பள்ளி மாணவர்களுக்கு முட்டையுடன் கூடிய உலர் பொருட்கள் - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
பதிவு : ஜூன் 04, 2021, 05:48 PM
பள்ளி மாணவர்களுக்கு முட்டையுடன் கூடிய உலர் பொருட்கள் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கினால் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் மாணவர்களுக்கு அரசி, பருப்பு ஆகியவற்றுடன் 10 முட்டைகளை வழங்கும்படி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மத்திய உணவு திட்டத்தின் கீழ், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தலா 3100 கிராம் அரிசி, 1200 கிராம் பருப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 4650 கிராம் அரிசி, 1250 கிராம் பருப்பு மற்றும் உலர் உணவு பொருட்கள் வழங்க வேண்டும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த பொருட்கள் அனைத்தும் மாணவர்களுக்கும் முறையாக சென்றடவதை உறுதி செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பிற செய்திகள்

"கோவை மாநகரை புறக்கணிக்கவில்லை" - சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

கோவை மாநகரை எக்காரணத்தைக் கொண்டும் புறக்கணிக்க மாட்டோம் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

0 views

எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். நூதன திருட்டு வழக்கு - அரியானாவில் முக்கிய குற்றவாளி கைது

எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். நூதன திருட்டு வழக்கில், ஆன்லைன் மோசடிகளுக்கு பெயர் போன அரியானா மாநிலம் மேவாத் மாவட்டத்தை சேர்ந்த முக்கிய குற்றவாளியை சென்னை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

30 views

"நிதிநிலை சீராகும் போது தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்படும்" - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

தமிழகத்தின் நிதிநிலை சீரான பிறகு, பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

9 views

போலீசார் தாக்கியதில் மளிகை கடை உரிமையாளர் உயிரிழப்பு

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே போலீசார் தாக்கியதில் மளிகை கடை உரிமையாளர் உயிரிழந்துள்ளார்.

678 views

ஜூன் 28 ம் தேதி முதல் "கீழமை நீதிமன்றங்களில் நேரடி விசாரணை" - உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர்

தமிழகத்தில் ஜூன் 28 ம் தேதி முதல் கீழமை நீதிமன்றங்களில் நேரடி விசாரணை நடத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிவித்துள்ளார்.

10 views

கொரோனா காலத்திலும் தங்க கடத்தல் ஜரூர் - 7.5 கிலோ தங்கம் பறிமுதல்

கொரோனா கால சிறப்பு விமான சேவையிலும் தங்க கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், திருச்சியில் ஏழரை கிலோ தங்கம் சிக்கியுள்ளது.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.