மணிகண்டனை கைது செய்ய இடைக்கால தடை
பதிவு : ஜூன் 04, 2021, 11:14 AM
நடிகை சாந்தினி கொடுத்த புகார் தொடர்பாக முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
நடிகை சாந்தினி அளித்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இதனிடையே முன் ஜாமின் கோரி மணிகண்டன் தாக்கல் செய்த மனு, நீதிபதி ஆர். சுப்ரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகை சாந்தினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மணிகண்டனுக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என இடையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ளதாக வாதிட்டார்.

மணிகண்டன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குற்றச்சாட்டுகள் பொய்யானது என்றும், நடிகையின் ஆட்சேபணை மனு கிடைத்துள்ளதாகவும், வழக்கு முடியும் வரை கைது செய்யக்கூடாது என வாதிட்டார்.

காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதாலும், இடைக்கால உத்தரவு வழங்க கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.

இதையடுத்து, முன்னாள் அமைச்சருக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என்ற நடிகையின் மனுவை விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளிவைத்ததோடு அதுவரை மணிகண்டனை கைது செய்யக்கூடாது என இடைக்கால உத்தரவும் பிறப்பித்துள்ளார்.

பிற செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 8,183 பேருக்கு கொரோனா உறுதி

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 8,183 பேருக்கு கொரோனா உறுதி

33 views

கருப்பு பூஞ்சை - தற்காத்துக் கொள்வது எப்படி?

கருப்பு பூஞ்சை - தற்காத்துக் கொள்வது எப்படி?

21 views

பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டார் மதன் - ஜூலை 3ஆம் தேதி வரை அடைக்க உத்தரவு

பப்ஜி மதனை ஜூலை 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து அவர், பூந்தமல்லியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

18 views

குழந்தைகளுக்கு கொரோனா தொற்று சிகிச்சை - வழிகாட்டுதலை வெளியிட்டது ஐ.சி.எம்.ஆர்.

குழந்தைகளுக்கு கொரோனா தொற்று சிகிச்சை அளிப்பது தொடர்பாக ஐ.சி.எம்.ஆர். வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.

11 views

3ஆம் நபர் பெயரில், போலியாக சொத்துப் பதிவு விவகாரம்

தனது சொத்து, வேறொருவர் பெயரில் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், அந்த விற்பனை பத்திரத்தை ரத்து செய்யவும் மரக்காணம் சார் பதிவாளருக்கு உத்தரவிடக் கோரி, பாதிக்கப்பட்ட நில உரிமையாளர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

20 views

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மீது தொகுதி மேம்பாட்டு நிதியில் மோசடி... லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவு

தொகுதி மேம்பாட்டு நிதியில் மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ, தி.நகர் சத்ய நாராயணன் மீது வழக்குப்பதிய கோரிய மனுவுக்கு, லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.