கிறார்.

பொதுமக்களின் அலட்சியத்தால், இப்படி எத்தனையோ செவிலியர்களின் பிள்ளைகள் நிற்கதியாய் நிற்கின்றனர்... இந்தப் பெண் பிள்ளைகளின் கண்ணீருக்கு பதில் சொல்ல, ஒன்றிணைந்து கொரோனாவை வீழ்த்த வேண்டும்.

பிற செய்திகள்

ஆட்சியர்களுடன் முதல்வர் நாளை ஆலோசனை - கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை

மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் நாளை காலை ஆலோசனை நடத்த உள்ளார்.

11 views

2019 -20 உயர்கல்வித் துறை ஆண்டறிக்கை - விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம்

பாஜக ஆட்சியில் உயர் கல்வித்துறையில் எஸ்சி, எஸ்டி மற்றும் இஸ்லாமிய மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டி உள்ளார்.

21 views

தடுப்பூசி போடும் தமிழகம் - தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் ஆர்வம்

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.

30 views

சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு - சிறப்பு உணவாக சிக்கன் கறி, மட்டன் சூப்

வண்டலூர் உயிரியல் பூங்காவில், கொரோனா பாதித்த சிங்கங்களுக்கு சிக்கன் கறி மற்றும் மட்டன் சூப் வழங்கப்பட்டு வரும் நிலையில், அவற்றின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது...

12 views

தடை செய்த பிறகும் தொடர்ந்து விளையாட்டு - போலீசில் வசமாக சிக்கிய பப்ஜி மதன்

தடை செய்த பிறகும் பப்ஜி விளையாட்டை சட்டவிரோதமாக விளையாடி யூட்யூபில் நேரலையில் ஒளிபரப்பியதோடு, சிறுமிகளிடம் ஆபாசமாக பேசியதாக யூட்யூப் பிரபலம் ஒருவருக்கு சிக்கல் வலுத்துள்ளது...

12 views

மத்திய தொல்லியல் துறை பாதுகாப்பு சின்னம் - அருங்காட்சியகம், நினைவுச் சின்னம் திறப்பு

மத்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் நினைவுச் சின்னங்களை பார்வையிட, வரும்16ஆம் தேதி முதல் அனுமதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.