"கொரோனா 2 -ஆம் அலை தாக்கம் குறைகிறது" - மருத்துவர் வி.கே.பால் எச்சரிக்கை
பதிவு : ஜூன் 05, 2021, 07:38 AM
கொரோனா இரண்டாம் அலை குறைந்து வருவதாகவும், தடுப்பூசி செலுத்துவதிலோ வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதிலோ சுணக்கம் ஏற்பட்டால் நோய்த்தொற்று மீண்டும் அதிகரிக்கும் எனவும் மத்திய சுகாதார துறை தெரிவித்துள்ளது.
கொரோனா இரண்டாம் அலை குறைந்து வருவதாகவும், தடுப்பூசி செலுத்துவதிலோ வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதிலோ சுணக்கம் ஏற்பட்டால் நோய்த்தொற்று மீண்டும் அதிகரிக்கும் எனவும் மத்திய சுகாதார துறை தெரிவித்துள்ளது. 

நாட்டில் நிலவும் கொரோனா சூழல் மற்றும் தடுப்பூசிகளின் நிலை குறித்து மத்திய சுகாதாரத் துறையின் சார்பில் செய்தியாளர் சந்திப்பில் விளக்கப்பட்டது. 

அப்போது பேசிய, நிதி ஆயோக்கின் சுகாதார குழு உறுப்பினர் மருத்துவர் வி கே பால் இரண்டாவது அலையின் தாக்கம் வெகுவாக குறைந்து வருகிறது என்றார். 

உலக அளவில் அதிக மக்கள் தொகையை கொண்ட இந்தியாவில்  தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய கால அவகாசம் தேவைப்படும் என்றார். 

கடந்த மாதத்தைக் காட்டிலும் இந்த மாதம் கூடுதலான தடுப்பூசிகள் கிடைக்கப்பெறும் என தெரிவித்த அவர்  

தொற்று குறைந்து வருவதால், தடுப்பூசி செலுத்துவது மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதில் சுணக்கம் ஏற்பட்டால் நோய் பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்தார். 

இந்தியாவில் 17.2 கோடி பேருக்கு இதுவரை ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாகவும்

60 வயதுக்கு மேற்பட்டவர்களில்,  இதுவரை 43 சதவீதம் பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், 

45 வயதுக்கு மேற்பட்டவர்களில் 35 சதவீதம் பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1834 views

"ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது" - டாஸ்மாக் வழிகாட்டு நெறிமுறைகள்

தமிழகத்தில் 27 மாவட்டங்களில், நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், கடைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன..

69 views

கொடைக்கானலில் ரூ.100ஐ தாண்டிய பெட்ரோல் விலை

தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

35 views

பிற செய்திகள்

"மத்திய பிரதேசத்தில் புதிய வகை கொரோனா" - ம.பி. மருத்துவக் கல்வி அமைச்சர் தகவல்

மத்திய பிரதேச தலைநகர் போபாலில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக அம்மாநில மருத்துவக் கல்வி அமைச்சர் விஸ்வாஸ் சாரங் கூறி உள்ளார்.

6 views

சோனியா காந்தி,ராகுல் காந்தியை இன்று சந்திக்கிறார் ஸ்டாலின்

டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை இன்று சந்திக்க உள்ளார்.

22 views

ஆயிஷா சுல்தானா மீதான தேசதுரோக வழக்கு; கைதானால் இடைக்கால ஜாமீன் தரவேண்டும்

லட்சத்தீவைச் சேர்ந்த ஆயிஷா சுல்தானா, தேசத்துரோக வழக்கில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

17 views

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் - ஹைதராபாத்தில் பிறந்த சத்ய நாதெல்லா

உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவராக, அதன் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றும் சத்ய நாதெல்லா நியமிக்கப்பட்டுள்ளார்.

9 views

பேருந்து, படகு போக்குவரத்து தொடங்கியது...

கேரளாவில் இன்று முதல் பேருந்து, படகு போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

219 views

கோவோவேக்ஸ் இந்தியாவில் எப்போது கிடைக்கும்? இந்தியாவில் விலை என்னவாக இருக்கும்...?

கொரோனாவுக்கு எதிராக மற்றொரு ஆயுதமாக பார்க்கப்படும் கோவோவேக்ஸ் தடுப்பூசி இந்தியாவில் எப்போது கிடைக்கும்...?

187 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.