வட்டி விகிதங்களில் மாற்றமில்லை" - ரிசர்வ் வங்கி அறிவிப்பு
பதிவு : ஜூன் 04, 2021, 04:59 PM
வங்கிக் கடன் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது
நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டிற்கான நிதி கொள்கை முடிவுகளை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்தார்.அப்போது வங்கிக் கடன் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை என முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.அதன்படி ரெப்போ ரேட் எனப்படும் ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு வழங்கும் கடன் மீதான வட்டி தற்போதைய 4% ஆகவே தொடரும் எனவும் ரிவர்ஸ் ரெப்போ எனப்படும் வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைக்கும் வைப்புத் தொகைக்கான வட்டி விகிதம் 3.35% ஆகவே இருக்கும் என்றும்  சக்திகாந்த தாஸ் கூறினார்,கொரோனா பெருந்தொற்று பொருளாதாரத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை போக்கி, நீடித்த வளர்ச்சிக்கு எவ்வளவு காலங்கள் தேவையோ அவ்வளவு காலங்கள் நிதி கொள்கையின் ஆதரவு நடவடிக்கைகள் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.நடப்பு நிதி ஆண்டில் மொத்த பொருளாதார வளர்ச்சி 10.5% ஆக இருக்கும் என முன்பு கணிக்கப்பட்ட இருந்த நிலையில் தற்போது பொருளாதார வளர்ச்சி 9.5% ஆகவே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்தல் மற்றும் சுகாதாரப் கட்டமைப்பில் உள்ள இடைவெளியை நிரப்புதல் போன்றவை பெருந்தொற்று ஏற்படுத்தியுள்ள சீரழிவை களையும் என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறினார்

தொடர்புடைய செய்திகள்

கொரோனா தோற்றம் பற்றிய ஆய்வு; வூஹான் ஆய்வுக் கூடத்தில் தோன்றியது - அமெரிக்க ஆய்வுக் கூடம் ரகசிய அறிக்கை

சீனாவின் ஊஹான் ஆய்வுக்கூடத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவியதாக, அமெரிக்காவின் தேசிய ஆய்வுக்கூடம் ஒரு ரகசிய அறிக்கையில் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

419 views

(28/05/2021) ஆயுத எழுத்து : குறையும் கொரோனா...கற்க வேண்டியது என்ன ?

சிறப்பு விருந்தினர்கள் : Dr.ராஜா, மருத்துவர் சங்கம் // ரவீந்திரநாத், மருத்துவர் // திரு நாராயணன், சித்த மருத்துவர் // தேரணி ராஜன், சென்னை ஜிஎச் டீன்

40 views

கொரோனா இரண்டாவது அலை - நாடு முழுவதும் 646 மருத்துவர்கள் பலி

கொரோனா தொற்று பரவல் இரண்டாவது அலையில் நாடு முழுவதும் 646 மருத்துவர்கள் உயிரிழந்து உள்ளதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

18 views

பிற செய்திகள்

"மத்திய பிரதேசத்தில் புதிய வகை கொரோனா" - ம.பி. மருத்துவக் கல்வி அமைச்சர் தகவல்

மத்திய பிரதேச தலைநகர் போபாலில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக அம்மாநில மருத்துவக் கல்வி அமைச்சர் விஸ்வாஸ் சாரங் கூறி உள்ளார்.

6 views

சோனியா காந்தி,ராகுல் காந்தியை இன்று சந்திக்கிறார் ஸ்டாலின்

டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை இன்று சந்திக்க உள்ளார்.

21 views

ஆயிஷா சுல்தானா மீதான தேசதுரோக வழக்கு; கைதானால் இடைக்கால ஜாமீன் தரவேண்டும்

லட்சத்தீவைச் சேர்ந்த ஆயிஷா சுல்தானா, தேசத்துரோக வழக்கில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

17 views

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் - ஹைதராபாத்தில் பிறந்த சத்ய நாதெல்லா

உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவராக, அதன் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றும் சத்ய நாதெல்லா நியமிக்கப்பட்டுள்ளார்.

9 views

பேருந்து, படகு போக்குவரத்து தொடங்கியது...

கேரளாவில் இன்று முதல் பேருந்து, படகு போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

219 views

கோவோவேக்ஸ் இந்தியாவில் எப்போது கிடைக்கும்? இந்தியாவில் விலை என்னவாக இருக்கும்...?

கொரோனாவுக்கு எதிராக மற்றொரு ஆயுதமாக பார்க்கப்படும் கோவோவேக்ஸ் தடுப்பூசி இந்தியாவில் எப்போது கிடைக்கும்...?

187 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.