தமிழகத்தில் அதிகரிக்கும் கள்ளச்சாராயம் - ஊரடங்கில் கொடிகட்டி பறப்பது எப்படி?
பதிவு : ஜூன் 05, 2021, 10:47 AM
தமிழகத்தில் மதுக்கடைகள் அடைக்கப்பட்ட போதிலும் கள்ளச்சாராய உற்பத்தியும் விற்பனையும் அதிகரித்துள்ளது.
ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் கூட அதுதொடர்பான செய்திகளுக்கு பஞ்சமே இல்லாத வகையில் தினம் தினம் மதுவிலக்கு போலீசாரின் அதிரடிகளும் தொடர்ந்து கொண்டே உள்ளது.

அதிலும் கடந்த 10 நாட்களாக கள்ளச்சாராய உற்பத்தி தொடர்பான செய்திகள் அதிகம் வெளியே வந்தது. சில நாட்களுக்கு முன்பாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய 4 பேரை கைது செய்த போலீசார், அவர்கள் காய்ச்சி வைத்திருந்த 150 லிட்டர் சாராய ஊறல்களை அழித்தனர். 

வாணியம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சும் கும்பல் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருவது மதுவிலக்கு போலீசாருக்கு பெரும் சவாலை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக 110 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் வெளிமாநில மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், 4 பேரை கைது செய்தனர். 

இதனிடையே வாட்ஸ் அப்பில் சரக்கு என்ற பெயரில் குழு உருவாக்கி மதுபானங்களை விற்பனை செய்ததும் வாணியம்பாடியில் நடந்தது. இந்த சம்பவத்திலும் போலீசாரின் நடவடிக்கை துரிதமாக இருந்தது. 

அதேநாளில் தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மலைக்கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக வெளியான தகவலையொட்டி போலீசார் சோதனைக்கு சென்றனர். அப்போது ஒரு பெரிய சைஸ் ஊறலில் சுமார் 3ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராயம் இருந்தது தெரியவந்ததை தொடர்ந்து போலீசார் அவற்றை அழித்தனர். 

கடந்த வாரம் மயிலாடுதுறையில் கள்ளச்சாராயத்தை குடித்த கூலித் தொழிலாளர்களான பிரபு மற்றும் செல்வம் ஆகியோர் பலியான நிலையில் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் கள்ளச்சாராய வேட்டை நடந்தது. அப்போது அந்த பகுதிகளிலும் ஏராளமான சாராய ஊறல்கள் அழிக்கப்பட்டன. 

இதன் தொடர்ச்சியாக கடலூர் மாவட்டத்திலும் கள்ளச்சாராயம் தொடர்ச்சியாக பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டு வருகிறது. 

இது ஒரு பக்கம் என்றால் வீட்டிலேயே சாராயத்தை காய்ச்சும் கும்பலின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. யூ ட்யூப் பார்த்து குக்கரில் சாராயம் காய்ச்சி வரும் கும்பலையும் போலீசார் அதிரடியாக கைது செய்து வருகின்றனர். குக்கரில் சாராயம் காய்ச்சிய தந்தை, மகனை கரூர் போலீசார் கைது செய்த நிலையில் அடுத்த நாளே மீண்டும் 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இப்படியாக தினம் தினம் கள்ளச்சாராயம் தொடர்பான செய்திகள் அதிகரித்து வரும் நிலையில் இது ஊரடங்கில் மட்டும் தான் நடக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. திடீரென ஊரடங்கு காலத்தில் மட்டும் கள்ளச்சாராயம் காய்ச்சும் கும்பல் வெளியாவது எப்படி? அவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தாலும் கூட மற்ற நாட்களிலும் இதனை கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் இருந்து முன்வைக்கப்பட்டுள்ளது. 

பிற செய்திகள்

"துக்க நிகழ்ச்சியில் தான் தொற்று அதிகமாக பரவுகிறது" - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

தமிழ்நாட்டில் 743 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 679 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

70 views

செம்மொழி நிதி ஒதுக்குவதில், பாரபட்சம்; மூத்த மொழியான தமிழுக்கு குறைந்த நிதி - மத்திய அரசு பதிலளிக்க மதுரைக் கிளை உத்தரவு

தமிழ்மொழி வளர்ச்சிக்கு ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நிதி ஒதுக்கவும், சென்னையில் உள்ள மத்திய செம்மொழி கல்வி நிறுவனத்தை நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக மாற்ற கோரியும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

7 views

"ஒன்றரை மாதத்தில் தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் 30 ஆயிரம் படுக்கைகள் காலியாக இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

7 views

"எப்படி பணிமாற்றம் வாங்கி வந்தாய்..." மருத்துவரை தாக்கிய தலைமை மருத்துவர்

கடலூர் அருகே அரசு மருத்துவரை தாக்கிய தலைமை மருத்துவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

18 views

பகவதி அம்மன் கோயில் தீ விபத்து - பார்வையிட்ட அமைச்சர் சேகர்பாபு

பகவதி அம்மன் கோவில் தீ விபத்து குறித்து எட்டு ஊழியர்களிடம் விசாரணை நடத்தியுள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

20 views

மஞ்சளாறு அணையில் தண்ணீர் திறப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணை அதன் முழு கொள்ளளவை எட்டியதால், உபரிநீர் மஞ்சள் ஆற்றில் திறந்து விடப்பட்டிருக்கிறது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.