4 மாவட்டங்களில் ஆய்வு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டம்
பதிவு : ஜூன் 05, 2021, 04:53 PM
தமிழக மருத்துவமனைகளில் 32 ஆயிரத்து 646 படுக்கைகள் காலியாக உள்ளதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்..
நீலகிரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆய்வு செய்ய அவர் திட்டமிட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் மருந்து உற்பத்தி நிறுவனங்களின் செயல்பாடுகள், தடுப்பூசி உற்பத்தி செய்யும் பட்சத்தில் அந்த நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளார். 
 
தமிழகம் முழுவதும் 660 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளதாகவும், ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாத நிலை இருப்பதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்தை தமிழகத்திற்கு கூடுதலாக ஒதுக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மைய விவகாரத்தில் மத்திய அரசு விரைவில் நல்ல முடிவு வரும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் 32 ஆயிரத்து 646 படுக்கைகள் காலியாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிற செய்திகள்

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜூலை 2 வரை நீதிமன்ற காவல்

முன்னாள் அமைச்சர் மணிகண்டனை ஜூலை 2ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

12 views

நாளை முதல் மெட்ரோ ரயில் சேவை - காலை 6.30 - இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில்

நாளை முதல் மெட்ரோ ரயில் சேவைக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், காலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என, மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

12 views

தமிழகத்தில் மேலும் 7817 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7817 பேருக்கு கொரோனா உறுதி

27 views

யூடியூபர் மதனின் யூடியூப் சேனலில் இருந்து வீடியோக்கள் நீக்கம்

யூடியூபர் மதனின் யூடியூப் சேனலில் இருந்து வீடியோக்கள் நீக்கம்

16 views

ஏழ்மையில் தவித்த இரு குடும்பங்கள் - சொந்த வீட்டுக் கனவை நனவாக்கிய ஆட்சியர்கள்

எலி வலையானாலும் தனி வலை வேண்டும்" என்று சொல்வார்கள்... ஆனால் ஏழைகளுக்கோ சொந்த வீடு என்பது எட்டாக் கனியாகவே உள்ளது...

10 views

பெட்ரோல், டீசல் விலை விவகாரம் - "திமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகி விட்டது" - பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கருத்து

பெட்ரோல், டீசல் விலை விவகாரத்தில், தி.மு.க.வின் இரட்டை வேடம் அம்பலமாகி விட்டதாக, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

56 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.