"12-ம் வகுப்பு தேர்வை நடத்த வேண்டும்" - கமல்ஹாசன் வலியுறுத்தல்
பதிவு : ஜூன் 04, 2021, 04:44 PM
பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்களின் கருத்துக்களை கேட்டு, தமிழக அரசு 12-ம் வகுப்பு தேர்வை நடத்த வேண்டும் என்று, மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில்,சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை மத்திய அரசு ரத்து செய்திருப்பது, மாணவர் நலனுக்கு எதிரானது என, கல்வியாளர்கள் கருதுவதாக கூறியுள்ளார்.

கல்லூரிகளில் சேர, வெளிநாடுகளில் படிக்க, வேலைவாய்ப்பு பெற, 12-ம் வகுப்பு தேர்வு அவசியம் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையோடு தேர்வு அட்டவணையை வெளியிட்டு, தேர்வு நடத்தலாம் என கமல் கூறியுள்ளார். கேரளா மாநிலத்தை முன் உதாரணமாக கொண்டு தமிழகத்தில் தேர்வு நடத்த வேண்டும் என்றும், 12-ம் வகுப்பு தேர்வு நடத்தும் விஷயத்தில் தமிழக அரசு தொலைநோக்குப் பார்வையுடன் முடிவெடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்களின் கருத்துக்களை கேட்டு, தமிழக அரசு 12-ம் வகுப்பு தேர்வை நடத்த வேண்டும் என கமல் வலியுறுத்தியுள்ளார்.

பிற செய்திகள்

தமிழக மின்துறை நிறுவனங்கள் 2018-19-ம் ஆண்டில் ரூ.13,176 கோடி இழப்பு - காரணம் என்ன ?

தமிழக மின்துறை நிறுவனங்கள் மூலம் 2018-19-ம் ஆண்டில் அரசுக்கு 13 ஆயிரத்து 176 கோடி ரூபாய் ஒட்டுமொத்த இழப்பு ஏற்பட்டதாக இந்திய தணிக்கைத் துறை தலைவர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2 views

"கொரோனா தடுப்பு - அலட்சியம் காட்டவில்லை" - எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பதில்

தேர்தல் அறிவிப்புக்கு பின் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் எந்த அலட்சியமும் காட்டவில்லை என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

1 views

ஆளுநர் உரை மீதான விவாதம் : "உறுப்பினர்களின் அறிவுரைகளை ஏற்கிறேன்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய உறுப்பினர்களின் அறிவுரைகளை தான் ஏற்றுக்கொள்வதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

5 views

மளிகை பொருட்கள் விலை உயர்வு : "டீசல் விலை உயர்வே காரணம்"- வியாபாரிகள் கருத்து

உற்பத்தி குறைவால் உப்பு விலை உயர்ந்துள்ளதுடன், மளிகைப் பொருட்களின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

7 views

வியாபாரி முருகேசன் உயிரிழந்த விவகாரம் : ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் - விக்கிரமராஜா

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே போலீசார் தாக்கியதில் உயிரிழந்த, வியாபாரி முருகேசன் என்பவரின் குடும்பத்தினரை, வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

7 views

காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டம் - அமைச்சர் துரைமுருகன் உறுதி

திமுக ஆட்சியில் காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் துரைமுருகன் உறுதியளித்துள்ளார்.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.